ilakkiyainfo

ilakkiyainfo

‘லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது”: லெபனான் ஷியா தலைவர்

‘லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது”: லெபனான் ஷியா தலைவர்
November 11
02:59 2017

லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி செளதி தலைநகரான ரியாத்தில் தனது பதவி விலகலை அறிவித்து சில நாட்கள் கடந்த நிலையில், செளதி அரேபியா லெபனான் நாட்டுக்கு எதிராகப் போரை அறிவித்துள்ளதாக லெபனானின் பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா ஷியா அமைப்பு தலைவர் ஹசன் நஸ்ரல்லா குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாத் ஹரிரியின் விருப்பத்திற்கு மாறாக செளதி அவரை வைத்துள்ளதாக ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார்.

லெபனானுக்கு எதிராக இஸ்ரேலை செளதி தூண்டுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பலம் வாய்ந்த ஹெஸ்புல்லா அமைப்பு இரானுடன் கூட்டாளியாக உள்ளது.

ரியாத்தில் இருந்து ஒளிபரப்பான தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய லெபனான் பிரதமராக இருந்த சாத் ஹரிரி, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறினார்.

_98707283_c36c5d1c-810a-4462-b82f-bc18f66687b8  'லெபனானுக்கு எதிராக செளதி போரை அறிவித்துள்ளது'': லெபனான் ஷியா தலைவர் 98707283 c36c5d1c 810a 4462 b82f bc18f66687b8செளதி அரசரை சந்தித்த சாத் ஹரிரி

இந்நிலையில்,சாத் ஹரிரி நாடு திரும்ப வேண்டும் என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சாத் ஹரிரி செளதியில் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், செளதி விடுக்கும் உத்தரவைச் செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

லெபனான் அதிபர் மைக்கேல் அவுன், சாத் ஹரிரியின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ளவில்லை.

”லெபனானுக்கு எதிராகவும், ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராகவும் செளதியும், செளதி அதிகாரிகளும் போரை அறிவித்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது” என ஹசன் நஸ்ரல்லா கூறியுள்ளார்.

லெபனானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட, இஸ்ரேலுக்கு பில்லியன் கணக்கிலான பணத்தை கொடுக்க செளதி தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

சிவா முருகுப்பிள்ளை சொல்கிறார். “பல இடங்களில் திலீபனின் கொலை வெறி செயற்பாடுகளை பதிவு செய்து வந்திருக்கின்றேன். மீண்டும் பதிவு செய்கின்றேன். ரெலோவை [...]

ஆனந்திக்கு விசா கொடுத்து தானே உள்ளார்கள் , காதலர்களை பிரித்த பாவம் இந்தியாவை சும்மா விடாது. [...]

Traitor Mano Kanesan , since when have new job as Chicks Broker ? didnt he [...]

தற் போது உள்ள அரசு நாட்டுக்கு மட்டுமல்ல முழு ஆசியாவுக்கே துரோகம் செய்கின்றது , [...]

தேச துரோகம் ( முன்னைய அரசை கவிழ்க்க சாதி செய்தது ) , செய்து வந்த இவன் இப்ப [...]

இலங்கை பத்திரிகைகள்

English News