லண்டன் பாலத்தில் பரபரப்பு – கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலி

இங்கிலாந்தின் லண்டன் பாலத்தில் சென்ற மக்கள்மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் பாலத்தில் இன்று சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம நபரை பாலத்தின் அருகே துப்பாக்கியால் சுட்டு மடக்கிப் பிடித்தனர்.
கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், மர்ம நபர் கத்தியால் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து லண்டன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment