ilakkiyainfo

ilakkiyainfo

ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் வெளியான ( சிசிடிவி காட்சி)

ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் வெளியான ( சிசிடிவி காட்சி)
December 25
22:50 2016

 

சர்­வ­தேச விமான நிலை­ய­மொன் றின் கத­வு­களை உடைத்­து­க்கொண்டு கார் ஒன்று வேக­மாக விமான நிலை­யத்­துக்குள் நுழைந்த சம்­பவம் ரஷ்­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

கஸாந் நக­ரி­லுள்ள கஸான் சர்­வ­தேச விமான நிலை­யத்தின் கண்­ணாடி கத­வு­களை தகர்த்­துக்­கொண்டு இக்கார் உள்ளே நுழைந்­தமை பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

21424airport-25  ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் வெளியான ( சிசிடிவி காட்சி) 21424airport 25விமான நிலைய கட்­ட­டத்­துக்குள் நுழைந்­த­வுடன் கார் நிறுத்­தப்­ப­ட­வில்லை. அந்­நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்­டி­ருந்தார்.

பின்னர் விமான நிலை­யத்­தி­லி­ருந்து பய­ணிகள் வெளி­யேறும் பகு­தியின் கத­வையும் அக்கார் தகர்த்­தது. அவ்­வே­ளையில் பொலி­ஸாரால் அக்­காரை வழி­ம­றித்து நிறுத்த முடிந்­தது.

Kazan-Airport  ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் வெளியான ( சிசிடிவி காட்சி) Kazan Airportஅதன்பின் காரின் சார­தி­யான ரஸ்லன் நுர்ட்­டின்வோ (40) கைது செய்­யப்­பட்டார். அவர் மது போதையில் இருந்தார் என ரஷ்ய பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இது தொடர்­பாக நீதி­மன்றில் நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது, தனது காதலி உள்ளூர் ரயில் நிலை­யத்தை வந்­த­டை­ய­வி­ருந்­த­தா­கவும் அவரை வர­வேற்­ப­தற்குச் செல்­வ­தற்­காக விமான நிலை­யத்­துக்கு ஊடாக தான் காரை செலுத்­தி­ய­தா­கவும் கூறி­னாராம்.

மேற்­படி சம்­ப­வத்தால் எவரும் காய­ம­டை­ய­வில்லை. ஆனால், நீர்­வி­நி­யோக குழாய் உடைந்­ததால் கட்­ட­டத்­துக்குள் தண்ணீர் வழிந்­தோடி வெள்ளம் ஏற்­படத் தொடங்­கி­யது.

ரஸ்லன் நுர்ட்­டின்­வோ­வுக்கு 15 நாள் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியமை, கட்டடங் களை சேதப்படுத்தியமை தொடர்பாக மேலும் இரு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

நாட்டில போர் நடந்துகொண்டிருந்து போது தமிழக சினிமாக்கார்களும், போலி தமிழக சில்லறை அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ, சீமான்: திருமாவளவன்,தியாகு.தாமரை, .... [...]

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

இலங்கை பத்திரிகைகள்

English News