ilakkiyainfo

ilakkiyainfo

3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெ

3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெ
January 10
07:45 2017

டுத்தடுத்த ஹிட். அதுவும் மாஸ் ஹீரோக்களுடன். செம பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் பியூட்டி சீக்ரெட்ஸை பகிர்ந்துகொள்கிறார், அவர் அம்மா மேனகா!

”கீர்த்தி இப்போ கோலிவுட்டின் செல்ல ஹீரோயின். அம்மாவுக்கு சந்தோஷமா?”

”நிச்சயமா. மேனகாவோட பொண்ணு கீர்த்தின்னு சொன்ன பலரும் இப்போ, கீர்த்தியோட அம்மா மேனகான்னு சொல்றதைக் கேட்டு ரொம்பவே பெருமைப்படுறேன்.

நான் தமிழ்ல நடிச்ச ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ படம் ரிலீஸ் ஆனப்போ, என் அப்பா என்னைக் கார்ல கூட்டிட்டுப்போய், பல தியேட்டர் வாசல்களிலும் இருந்த என்னோட கட் அவுட், போஸ்டரை எல்லாம் பார்த்து ரசிச்சாரு.

ஆனா, அப்போ எனக்கு அது பெருசா தெரியல. ஆனா, இப்போ என்னோட பொண்ணு படங்களையும், அவளோட ஃப்ளக்ஸ், போஸ்டர் எல்லாம் பார்க்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போதான் என் அப்பாவோட உணர்வுகளை என்னால புரிஞ்சிக்க முடியுது.”

”நீங்க கேரளாவுல, கீர்த்தி சென்னையில. பொண்ணை மிஸ் பண்றீங்களா?”

”ரொம்பவே. ஆனா, ஒவ்வொருத்தருக்கும் சுய அடையாளம் மிக முக்கியம். ஒரு நடிகையா தன்னை நிலைநிறுத்தவும், அந்தத் துறையில் முன்னுக்கு வர்றதுக்காகவும், கீர்த்தி சென்னையில அவ பாட்டி வீட்டுல இருக்கா. நானும் கணவரும் இங்க கேரளாவுல இருக்கிறோம். போன்ல பேசுறப்போ நிறைய ஹெல்த் டிப்ஸ், பியூட்டி டிப்ஸ் சொல்லிட்டே இருப்பேன்.”

_08q1563_16508  3 லிட்டர் தண்ணீர், 2 மணி நேர டயட், ஆயுர்வேதக் குளியல்..! கீர்த்தி சுரேஷ் சீக்ரெ 08Q1563 16508 e1484016544542

”கீர்த்தி என்னென்ன பியூட்டி கேர் ஃபாலோ பண்றாங்க?” 

”நான் சினிமாவுக்கு வந்த புதுசுல எனக்கு ஹெல்த் கேர், மேக்கப் பத்தி எதுவும் தெரியாது. அதையெல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்தது கே.ஆர்.விஜயா ஆன்ட்டி, புஷ்பலதா ஆன்ட்டி ரெண்டு பேரும்தான்.

கூடவே, கேரளாவுல வீட்டுல இருந்தே செய்துக்கக்கூடிய ஆயுர்வேத முறையிலான உடல்நலப் பராமரிப்புகளைதான், நான் ஹிரோயினா இருந்த காலத்துல இருந்து இப்போ வரைக்கும் கடைப்பிடிச்சுட்டு இருக்கேன். என் பொண்ணுங்களையும் கடைப்பிடிக்க வெச்சுட்டு இருக்கேன். ரொம்ப சிம்பிள்தான் அது.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்கணும். புரோட்டின் உணவுகள் அதிகமாச் சாப்பிடணும். வெயில்ல போயிட்டு வந்தா புளிச்ச தயிரை உடம்புல அப்ளை பண்ணி கொஞ்ச நேரம் கழிச்சுக் குளிக்கணும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எண்ணெய் தேய்ச்சுக் குளிக்கணும். தோல் சுருக்கம் வந்திடும் என்பதால, எக்காரணம் கொண்டும் வெந்நீர்ல குளிக்கக் கூடாது. ரொம்ப குளிர்னா, வெதுவெதுப்பான நீர்ல குளிச்சுக்கலாம்.

பால், சீனி, சர்க்கரைனு வெள்ளை நிற உணவுப் பொருட்கள் சாப்பிடக் கூடாது. தினமும் தவறாம, காலை சூரியன் நல்லா உதிக்கிறதுக்குள்ள யோகா செய்துடணும்.

இதோட, மாதம் தோறும் கீர்த்திக்கு கேரளாவுல இருந்து ஆயுர்வேத மூலிகைகளை அனுப்பி வைப்பேன். இப்படி எளிமையான, ஆயுர்வேத, பாட்டி வைத்திய முறைகள்தான் கீர்த்தியோட பியூட்டி கேர் விஷயங்கள். இதையெல்லாம்  ஃபாலோ பண்றதாலதான் அடுத்தடுத்து பிஸியா வொர்க் பண்ணிட்டு இருந்தாலும், அவளால கூலா இருக்க முடியுது.”

”கீர்த்தி, தனக்கு டயட் கன்ட்ரோல் கிடையாதுன்னு சொல்றாங்களே..?” 

”உண்மைதான். கீர்த்திக்கு சாப்பிடுறதுன்னா ரொம்பவே பிடிக்கும். ரெண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏதாச்சும் சாப்பிட்டுகிட்டே இருப்பா.

குறிப்பா, சாக்லெட் அதிகமா சாப்பிடுவா. வாழை இலை சாப்பாடுன்னா, ஒரு பிடி பிடிச்சுடுவா. அடிக்கடி சாப்பிட்டாலும், ஆரோக்கியமான உணவுகள்தான் சாப்பிடுவா. குறிப்பா, எங்க வீட்டுல யாருமே வொயிட் ரைஸ் தொடமாட்டோம்.

பிரவுன் ரைஸ்தான் சாப்பிடுவோம். அதோட, தினமும் யோகா, ஜிம்னு தவறாம கடைப்பிடித்து வெயிட் போடாம பார்த்துக்குவா. ஒவ்வொரு வேளை சாப்பிட்டு முடிச்சதும் 20 நிமிஷம் நடைப்பயிற்சி செய்வா.”

”அக்கா, தங்கச்சி ரெண்டு பேரும் வீட்டுல எப்படி?”

”சின்ன வயசுல இருந்து எப்பப் பார்த்தாலும் பெரியவ ரேவதியும், சின்னவ கீர்த்தியும் சண்டை போட்டுட்டேதான் இருப்பாங்க. ஆனா, இப்போ ஒண்ணா இருக்கிற நேரமெல்லாம் கொஞ்சிக்கிட்டேதான் இருக்காங்க.

எனக்கே ஆச்சர்யமா இருக்கு. ரெண்டு பேரையுமே ‘நாம எந்த நாட்டுக்கு ராஜாவா இருந்தாலும், வீட்டுக்கு சாதாரண மனுஷங்கதான்’னு சொல்லிச் சொல்லித்தான் வளர்ப்பேன்.

அதனால, அவங்க வேலைகளையும், வீட்டு வேலைகளையும் சமத்தா செய்வாங்க. குக்கரி ஷோதான் அதிகமா பார்ப்பாங்க. பார்த்துட்டு போட்டி போட்டு, சூப்பரா சமைப்பாங்க. நாங்க சைவமா இருந்தாலும், நான் வெஜ் ரெசிப்பியை பார்த்து, அதையே சைவத்துல ட்ரை பண்ணி சமைச்சு அசத்துவாங்க!”

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2017
M T W T F S S
« Mar    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

Its all lies and fake stories about Mr. Kim , he is a great person [...]

நாதாரி பயல் தனுஷ் , சமூக சீர்கேட்டுக்கு இவனின் படம் தான் காரணம், பெண்களை இழிவாக தன படங்களில் [...]

வளி மண்டலம் உருவாகும் முன்பே விழி அசைவில் பெண்களை மயக்கிய தமிழன் [...]

அட பாவமே [...]

Very welldone, keep it, if they touch Hindu girls next time cut their hands such [...]

இலங்கை பத்திரிகைகள்

English News