ilakkiyainfo

ilakkiyainfo

வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது!

வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது!
January 10
22:20 2018

பிர­பல பாடகர் விக்டர் ரத்­னா­யக்­கவின் மனை­வி­யான ஹஷினி ரத்­னா­யக்க நேற்று கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தங்­காலை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

முறைப்­பாடு தொடர்­பாக வாக்­கு­மூலம் அளிப்­ப­தற்கு நேற்­றுக்­காலை சட்டத் தர­ணி­யொ­ரு­வ­ருடன் தங்­காலை தலைமை பொலிஸ் நிலை­யத்தின் விசேட குற்ற விசா­ரணை பிரி­வுக்கு சென்­றி­ருந்த போதே வாக்­கு­மூலப் பதிவின் பின்னர் அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தங்­காலை நக­ரி­லுள்ள அரச வங்கி ஒன்றில் ஹஷினி ரத்­னா­யக்க (33) கட­மை­யாற்­றிய போது, 2012. 11. 14 ஆம் திகதி முதல் 2016. 04. 22 ஆம் திக­தி­வ­ரை­யான காலப்­ப­கு­தி­யினுள் வங்­கியில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் 9 இலட்­சத்து 89 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆபரணங்கள் தொடர்­பான மோசடி குறித்து அவ்­வங்­கியின் முகா­மை­யா­ளரால் தங்­காலை பொலிஸ் நிலை­யத்தில் முறைப்­பாடு செய்யப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய, குறித்த முறைப்­பாடு தொடர்பில் தேடப்­பட்­டு­வந்த சந்­தேக நப­ரான ஹஷினி ரத்­னா­யக்க நேற்றுக் காலை சட்டத்தரணியுடன் தங்­காலை பொலிஸ் நிலை­யத்தில் வாக்­கு­மூலம் பதி­வ­தற்­காக சென்­றுள்ளார்.

சம்­பவம் குறித்து வாக்­கு­மூலப் பதி­வு­களை மேற்­கொண்­டதன் பின்னர் அவர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் நேற்­றை­ய­தினம் தங்­காலை பொலிஸாரால் கைது செய்­யப்­பட்ட அவர், தங்­காலை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட­தை­ய­டுத்து, எதிர்­வரும் 17 ஆம் திக­தி­வரை அவரை விளக்­க­ம­றியலில் வைக்­கு­மாறு உத்தரவிடப்பட்டது.

vicotor-wife  வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது! vicotor wifeசிங்கள இசைத் துறையில் பிர­பல பாட­க­ரான விக்டர் ரத்­னா­யக்­கவின் முதல் மனைவி சுமார் 13 வரு­டங்­க­ளுக்கு முன்னர் உயிரிழந்திருந்த நிலையில், 9 வரு­டங்­க­ளாக தான் காத­லித்­து­வந்த ஹஷி­னியை கடந்த 2017 மார்ச் 1 ஆம் திகதி விக்டர் ரத்னா­யக்க மறு­மணம் செய்­து­கொண்டார்.

தான் பணி­யாற்றி வந்த வங்­கி­யி­லி­ருந்து மேற்­படி மோச­டி­யுடன் தொடர்­பு­டை­ய­வ­ரென தெரி­ய­வந்­த­தை­ய­டுத்து, ஹஷினி பணி­யி­லி­ருந்து விலக்­கப்­பட்­டி­ருந்த அதே­வேளை, ஹஷினி வெளி­யாட்­க­ளிடம் பெற்­றி­ருந்த பாரிய கடன் தொகையை விக்டர் ரத்­னா­யக்க செலுத்தியிருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, கடந்த 2017 பெப்­ர­வரி 18 ஆம் திகதி தனது 75 ஆவது பிறந்த தினத்­தன்று விக்டர் ரத்னா­யக்க தன்­னை­விட 42 வரு­டங்கள் இள­மை­யான, 33 வய­தான ஹஷி­னி­யுடன் திரு­மண நிச்­ச­ய­தார்த்தம் செய்து கொண்ட அதே­வேளை, அதை­ய­டுத்து வந்த மார்ச் 1 ஆம் திகதி அவரைத் திரு­மணம் செய்­து­கொண்டார்.

Victor-Rathnayake.jpg0_  வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது! Victor Rathnayake

தங்­க­ளு­டைய பேச்சை கருத்­திற்­கொள்­ளாது, தனது தந்தை மறு­மணம் செய்­துகொண்டமை­யினால் மன­மு­டைந்த அவ­ரது மகன் லெலும் ரத்­னா­யக்க “எனது தந்தை மார்ச் முதலாம் திகதி இறந்­து­விட்டார்” என்­ற­வாறு பேஸ்புக் பதி­வொன்றை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்பிடத்­தக்­கது.

Victor-Rathnayake  வங்கியில் 989,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் மோசடி; பாடகர் விக்டர் ரத்னாயக்கவின் மனைவி ஹஷினி கைது! Victor Rathnayakeஇது இவ்­வா­றி­ருக்­கையில், திரு­ம­ணத்தின் பின்னர் அத்து­ரு­கி­ரி­ய­வி­லுள்ள விக்டர் ரத்­னா­யக்­கவின் வீட்டில் வசித்­து­வந்த ஹஷி­னி­ரத்­னாயக்­க­வுக்கு எதி­ராக நகை மோசடி தொடர்பில் பொலிஸ் நிலை­யத்­துக்கு முறைப்­பாடு கிடைத்­த­தை­ய­டுத்து, சுமார் ஒன்­றரை வருட காலத்துக்கு இந்த மோசடி  மூடி­ம­றைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதற்­காக   இலட்­சக்­க­ணக்­கான தொகை பல்­வேறு தரப்­பி­ன­ருக்கு இலஞ்சமாக வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்ள நிலையில் அது தொடர்பில் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேடப்பட்டுவந்த ஹஷினி ரத்னாயக்க பொலிஸ் நிலையத்தில் சரணடையவில்லையாயின், அவரை மறைத்துவைத்துள்ள குற்றத்துக்காக அவரது கணவரான விக்டர் ரத்னாயக்கவை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

தெரு ஓரங்களில் மலம் கழிக்கும் கூட்ட்துக்கு தடிப்பு ஜாஸ்தி, பிச்சை காரன் பிச்சை வாங்க சடடம் பேசுவது [...]

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

இலங்கை பத்திரிகைகள்

English News