ilakkiyainfo

ilakkiyainfo

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
October 08
15:52 2019

இந்தியாவிடம் அதிகாரபூர்வமாக ஒப்படைக்கப்பட்ட ரஃபால் போர் விமானத்திற்கு இன்று ‘ஷாஸ்த்ரா பூஜை’ செய்தார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

பிரான்ஸிடம் இருந்து இந்தியா வாங்குவதாக ஒப்புக்கொண்ட 36 ரஃபால் போர் விமானங்கள் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அந்த விமானங்களின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழங்கள் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.

பிரான்ஸில் மாரிக்நாக் என்ற இடத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆயுதப் படைகளுக்கான பிரான்ஸ் அமைச்சர் ஃபோரன்ஸ் பார்லி முன்னிலையில் விமானங்கள் ஒப்படைக்கப்பட்டன.

_109153070_rajnath  ரஃபால் போர் விமான டயரில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 109153070 rajnath

பிரான்ஸ் ராணுவத்தின் மூத்த அதிகாரிகளும் தசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

விமானங்களில் ஆர்பி – 001 என்ற இலக்கம் பொறிக்கப்பட்டுள்ளன. அது, இந்திய விமானப்படைத் தளபதி ராகேஷ் பாதூரியாவின் பெயரைக் குறிப்பதாகும். அவர்தான் 60,000 கோடி மதிப்புள்ள இந்த ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முக்கியப் பங்காற்றியவர்.

திங்களன்று மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்ற ராஜ்நாத் சிங், இந்த பயணத்தின் மூலம் தற்போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள தந்திரோபாயக் கூட்டணி மேலும் விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.

முன்னதாக இன்று செவ்வாய்க்கிழமை காலை பிரான்ஸ் அதிபர் மக்ரூங்கை சந்தித்தார் ராஜ்நாத் சிங்.

இந்த சந்திப்பு பயனுள்ள ஒரு சந்திப்பு என ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்த சந்திப்பு இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்தும் எனவும், குறிப்பாக பாதுகாப்பு துறையில் இருநாட்டு உறவுகள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

இந்த கோமாளி சர்வ தேசத்துக்கு எதோ செய்தி சொல்வதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடடான் , ஆனால் வடகிழக்கு [...]

காஷ்மீர் மக்களை உரிமையுடன் இந்த மோடி ( மோசடி ) நடத்த வேண்டும் , இலங்கை தமிழர்கள் கருணை காட்ட [...]

எந்த தை பொங்கலுக்கு , எந்த தீபாவளிக்கு தீர்வு வரும் அதை முதலில் சொல்லுங்க ? புலிகள் [...]

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News