ilakkiyainfo

ilakkiyainfo

ரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவர

ரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவர
October 25
11:41 2017

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது.

நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் ஓடிக்கொண்டு இருக்கிறது.

மெர்சல் படத்தில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பணமதிப்பு நீக்கம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி குறைகூறி இருப்பதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது. அந்த கட்சி தவிர எதிர்க்கட்சிகள் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

மெர்சல் பட பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்தார். டாக்டர்களும் மருத்துவத்தை குறைகூறி இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுபோன்ற காரணங்களால் மெர்சல் படம் கடந்த ஒரு வாரமாக திரைஉலகிலும், அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மெர்சல் படத்தில் ஆட்சேபகரமான வசனங்கள் நீக்கப்படுமா? என்ற நிலையும் ஏற்பட்டது. இறுதியில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கம் இல்லை என்று பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.

201710251408207834_Mersal-record-collection-near-to-Rs200-Cr_SECVPF.gif  ரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவர 201710251408207834 Mersal record collection near to Rs200 Cr SECVPF

மெர்சல் சர்ச்சையில் சிக்கிய நிலையில் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடியது. தமிழில் வெளியான இந்த படம் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல் நாளில் மட்டும் மெர்சல் படம் ரூ.22 கோடி வசூலித்து முந்தைய சாதனைகளை முறியடித்தது.

ஒரு வாரம் முடிந்த நிலையில் மெர்சல் படம் உலகம் முழுவதும் ரூ.160 கோடி முதல் ரூ.170 கோடி வரை வசூல் சாதனை படைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

படத்தை ரூ.80 கோடி செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தயாரிப்பு செலவு அதிகரித்து ரூ.130 கோடியை தொட்டது. ஒரு வாரத்தில் தயாரிப்பு செலவை தாண்டி படம் வசூலித்து இருக்கிறது.

தமிழில் ரஜினி அல்லாத மற்ற நடிகர்களின் படவசூலை மெர்சல் முறியடித்துள்ளது. வெளிநாடுகளில் அஜித்தின் விவேகம் படத்தை விட மெர்சல் படம் அதிக வசூல்பெற்று இருக்கிறது.

சிங்கப்பூரிலும், இங்கிலாந்திலும் கபாலி படத்தின் வசூலை மெர்சல் நெருங்கியது. 2-வது வார இறுதியில் மெர்சல் படம் ரூ.200 கோடி வசூலிக்கும் என்று திரைஉலக பிரமுகர்கள் கருத்து தெரிவித்தனர்.

திரைஉலக பிரமுகர் ஒருவர் கூறுகையில், அரசியல் வதிகளின் சர்ச்சைக்குரிய கருத்துக்களாலும், எதிர்ப்புகளாலும் மெர்சல் படத்துக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. இதனால் தான் படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News