ilakkiyainfo

ilakkiyainfo

வடகிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும்: நீண்ட கலந்­து­ரை­யாடல் தேவை என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

வடகிழக்கு இணைந்தால் தனி அலகு அவசியமாகும்: நீண்ட கலந்­து­ரை­யாடல் தேவை என்கிறார் அமைச்சர் ஹக்கீம்
October 06
01:18 2017

வட­கி­ழக்கு மாகா­ணங்கள் இணையும்போது முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற எமது நீண்­ட­கால கொள்கை ரீதி­யான தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான மாற்றுக் கருத்­து­மில்லை.

இந்த விட­யத்தில் வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக முடி­வெ­டுக்க முடி­யாது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

வடக்­குடன் கிழக்கை இணைக்கவிட மாட்­டோ­மென கூறி சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு தூப­மி­டு­வ­தற்கு முடி­யாது. நீண்ட கலந்­து­ரை­யா­டல்கள், விட்டுக்கொடுப்­புகள் இடம்­பெற வேண்­டு­மென்­பதே எமது நிலைப் பா­டாகும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­ட­வேண் டும். இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­ய­லகு வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம்.

அது தொடர்பில் கலந்­து­ரை­யாட முஸ்லிம் சகோ­தர்­க­ளுக்கு அழைப்பு விடு­கின்றோம்.

அதே­வே­ளையில் இணைந்த வடக்கு கிழக்­கிற்கு படித்த பக்­கு­வ­மான முஸ்லிம் ஒருவர் முத­ல­மைச்­ச­ராக்­கு­வதை எதிர்க்கப்போவதில்லை என எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன் மன்­னாரில் தெரி­வித்திருந்தார்.

அதே­நேரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பிரதி தலை­வர்­களுள் ஒரு­வரும் விளை­யாட்­டுத்­துறை பிரதி அமைச்­ச­ரு­மான ஏ.எச்.எம்.ஹரீஸ், வடக்கு கிழக்கு இணைப்­புக்கு எதி­ரான கருத்­துக்­களை வௌியிட்­டி­ருந்தார்.

குறிப்­பாக வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் சுதந்­தி­ரக்­கட்சி, மற்றும் கூட்டு எதிர்க்­கட்­சியின் நிலைப்­பாடு நம்­பிக்­கை­யான ஒளிக்­கீற்கு என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இந்தக் கருத்­துக்கள் தொடர்­பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீமிடம் வினவியபோதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

வடக்கு கிழக்கு இணைப்பு என்­பது நீண்­ட­கா­ல­மாக பேச­ப்­ப­டு­கின்ற விட­ய­மாகும். இது இரண்டு சமூ­கங்­களின் அபி­லா­ஷை­க­ளுடன் தொடர்­பு­டைய விட­ய­மாகும். இந்த விட­யத்தில் எமது கட்சி நீண்­ட­கா­ல­மாக ஒரு நிலைப்­பாட்­டினைக் கொண்­டி­ருக்­கின்­றது.

குறிப்­பாக எமது மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு தனி­யா­ன­தொரு அலகு அமை­ய­வேண்டும் என்று கொள்­கை­ய­ள­வி­லான முடி­வொன்றை எடுத்­தி­ருந்தார்.

இந்த தீர்­மா­னத்­தி­லி­ருந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தற்­போது வரையில் வில­க­வில்லை. இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக நாம் தமிழ் சகோ­தர்­களின் தலை­வர்­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­தி­யி­ருந்தோம். நடத்­திக்­கொண்டும் இருக்­கின்றோம். மேலும் நிபந்­த­னை­க­ளு­ட­னான நீண்ட கலந்­து­ரை­யா­டல்­களும் அவ­சி­ய­மா­கின்­றன.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் தொடர்பில் ஒரு வகை மெத்­தனப் போக்­கையே கடை­பி­டிக்க வேண்­டி­யுள்­ளது.

வெட்டு ஒன்று துண்டு இரண்­டாக பதி­ல­ளித்து விட­மு­டி­யாது. இதற்கு கார­ணங்கள் உள்­ளன.

1987ஆம் ஆண்டு மேற்­கொள்­ளப்­பட்ட இந்­திய இலங்கை ஒப்­பந்­தத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பில் 13ஆவர் திருத்தம் மேற்­கொள்­ளப்­பட்டு மாகாண சபை முறை­மைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டன.

இதன்­போது வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டன. ஒரு­வ­ரு­டத்­திற்குள் கிழக்கு மாகா­ணத்தில் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்டு நீடிப்­பதா? இல்­லையா? என்­பது தீர்­மா­னிக்­கப்­ப­ட­வேண்டும் என்றும் கூறப்­பட்­டது.

ஆனால் சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பொன்றை நடத்­து­வதன் ஊடாக இரண்டு சகோ­தர சமு­கங்­க­ளுக்கு இடையில் விப­ரீதம் ஏற்­ப­டுத்த அப்போதைய ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான அர­சாங்கம் முயன்­றது. ஆனால் அத்­த­கைய நிலை­மைகள் எல்லாம் தெய்­வா­தீ­ன­மாக கடந்து போயின.

தற்­போ­தைய நிலையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­ப­டு­கின்ற போது முஸ்­லிம்­களின் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­கின்ற வகையில் தனி அலகு அமை­யப்­பெற வேண்டும் என்ற கோரிக்கை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும்.

அதற்­காக நீண்ட பேச்­சு­வார்த்­தைகள், நிபந்­த­னை­யு­ட­னான முன்­னெ­டுப்­புகள், விட்டுக் கொடுப்­புகள் என பல விட­யங்கள் இடம்­பெ­ற­வேண்­டி­யுள்­ளன.

வடக்­குடன் கிழக்கை இணைக்க விட மாட்டோம் என ஒரே­ய­டி­யாக ஒதுக்­கி­விட முடி­யாது. அது ஆரோக்­கி­ய­மா­ன­தல்ல. சிக்­கலை ஏற்­ப­டுத்த முயலும் தரப்­பி­ன­ருக்கு இவ்­வாறு ஒரே நிரையில் பதி­ல­ளிப்­பது அவர்­களின் நிகழ்ச்­சிக்கு தூப­மி­டு­வ­தா­கவே அமையும்.

தமிழ் முஸ்லிம் மக்­க­ளி­டையில் எந்­த­வி­த­மான நல்­லு­றவும் பேணப்­படக் கூடாது என்ற போக்­கையே இத்­த­கையோர் கொண்­டுள்­ளனர். இது பிழை­யான அணு­கு­மு­றை­யாகும்.

வடக்கு கிழக்கு இணைப்பு விவ­காரம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் பாரா­ளு­மன்­றத்­தி­னூ­டா­கவே அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும். வடக்­கையும் கிழக்­கையும் இணைக்க இரு மாகா­ணங்­களும் அங்­கீ­காரம் வழங்­கி­னாலும் அது சாத்­தி­ய­மா­காது.

இவ்­வா­றான சில காப்­பீ­டு­களும் இருக்கும் நிலை­யிலே இந்த விட­யங்­களை சில தரப்­பினர் பெரி­து­ப­டுத்தி ஊதிப்­பெ­ரி­தாக்கி ஏதோ விப­ரீதம் நடந்­துது போல காட்டி அர­சியல் பிழைப்பு நடத்­து­கின்­றனர்.

வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அவ­ச­ரப்­பட்டு பேசு­வது அர­சியல் பிழைப்­பு­வாத பேச்­சுக்கள் மட்­டுமேயாகும். ஒரே இரவில் அல்­லது நாளைக்கே வடக்கும் கிழக்கும் இணைந்­து­வி­டு­வ­தைப்­போன்று பேசு­கின்­றனர்.

முஸ்­லிங்­களின் உடன்­பா­டின்றி இதனை செய்ய முடி­யாது. செய்­யவும் மாட்டோம் என சம்­பந்­தனே கூறி­யி­ருக்­கிறார். வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திற்கு முன்னர் எமக்கு தீர்க்க வேண்டிய பொதுவான விடயங்கள் மற்றும் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளவேண்டும். அதற்கு அடுத்தபடியாகவே இவ்விடயம் தொடர்பில் ஆராய முடியும்.

பிரதி தலைவரின் ஹரீஸ் கருத்து

அவருடைய கருத்துக்களை நான் அவதானித்துள்ளேன். அது அவரின் சொந்தக் கருத்தாகும். கட்சியின் நிலைப்பாடல்ல. கட்சி மற்றும் ஊர் சார்ந்த உணர்வுகளுடன் சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான கருத்துக்களினால் வேறு சக்திகளுக்கு நாம் அறியாதவகையில் உந்து சக்தி வழங்குவதாகவே அவை அமைந்து விடும். இவற்றை தவிர்ந்து கொள்வதே உகந்ததாகும் என்றார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News