ilakkiyainfo

ilakkiyainfo

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே
June 30
20:26 2018
மாஸ்கோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன. நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், அர்ஜெண்டினாவை வீழ்த்தியது.
201807010125329328_1_urugoal1._L_styvpf ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே 201807010125329328 1 urugoal1
இந்நிலையில், இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல், முன்னாள் சாம்பியனான உருகுவேவை எதிர்கொண்டது. இதில் தோல்வியடையும் அணி தொடரைவிட்டு வெளியேறும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது.
தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் உருகுவே 1-0 என முன்னிலை பெற்றது.
201807010125329328_2_porgoal1._L_styvpf ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே 201807010125329328 2 porgoal1
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் போர்ட்டுகல் வீரர் பெப்பே கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது.
அதன்பின் 62-வது நிமிடத்தில் உருகுவே வீரர் எடின்சன் கவானி கோல் அடித்தார். இது இந்த ஆட்டத்தில் அவர் அடித்த இரண்டாவது கோலாகும். இதனால் உருகுவே அணி மீண்டும் 2-1 என முன்னிலை பெற்றது.
201807010125329328_3_urugoal2._L_styvpf ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவை தகர்த்தது உருகுவே 201807010125329328 3 urugoal2
அதைத்தொடர்ந்து இறுதிவரை மேற்கொண்டு கோல் அடிக்கப்படாததால் உருகுவே அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
முன்னதாக நடைபெற்ற மற்றொரு நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ் அணி, அர்ஜெண்டினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முதல் காலிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – உருகுவே அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

எனக்கு இந்த மாத்திரை வேண்டும் [...]

டேய் சாஸ்திரி இது M16 அல்ல MI6 ( Military Intelligence, Section 6) , [...]

Pon

ஈழத்து போரை பல தேசங்களின் உதவியோடு கோழைகள் போல் போர் புரிந்து வென்ற சிங்களப் படிக்கு இன்னும் 9 [...]

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

இலங்கை பத்திரிகைகள்

English News