ரஷ்ய முன்னாள் பிரதமர் மிக்கைல் காஸ்யனோவ் பிரித்தானிய ஊடகவியலாளருடன் உள்ள ஆபாச வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் முன்னணி அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் மிக்கைல் காஸ்யனோவ்.
ரஷ்ய மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2000 முதல் 2004ம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக இருந்துள்ளார்.
மேலும் புடினுக்கு பின் ரஷ்யாவின் அதிபராக வாய்ப்புள்ள அரசியல் தலைவர்களில் ஒருவராகவும் அவர் உள்ளார்.
இந்நிலையில் இவரும் பிரித்தானியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் சமூக ஆர்வலருமான நடாலியா பெலிவினும் பாலியல் உறவு வைத்துகொள்வது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்துக்கு ஆதரவான என் டிவியில் இந்த வீடியோ ஒளிபரப்பாகியுள்ளது.
மாஸ்கோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் தங்கியிருந்தபோது ரகசிய காமெரா மூலம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விடியோவில் உள்ள பெண் ஊடகவியலாளர் நடாலியா தற்போதைய ரஷ்ய அரசாங்கத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை எடுத்தது யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகாத நிலையில் புடினின் ஆதரவாளர்கள் மூலமே இந்த விடியோ கசிந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக அரசியல் செய்பவர்களை அழிப்பதற்கு மேற்கொள்ளப்படும் சதிதான் இது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ தொடர்பாக மிக்கைல் இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.
இதற்கிடையே பிரித்தானிய குடியுரிமை பெற்ற நடாலியாவை இழிவுப்படுத்தும் செயல் இது என்று ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Grainy bedroom footage purports to show former Kremlin prime minister Mikhail Kasyanov, 58, with playwright and activist Natalya Pelevine, 39, in a Moscow apartment
The video also attacks and humiliates UK citizen Pelevine, pictured right, who has been a constant critic of the Russian leadership, especially over its actions in Chechnya and lack of democracy
Married Kasyanov is purportedly with his secret lover – an activist in his RPR Parnas party who also had a role as his aide – with partially-pixelated scenes of nudity and intimacy
A naked man, thought to be former Kremlin prime minister Mikhail Kasyanov, stands naked next to a woman laying on the bed
Pelevine, thought to be pictured standing up. has been active in the Russian opposition for around a decade. Soviet-born, her parents emigrated to Britain before the collapse of the USSR when she was a child
Kasyanov is thought to be one of the few of Putin’s rivals who could seriously challenge the current President