ilakkiyainfo

ilakkiyainfo

லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கு!! : எதிரி13 வருடங்களின் பின் விடுதலை..!!

லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கு!! : எதிரி13 வருடங்களின் பின் விடுதலை..!!
November 01
21:17 2018

லக்ஸ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் சிரேஸ்ட  சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து  இரண்டாம் எதிரியான இசிதோர்  ஆரோக்கிய நாதன் கொழும்புமேல் நீதிமன்ற  நீதிபதி  பிரதீப்  கெட்டியாராட்சி இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டார்.

2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த தற்பொழுது மரணமடைந்துள்ளவர்களான வேலுப்பிள்ளை பிரபாகரன் பொட்டு அம்மான் அல்லது சிவசங்கர் வினோதன் அல்லது சாள்ஸ் மாஸ்டர் கோமதிமதி மேகலா ஆகியோரிருடன’ இணைந்து சதிசெய்து முன்னாள் வெளிவிவகார அமைச்சா லக்ஸ்மன் கதிர்காமரைகொலை செய்தமைக்கு உடந்தையாக செய்ற்பட்டதாக  பயங்கரவாதச் தடைச்சட்டதின் கீழ் சகாதேவன்  ஆரோக்கிய நாதன் ஆகிய இருவருக்கு எதிராகபயங்கரவாதத் தடைசட்டத்தின் கீழ் கொழும்புமேல் நீதிமன்றில் ஜந்துகுற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு 2008ம் ஆண்டுகொழும்புமேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது;

இரண்டாம் எதிரியான இசிதோர் ஆரோக்கியநாதனுக்குஎதிராகமேல் நீதிமன்றத்தில் சட்டமாஅதிபரினால் தாக்கல் செய்யப்பட்டவழக்குவிசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டபோதுஅரசதரப்பில் 15பேர்; சாட்சியமளித்தனர்.

மேலும் அரசதரப்பில் இரண்டாம் எதிரியால் வழங்கப்பட்டகுற்ற  ஒப்புதல் வாக்கு மூலம்  நீதிமன்றினால் உண்மை விளம்பல் விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டு அவ் வாக்கு மூலம் சுயமாக வழங்கப்படவில்லை எனவே அதனை அரசசான்றாக எடுத்துக் ஏற்றுக்கொள்ள முடியாதென மேல்  நீதிமன்றம் 03.10.2018 அன்று நிராகரித்த நிலையில் இந்தவழக்கு இன்றையதினம் மேலதிகவிசாரணைக்கு வந்தவேளையில் ஏதிரியின் தரப்பில் ஆஐரான   சிரேஸ்ட சட்டத்தரணி கே. வி.  தவராசா  தனது  வாதத்தில் இந்தவழக்கில் அரசதரப்பில் காலஞ் சென்றமுன்னாள் வெளிவிவகார  அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரின் பாதுகாப்புபிரிவைச் சேர்ந்தபடையினரும் பொலிஸ் உத்தியோகத்தவர்களும் அரசதரப்பில் சாட்சியமளித்திருந்தனர் .

ஆனால் அவர்களுடைய சாட்சியங்களில் இரண்டாம் எதிரிக்கெதிராக எந்த விதசான்றுகளும் முன்வைக்கப்படாதது மட்டுமன்றி இந்தசாட்சியங்களில் உள்ள பலமுரண்பாடுகளையும் நீதிமன்றின் கவனத்துக்குகொண்டுவந்திருந்தார்.

மேலும் தனது வாதத்தில் இந்த கொலைசம்பவம் அதியுட்ச பாதுகாப்பு வளையத்தில் நடந்தபோதிலும் நேரடியான கண்கண்ட சாட்சியங்ளோ சூழ்நிலைச் சான்றுகளோ  அரசதரப்பினால் இந்தவழக்கில் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் அரசதரப்பால் முக்கிய சான்றாக முன்வைக்கப்பட்ட ஒரே  சான்றான குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும் இந்நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் எதிரியை விடுதலை செய்யுமாறு தனதுவாதத்தை முன்வைத்தார்.

இரு தரப்பினரதும்; வாதபிரதி வாதங்களையடுத்து கொழும்புமேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் கெட்டியாராட்சி  சிரேஸ்ட சட்டத்தரணி கே;வி. தவராசாவின்; சட்டவாதத்தைஏற்று இரண்டாம் எதிரிஆரோக்கிய நாதனை விடுதலைசெய்து  தீர்ப்புவழங்கினார்.

இந்தவழக்கில் சட்டமா அதிபர் சார்பில் சிரேஸ்ட அரச சட்டத்தரணி  மொகமட் நவாவி ஆஜரானதுடன் இரண்டாம் எதிரியின் சார்பில் சட்டத்தரணி செல்வி தர்மஐhதர்மராஐாவின் அணுசரனையில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி. தவராசாஆஐரானார்.

45254538_10217369966660564_7127290033467293696_n  லக்ஸ்மன் கதிர்காமர் கொலைவழக்கு!! : எதிரி13 வருடங்களின் பின் விடுதலை..!! 45254538 10217369966660564 7127290033467293696 n

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Latest Comments

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

மிக சரியான நடவடிக்கை , பாசிச மேற்கு நாடுகளை விளக்கி வைக்க வேண்டும். [...]

இலங்கை பத்திரிகைகள்

English News