ilakkiyainfo

ilakkiyainfo

வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு- இந்தோனேசிய பெண்ணை விடுவித்தது மலேசிய கோர்ட்

வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு- இந்தோனேசிய பெண்ணை விடுவித்தது மலேசிய கோர்ட்
March 11
04:41 2019

வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பெண்ணை, மலேசிய நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது.

கோலாலம்பூர்:

வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், 2017-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.

விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன வி‌ஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயுஷா, வியட்நாமைச் சேர்ந்த தோன் தி ஹுவாங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

201903110928006123_1_nam._L_styvpf வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு- இந்தோனேசிய பெண்ணை விடுவித்தது மலேசிய கோர்ட் வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கு- இந்தோனேசிய பெண்ணை விடுவித்தது மலேசிய கோர்ட் 201903110928006123 1 namகடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொலை சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற யூகங்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தோனேசிய பெண் சித்தி ஆயுஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அதற்காக காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து சித்தி ஆயுஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு வெளியானதும் கோர்ட் வளாகத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார் சித்தி ஆயுஷா.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் விடுதலை செய்யப்போகும் தகவல் இன்று காலையில் தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு ஆச்சரியமாகவும், அதேசமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என்றார்.

இந்த வழக்கை சிறப்பாக நடத்தியதற்காக மலேசிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, இந்தோனேசிய தூதர் கூறினார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News