Weather , , 0°C

ilakkiyainfo

ரஜினிகாந்த் அத்திவரதர் தரிசனம்: நள்ளிரவில் வந்தார்

ரஜினிகாந்த் அத்திவரதர் தரிசனம்: நள்ளிரவில் வந்தார்
August 14
12:27 2019

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு நள்ளிரவில் வந்த நடிகர் ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதர் சிலை நாற்பதாண்டுகளுக்கு ஒரு முறை நீரிலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுவது வழக்கம்.

1979ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு, ஜூலை 1ஆம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டது.

வரும் ஆகஸ்ட் 17அம் தேதியன்று அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

_108306893_e3676a23-42a6-4c1e-a1f8-b7fc0e84a672  ரஜினிகாந்த் அத்திவரதர் தரிசனம்: நள்ளிரவில் வந்தார் 108306893 e3676a23 42a6 4c1e a1f8 b7fc0e84a672இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அத்திவரதரைக் காணவரும் பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரித்திருக்கிறது. செவ்வாய்க்கிழமையன்று சுமார் 4 லட்சம் பக்தர்கள் அத்திவரதரைக் காண்பதற்காக வந்தனர்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று நள்ளிரவு சுமார் 12.15 மணியளவில் வரதராஜபெருமாள் கோவிலுக்கு தனது மனைவி லதாவுடன் வந்தார் ரஜினிகாந்த். சிறப்பு வழியில் அழைத்துச் செல்லப்பட்ட அவர் வசந்த மண்டபத்தில் அமர்ந்து அத்திவரதரை தரிசித்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வந்த ரஜினிகாந்தைப் பார்த்து, வரிசையில் காத்திருந்த பக்தர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

_108306895_d97003ec-842e-46f5-880f-4f9def6a130c  ரஜினிகாந்த் அத்திவரதர் தரிசனம்: நள்ளிரவில் வந்தார் 108306895 d97003ec 842e 46f5 880f 4f9def6a130c45வது நாளான இன்றும் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் அத்திவரதரைக் காண வரிசையில் நிற்கின்றனர். காலை முதல் சுமார் 50,000 பக்தர்கள் அத்திவரதரைத் தரிசனம் செய்துள்ளனர்.

நாளை மறுநாளுடன் அதாவது ஆகஸ்ட் 16ஆம் தேதியுடன் அத்திவரதர் தரிசனம் நிறைவுக்குவருகிறது. ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் சிலை மீண்டும் அனந்தசரஸ் குளத்திற்குள் வைக்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுவருகின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்