ilakkiyainfo

ilakkiyainfo

11 வயது சிறுவன் கோழிக் கூண்டில் சடலமாக மீட்பு : நிந்தவூரில் பரிதாபம்”

11 வயது சிறுவன் கோழிக் கூண்டில் சடலமாக மீட்பு : நிந்தவூரில் பரிதாபம்”
December 01
09:08 2017

நிந்தவூர்- 9ஆம் பிரிவைச் சேர்ந்த தரம் 6இல் கலவ்வி கற்கும் மாணவன் ஒருவர் அவரது வீட்டிலுள்ள கோழிக் கூண்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ் (வயது 11) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதுபற்றித் தெரியவருவதாவது:-

நிந்தவூர் அல்-மினா வித்தியாலயத்தில் 6ஆம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் முகம்மது பாயிஸ் முகம்மது நிஹாஜ், நேற்று இறுதியாண்டுப் பரீட்சை எழுதி விட்டு முற்பகல் சுமார் 11.30 மணியளவில் வீடு சென்றுள்ளார்.

வீட்டிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவர் பகலுணவு வேளையில் காணாமல் போயுள்ளார்.

பின்னர் அவரைத் தேடியலைந்து இறுதியில் அவரது வீட்டுக் கிணற்றடியில் அமைக்கப்பட்டுள்ள கோழிக் கூண்டினுள் பார்த்த போது அங்கு அவரது உயிரற்ற உடல் காணப்பட்டதாகவும், அதனை உடன் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றதாகவும் மறணித்த நிஹாஜ்ஜின் தாயின் தாயார் தெரிவித்தார்.

மரணித்த நிஹாஜ்ஜின் தாயும், தந்தையும் வெளவேறு திருமணங்கள் முடித்துக் கொண்டு, பிரிந்து வாழ்வதால் நிஹாஜ் சிறுவயதிலிருந்தே தனது தாயின் தாய், தாயின் தந்தை அவர்களிடமே வளர்ந்து வந்துள்ளார் என்பது தெரியவருகிறது.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ள நிஹாஜின் ஜனாஸாவை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ஏ.எம்.நசீல், சம்மாந்தறை பொலிசார் சகிதம் வருகை தந்து சிறுவனின் சடலத்தைப் பார்வையிட்டதோடு, அவரது வீட்டுக்கும் சென்று அவர் மரணமாகிய கோழிக் கூட்டையும் பார்வையிட்டதோடு, உறவினர், அயலவர்களையும் விசாரணை செய்த பின்னர் பிரேத பரிசோதனைக்காக உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை சம்மாந்துறைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

அண்ணல் அமிர்தலிங்கம் அவர்களால் பதவி அடைந்ததோர் பலர். ஆனால் அவரை நினைவு கூர்பவர்கள் அல்ல [...]

raj

Nalla kirukkan [...]

Nice pair i think and manmadhan ,saravana,CCV, காற்றின் மொழி super ha irukkum my thalaivan str [...]

ஒரு காலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்திற்கு எதிராக கௌரவ சிறில் மத்தியு உட்பட பல ஐதேக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை [...]

இரத்தம் சிந்திய ஒரு போராளி, அநியாத்திற்கு எதிராகம் குமுறும் ஒரு வீரப்பெண், மக்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைகளிற்காகவும் பெருந் தலைவர்களுடனும் அரசியல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News