ilakkiyainfo

ilakkiyainfo

வடக்கில் தமிழ் மக்கள் மீது எவ்­வாறு தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டன? தமிழ் மக்களின் சொத்துக்களை எவ்வாறு அபகரித்தனர்??

வடக்கில் தமிழ் மக்கள் மீது எவ்­வாறு தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டன?  தமிழ் மக்களின் சொத்துக்களை எவ்வாறு அபகரித்தனர்??
October 27
11:05 2017

கமால் குண­ரட்­ணவின் நந்­திக்­கடல் புத்­தகம் எடுத்­துக்­காட்டு  –  யுத்த குற்­றச்­சாட்டுகள் தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர முன்வைக்கும் ஆதாரங்கள் இதோ!!

விமல் வீர­வன்ச, கமால் குண­ரட்ண, சரத்­ வீ­ர­சே­கர உள்­ளிட்டோர் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்­களை பார்க்­கும்­போது அவர்கள் அதி­கா­ரத்­தி­லி­ருக்­கும்­போது எவ்­வாறு செயற்பட்­டி­ருப்­பார்கள் என்­பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்­டும்­ என்று நிதி­ மற்றும் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கிறார்.

62 இலட்சம் மக்­களின் ஆணைக்கு அமைய புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்க ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வருகிறது.

அத்­துடன் நந்­திக்­கடல் என கமல் குண­ரத்­ன­எ­ழு­திய புத்­த­கத்தில் அவர்கள் வடக்கில் அப்பாவி பொது மக்கள் மீது எவ்­வாறு தாக்­கு­தல்­களை ஏவி விட்­டனர் என்­ப­தையும் எவ்வாறு அவர்­களின் சொத்­துக்­களை அப­க­ரித்­தனர் என்­ப­தையும் விளக்­கி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான கடு­மை­யான செயற்­பா­டு­க­ளினால் எவ்­வா­றான வக்­கி­ரத்­தன்­மையை பெற்றுக் கொண்டார் என்­ப­தையும் அவர் விளக்­கி­யி­ருக்­கிறார்.

இது போன்ற விட­யங்­களே யுத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மங்­கள சம­ர­வீர விடுத்­து­ளள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்க்­ப­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அண்­மையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலை­மையில் நடை­பெற்ற ஒரு நிகழ்வில் பேசிய முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆத­ரவு தெரிவிப்பவர்கள் கொல்­லப்­பட வேண்டும் என கூறி­யி­ருந்தார்.

காட்டிக் கொடுப்­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை என்ற விட­யத்தை முன்­வைத்தே அவர் இவ்­வாறு கூறி­யி­ருந்தார்.

அவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான சடங்கும் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு 63 இலட்சம் மக்கள் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஸ்திர தன்­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் அடை­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என ஆணை­வ­ழங்­கி­யுள்ள நிலை­யி­லேயே அந்த இரா­ணுவ அதி­காரி இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

அத்­துடன் அர­சாங்­கமும் மக்­களின் ஜன­நா­யக அர­சாங்கம் என்ற வகையில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் மக்கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது.

தோற்க்­க­டிக்­கப்­பட்ட அதி­கார தாக­முள்ள சக்­திகள் ஜன­நா­ய­கத்தை மதிக்­காத நிலையில் ஒரு வெறி­யுடன் செயற்­ப­டு­வதை காண முடி­கி­றது.

ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் காணப்­டு­கின்ற அங்கீகா­ரத்தை அவர்கள் ஏற்க மறுக்­கின்­றனர்.

இன­வாத சக்­திகள் இவ்­வாறு உரை­யாற்­றி­ய­மைக்கு நாம் பதி­ல­ளிப்­பது பெறுமதியானதல்ல.

மாறாக ஜன­நா­ய­கத்தை மதிக்­கின்ற பெரும்­பா­லான மக்­களின் சார்பில் பேசு­வதே சரியானது என உணர்­கிறேன். ”வியத்­மக” என்ற அமைப்­பா­னது கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யவே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்ளை வேன் கலா­சா­ரத்தின் ஸ்தாபக தலை­வ­ரான கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் கடுமை­யான மிரு­கத்­த­ன­மான செயற்­பா­டுகள் தொடர்­பான அவ­ரது கனவு இன்னும் முடி­வுக்கு வர­வில்லை என்­ப­தையே தெரி­கி­றது.

கமல் குண­ரத்ன தான் அண்­மையில் எழு­திய புத்­த­கத்தில் இலங்கை இரா­ணு­வத்தை காட்டிக் கொடுத்­தி­ருக்­கிறார்.

”நந்­திக்­கடல்” என அவர் எழு­திய புத்­த­கத்தில் அவர் வடக்கில் அப்­பாவி பொது மக்கள் மீது எவ்­வாறு தாக்­கு­தல்­களை ஏவி விட்டனர் என்­ப­தையும் எவ்­வாறு அவர்­களின் சொத்துக்­களை அப­க­ரித்­தனர் என்­ப­தையும் விளக்­கி­யி­ருக்­கிறார்.

இவ்­வா­றான கடு­மை­யான செயற்­பா­டு­க­ளினால் எவ்­வா­றான வக்­கி­ரத்­தன்­மையை பெற்றுக் கொண்டார் என்­ப­தையும் அவர் விளக்கியருக்­கிறார்.

இது போன்ற விட­யங்­களே யுத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்திருக்கின்றன.

மேலும் அவர் இரா­ஜ­தந்­திர சேவை­யி­லி­ருந்­த­போது இலங்­கையர் ஒருவர் மர­ண­மா­கி­யமை தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

சரத் வீர­சே­கர என்­ப­வரும் கோத்­தா­பா­யவின் சொல் பேச்சு கேட்­ப­வ­ரா­கவே இருக்­கிறார். அவரும் அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரிப்­ப­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் கூறி­யி­ருக்­கிறார்.

அடுத்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச, 1988, 1989 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வழி­மு­றைகள் குறித்து பேசி­யி­ருக்­கிறார்.

அதா­வது பாரா­ளு­மன்றம் மீது குண்டு வைக்க வேண்டும் என அவர் கூறி­யி­ருக்­கிறார். அவரின் மைத்­து­னரே கடந்த காலத்தில் பாரா­ளு­மன்­றத்தின் மீது குண்டுத் தாக்­குதல் மேற்­கொண்டார்.

அந்த யுகத்தை மீண்டும் விமல் வீர­வன்ச அழைத்­தி­ருக்­கின்றார். அதன்­மூலம் தான் மிரு­கத்­த­ன­மான அர­சி­யலை கொண்­டவர் என வெ ளிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அதி­கா­ரத்தில் இல்­லா­த­போது அவர்­க­ளினால் இவ்­வா­றான கோர­மான கருத்­துக்­களை முன்­வைக்க முடி­யு­மானால் அதி­கா­ரத்­தி­லி­ருக்­கும்­போது எவ்­வாறு செயற்பட்டிருப்பார்கள் என்­பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த கூற்­றுக்கள் ஜன­நா­யத்தை விரும்பும் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரிக்கும் மக்­களை ஆபத்தில் போட்­டி­ருக்­கி­றது.

அவர்கள் அர­சாங்­கத்தில் இருந்­தாலும் இல்லா விட்­டாலும் இரத்த தாக­மு­டைய கொலை­கா­ரர்­க­ளா­கவே செயற்­ப­டுவோம் என்­பதை அவர்கள் எமக்கு நினைவுப் படுத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இந்த நாட்டு மக்கள் ராஜ­பக்ஷ யுகத்தை இன்னும் மறந்­து­வி­ட­வில்லை. சிவி­லி­யன்­களை கடத்­தி­யமை, இர­க­சிய கொலை கார கும்பல் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லா­ளர்கள் வெ ள்ளை வேனில் கடத்­தப்­பட்­டமை என்­பதை மக்கள் மறக்கவில்லை.

இவ்வாறான நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக 62 இலட்சம் மக்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஆணை வழங்கியிருக்கின்றனர்.

கடந்த கால இரக்கமற்ற தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதுடன் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வாதிகார தலைமைத்துவம் தொடர்பாக இன்னும் அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

இரத்த தாகமுடைய இரக்கமற்ற சக்திகளை தோற்கடிக்க நாம் அனைத்து முற்போக்கு மற்றும் சமாதானத்தை விரும்பும் மக்களுடன் இணைந்து செயற்பட தயாராகவிருக்கின்றோம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News