ilakkiyainfo

ilakkiyainfo

11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு தீ வைத்த பொதுமக்கள்

11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது – அவரது கடைக்கு தீ வைத்த பொதுமக்கள்
December 15
15:11 2019

கிளிநொச்சி பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிறு புடவை கடை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் அப்பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்டுபத்தியுள்ளார்.

இதனை அவதானித்த பொது மக்கள் குறித்த  நபரை பொலிஸாருக்கு பிடித்துக் கொடுத்ததோடு  அவரது புடவை கடையினையும் தீயிட்டுக் எரித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நபர் தற்போது நீதி மன்றில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். .

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

குறித்த பகுதியில்  சிறு புடவை கடை நடத்தி வருகின்ற நபர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அத்துமீறி தனி நபர் ஒருவரின் காணியை பிடித்து வியாபார நிலையம் அமைத்து நடத்தி வருகின்றார் என்றும்,

national_strategychildsexualabuse-1  11 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்தவர் கைது - அவரது கடைக்கு தீ வைத்த பொதுமக்கள் national strategychildsexualabuse 1 e1576422668548எனவே  இது தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017 ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும். 2019 ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் குறித்த நபர் சட்டவிரோதமாக கடை நடத்தி  வருகின்றார் எனவே அவரின் வியாபார அனுமதி பத்திரத்தை நிறுத்துமாறு கோரி  கடிதம் எழுதியிருந்தார்.ஃ

ஆனால் அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சிறுமியை அச்சுறுத்தி துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.  இதனை பலரிடம் கூறிய போது  எவரும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இவரது நடவடிக்கையினை இரகசியமாக காணொளி எடுத்த பிரிதொரு நபர் அதனை ஆதாரமாக  பொலிஸாரிடம் கொடுத்து நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதோடு, ஆத்திரமடைந்த பொது மக்கள் அவரது கடையினையும் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News