ilakkiyainfo

ilakkiyainfo

`ரஜினி, நீங்க முதல்வர்னா… நான்தான் எதிர்க்கட்சி!’ – கலகலத்த பாரதிராஜா

`ரஜினி, நீங்க முதல்வர்னா… நான்தான் எதிர்க்கட்சி!’ – கலகலத்த பாரதிராஜா
July 15
17:09 2019

சமீபத்தில் ரஜினியை சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா

முதன்முதலாக ரஜினியை `பைரவி’ படத்தில் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் கலைஞானம். அவருக்கு ஜூலை 15-ம் தேதியான இன்று 90-வது பிறந்தநாள்.

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத கதாசிரியர் கலைஞானத்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்தது. ரஜினி போன்செய்து தன் உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்தார்.

தமிழ் திரைப்பட உலகத்தின் சார்பாக `கலைஞானம் -90′ என்கிற பெயரில் அவருக்கு பாராட்டுவிழா பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்துவருகிறார், இயக்குநர் பாரதிராஜா.

ரஜினியை தன்னுடைய திரைப்பட துவக்கவிழாவுக்கு அழைத்தார் பாரதிராஜா. ரஜினியும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்தார்.

rajani  `ரஜினி, நீங்க முதல்வர்னா... நான்தான் எதிர்க்கட்சி!' - கலகலத்த பாரதிராஜா rajaniஇடையில் அரசியல்ரீதியாக ரஜினி குறித்து பாரதிராஜா முன்வைத்த விமர்சனம் அவரது ரசிகர்கள் மத்தியில் மனக்கசப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திரையுலகம் சார்பில் கலைஞானத்துக்கு வரும் ஆகஸ்ட் மாதம் நடக்க இருக்கும் பாராட்டு விழாவில் ரஜினியை கலந்துகொள்ள பாரதிராஜா அழைத்திருக்கிறார். ரஜினியும் கலந்துகொள்வதாக சொல்லியிருக்கிறார்.

அப்போது, “முதல்ல கலைஞானம் அய்யாவுக்கு பாராட்டுவிழா. அடுத்தது சினிமா உலகத்துல நீங்க செய்த சாதனைக்காக உங்களுக்கும் நிச்சயம் பாராட்டுவிழா நடத்துவேன்.

அரசியலில் கட்சி ஆரம்பிச்சு நீங்க முதல்வரானால், நான்தான் எதிர்க்கட்சி..’ என்று ரஜினியிடம் பாரதிராஜா சொல்லச் சொல்ல `ஹா… ஹா..’ என்று தனது ட்ரேட் மார்க் சிரிப்பைக் கம்பீரமாக உதிர்த்து இருக்கிறார் ரஜினி. பதிலுக்கு பாரதிராஜாவும் தனது கரகரகுரலில் கலகலவென சிரித்து மகிழ்ந்திருக்கிறார்.

kalai  `ரஜினி, நீங்க முதல்வர்னா... நான்தான் எதிர்க்கட்சி!' - கலகலத்த பாரதிராஜா kalai

கலைஞானத்துக்கு விழா எடுப்பது குறித்து இயக்குநர் பாரதிராஜாவிடம் பேசினோம்.“சினிமாவின் மூத்த கலைஞரான கலைஞானம் ஐயாவுக்கு பாராட்டு நடத்த வேண்டியது தமிழ் சினிமாவின் கடமை. முதலில் ரஜினியை `பைரவி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் அவர்.

அதனால் பாராட்டு விழாவில் ரஜினி கலந்துகொள்வதே பொருத்தமாக இருக்கும். ரஜினியின் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறோம்” என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2019
M T W T F S S
« Jul    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Latest Comments

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இறைவனின் துணையோடு நிலவை பிளந்த நபிக்கு அதே இறைவனின் துணையோடு ஒட்டவைக்க முடியாதா? ?? இந்த உலகத்தையே நாம்தான் படைத்தோம்னு சொல்லும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News