ilakkiyainfo

ilakkiyainfo

‘வடகொரிய தலைவர் மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் சம்மதித்தோம்’

‘வடகொரிய தலைவர் மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் சம்மதித்தோம்’
June 07
09:48 2018

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது.

அன் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டு திரும்பிய நிலையில் இனி அணு ஆயுதங்கள் இல்லாத மண்டலமாக கொரிய தீபகற்பம் இருக்கும் என்று உறுதியளித்தார்.

இதன்பிறகு அமெரிக்காவுடன் வடகொரியா சமாதான போக்கை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இரு நாடுகளும் நெருங்கி வரும் சூழலும் காணப்பட்டது.

இதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகியோர் ஜூன் மாதம் 12-ம் தேதி சிங்கப்பூர் நகரில் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. ஆனால் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல்களைத் தொடர்ந்து, டிரம்ப் இந்த சந்திப்பை திடீரென ரத்து செய்தார்.

பின்னர், வடகொரிய அதிபருடனான சந்திப்புக்கு ஒப்புக்கொண்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திப்பு நடக்கும் எனவும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு சிங்கப்பூரின் பிரபல கேபல்லா விடுதியில் நடைபெற உள்ளது. இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு என்பதால் அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ட்ரம்ப்பின் தலைமை வழக்கறிஞரும், நியூ யார்க் நகர முன்னாள் மேயருமான ரூடி கிலியானி, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், மண்டியிட்டு கெஞ்சி கேட்டதனால் தான் அவரை சந்திக்க ட்ரம்ப் மீண்டும் ஒப்புக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி, இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு இன்னும் ஒரு சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில்இ இவரது இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News