ilakkiyainfo

ilakkiyainfo

17 வயது இளைஞன் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை : பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை!!

17 வயது இளைஞன்  புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலை : பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை!!
January 11
12:58 2018

புறக்கோட்டை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் தற்கொலைசெய்து கொண்டார்.

சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை வேளையில் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அனைத்து உத்தியோகத்தர்கள் தொடர்பில் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பணித்துள்ளார்.

கஞ்சாவை உடன் வைத்திருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டுக்காக குறித்த 17 வயது இளைஞன் நேற்று இரவு புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தை பஸ் தரிப்பு நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரை பொலிஸ் நிலையம் அழைத்துச்சென்றுள்ள அதிகாரிகள் அங்கு அவரை தடுத்து வைத்து விசாரித்த பின்னர் பொலிஸ் கூண்டில் தடுத்து வைத்துள்ளனர்.

ஹப்புத்தளை – கிரிமானகம பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு பொலிஸ் சிறைக் கூண்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் அணிந்திருந்த ஆடையினைப் பயன்படுத்தியே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந் நிலையில் குறித்த இளைஞனுக்கு பொலிஸாரால் தாக்குதல் ஏதும் நடத்தப்பட்டதா, என்பது தொடர்பிலும் இதன்போது தீவிர விசாரணை நடாத்தப்படவுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் மீது இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை இடம்பெற்றதுடன் மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

தமிழ் தேசியம் என்பது ஒரு " சாக்கடை " என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி உள்ளது, தமிழ் தேசியம் பேசுபவர்கள் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News