ilakkiyainfo

ilakkiyainfo

ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீகூட தரவில்லை..நான் செத்தேயிருப்பேன்: ஒ.பி. ஜெய்ஷா!

ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீகூட தரவில்லை..நான் செத்தேயிருப்பேன்:   ஒ.பி. ஜெய்ஷா!
August 22
20:24 2016

ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தின் போது நான் செத்துவிடுவேன் என நினைத்ததாக இந்திய மாரத்தான் ஓட்டப்பந்தய வீராங்கனை ஒ.பி. ஜெய்ஷா அதிர்ச்சிகர தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

மொத்தம் 42 கிலோ மீட்டர் தொலை தூரம் கொண்ட மாரத்தான் ஒட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தண்ணீர், குளுகோஸ், பிஸ்கட் மற்றும் புத்துணர்வு அளிக்கக் கூடிய பொருட்களை அளிக்க வேண்டியது அந்தந்த நாடுகளின் கடமையாகும்.

வீரர்கள் மாரத்தான் பந்தயத்தில் ஓடும் போது இரண்டரை கிலோமீட்டருக்கு ஒரு இடத்தில் வீரர்களுக்கு தண்ணீர் மற்றும் குளுக்கோஸ் போன்ற புத்துணர்வு அளிக்கும் பொருட்கள் வைப்பதற்கென்று ரியோ ஒலிம்பிக் கமிட்டி இடம் ஒதுக்கியிருந்தது.

ஆனால் வீரர்களுக்கு அந்தந்த நாட்டை சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு கமிட்டிதான் இந்த பொருட்களையெல்லாம் வழங்க வேண்டும்.

அதை தான் ஒலிம்பிக்கில் பங்கேற்ற எல்லா நாடுகளும் தங்கள் நாட்டு மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர்களுக்கு தேவையான புத்துணர்ச்சி பொருட்களை வழங்க ஏற்பாடு செய்திருந்தன.

இந்தியாவை சேர்ந்த ஒ.பி. ஜெய்ஷா ரியோ ஒலிம்பிக்கில் மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளும் போது வீரர்களுக்கு புத்துணர்வு பொருட்களான தண்ணீர், பிஸ்கட் மற்றும் குளுக்கோஸ் போன்ற பொருட்கள் வழங்க வேண்டிய இந்திய ஒலிம்பிக் சங்கம் அதை செய்யவிலை.

201608221925376381_No-Water-Provided-By-Indian-Officials-At-Rio-Says-Marathon_SECVPF.gif  ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீகூட தரவில்லை..நான் செத்தேயிருப்பேன்:   ஒ.பி. ஜெய்ஷா! 201608221925376381 No Water Provided By Indian Officials At Rio Says Marathon SECVPFமாரத்தான் பந்தயத்தில் ஜெய்ஷா ஓடும் போது இந்தியாவிற்கு என்று ஒதுக்கப்பட்ட புத்துணர்வு பொருட்கள் வைக்கும் இடத்தில் இந்தியாவின் தேசிய கொடியும் இந்தியாவின் பெயரும் மட்டுமே இருந்ததாக ஜெய்ஷா கூறினார்.

இதனால் ஜெய்ஷாவிற்கு தண்ணீர் போன்ற எந்த புத்துணர்வு பொட்ருட்களும் கிடைக்கவில்லை.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிப்படி ஒரு வீராங்கானை வேற்று நாட்டினரிடமிருந்து எந்த உணவு பொருட்களோ அல்லது புத்துணர்வு பொருட்களோ வாங்க கூடாது அதை மீறினால் அந்த வீரரோ அல்லது வீராங்கனையோ அந்த போட்டியில் பங்கு பெறும் தகுதியை இழப்பார்.

அதானால் ஒ.பி. ஜெய்ஷா போட்டியில் கலந்து கொள்ளும் போது எட்டு கிலோ மீட்டருக்கு ஒருமுறைதான் தண்ணீர் கிடைத்துள்ளது அதுவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த இடத்திலிருந்து தான் கிடைத்துள்ளது.

இதனால் ஜெய்ஷாவால் போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவிலை மேலும் போட்டியின் எல்லையை எட்டும்போது அவர் மயங்கி விழுந்துவிட்டார்.

jaiissaa  ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீகூட தரவில்லை..நான் செத்தேயிருப்பேன்:   ஒ.பி. ஜெய்ஷா! jaiissaaமயங்கி விழுந்த அவரை காப்பாற்ற கூட இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை சேர்ந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மேலும் இந்திய ஒலிம்பிக் அதிகாரிகள் ரியோவிற்கு ஒரு சுற்றுலா போல சென்றுள்ளனர் என்றும் அங்கு இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தேவையானதை கவனிக்காமல்   செல்ஃபி எடுப்பதிலும்  அங்குள்ள இடங்களை சுற்றி பார்ப்பதிலும்தான்  அதிக நேரங்களை செலவிட்டனர் என்றும் அவர்கள் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது.

ஏற்கெனவே விமான பயணத்தின்போது இந்திய வீராங்கனை டூட்டி சந்த் வீரர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.

மேலும் சில வீரர் வீராங்கனைகள் இந்திய ஒலிம்பிக் அதிகாரிகளின் மோசமான நடவடிக்கைகள் குறித்து குறை கூறியுள்ளனர்.

இந்திய ஒலிம்பிக் கமிட்டி அதிகாரிகளின் இந்த செயல் இந்திய ஒலிம்பிக் வீரர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டிற்காக விளையாடும் வீரர் வீராங்கனைகளுக்கு தேவையான மதிப்பும் மரியாதையையும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அளிக்கிறதா என்ற பெரிய கேள்விகுறி எழுந்துள்ளது.

வீரர்களின் திறமை மட்டுமின்றி அவர்களுக்கு நல்ல ஊக்குவிப்பும் இருந்தால்தான் அவர்களால் சிறப்பாக செயல்பட முடியும் ஆனால் அவர்களுக்கு ஊக்கமளிக்க வேண்டிய அதிகாரிகள் அதை செய்யாமல் தவறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

Very welldone, keep it, if they touch Hindu girls next time cut their hands such [...]

இலங்கை பத்திரிகைகள்

English News