ilakkiyainfo

ilakkiyainfo

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்!!

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்!!
August 12
19:12 2018

சினிமாவில் கதாநாயகிகளாக அறிமுகமாகும் நடிகைகளில் சிலர் 20 அல்லது 25 வயதில் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே திருமணம் செய்து கொள்கிறார்கள்.

நடிகைகளில் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடிக்க வருகிறார்கள். மற்றவர்கள் சினிமாவை விட்டு விலகி குடும்பத்தோடு ஐக்கியம் ஆகி விடுகின்றனர்.

ஆனால் சில நடிகைகள் 30 வயதை தாண்டியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். நயன்தாரா, 33 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இவர் சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் அடுத்தடுத்து காதல்வயப்பட்டு தோல்வியை தழுவியவர். இப்போது டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் சுற்றுகிறார்.

நயன்தாராவுக்கு கை நிறைய படங்கள் இருக்கிறது. இப்போது திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் திருமணத்தை தள்ளிப்போடுகிறார் என்கின்றனர்.

இவருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அனுஷ்காவுக்கு 36 வயது ஆகிறது. இவரும் தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாக பேசினார்கள்.

அதை இருவரும் உறுதிப்படுத்தவில்லை. வயதாகி விட்டதால் 40 வயதுக்கு மேற்பட்ட வரன்களே அவருக்கு அமைகின்றன என்கின்றனர்.திரிஷாவுக்கு 35 வயது ஆகிறது. பொருத்தமான மாப்பிள்ளை அமையும்போது திருமணம் செய்துகொள்வேன் என்று தள்ளிப்போட்டு வருகிறார்.

காஜல் அகர்வாலுக்கு 33 வயது ஆகிறது. இவருக்கு ஒரு தொழில் அதிபருடன் திருமணம் நடக்கப்போகிறது என்றனர். ஆனாலும் அது உறுதிப்படுத்தவில்லை.

இப்போது அவர் கைவசம் பாரிஸ் பாரிஸ் என்ற ஒரு படம் மட்டுமே உள்ளது. இந்த படத்தை முடித்ததும் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர்.

33 வயதாகும் சதா, 30 வயதை தாண்டிய அஞ்சலி, 31 வயதாகும் ரம்யா நம்பீசன், 31 வயதான டாப்சி உள்ளிட்ட மேலும் சில நடிகைகள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள்.

நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது

201808090215346472_Nayantara-and-Vignesh-Sivans-new-photo-was-released_SECVPF.gif  30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்!! 201808090215346472 Nayantara and Vignesh Sivans new photo was released SECVPF
நயன்தாராவுக்கு 33 வயது ஆகிறது. 2005-ல் ஐயா படத்தில் அறிமுகமாகி இப்போதுவரை முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
தெலுங்கிலும் இவர் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. 2 மொழி படங்களிலும் பெரிய கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் தற்போது நடிக்கிறார்.

இவரது படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் சம்பளத்தை ரூ.4 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல். வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இவ்வளவு அதிக சம்பளம் வாங்கியது இல்லை.

அதோடு டைரக்டர் விக்னேஷ் சிவனின் காதல் வலையிலும் சிக்கி இருக்கிறார். இருவரும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்து ஜோடியாக சுற்றி வருகிறார்கள்.

அந்த படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இருவருமே காதலை இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

ஆனாலும் நெருக்கமான படங்கள் மூலம் காதலை உறுதிப்படுத்தி வருகின்றனர். விரைவில் விக்னேஷ் சிவனை கதாநாயகனாக வைத்து நயன்தாரா சொந்த படம் தயாரிக்கப்போவதாகவும் இதற்காக அவர் கதை கேட்டு வருவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.

இந்த நிலையில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புதிய படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு “இந்த காதலில் அதிகமான நட்பு உள்ளது. நட்பிலும் அளவுக்கு அதிகமான காதல் உள்ளது” என்று பதிவிட்டு இருக்கிறார்.

திருமணம் செய்து கொள்ளாமல் விக்னேஷ் சிவனுடன் சுற்றுவது நயன்தாராவின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்றும், அவரது திருமணத்தை விரைவில் நடத்தி முடிக்க தீவிரம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  

விறுவிறுப்பு தொடர்கள்

    ராஜிவ் காந்தியை  படுகொலை  செய்ய “சிவராசன்”  மரகதம் சந்திரசேகரின் தொகுதியான   ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்??: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –10)

0 comment Read Full Article
    “கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

“கையெழுத்து வைச்சிட்டு வந்திட்டன், இனிமேல்த்தான் பிரச்சனையே இருக்குது” : 2002 இல் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட தலைவர் பிரபாகரன் கூறியது!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -18)

0 comment Read Full Article
    நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள்   எவரையேனும்  இணைத்துக்கொள்ளவில்லை!!   (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

நந்திக்கடல் வழியாக தலைவர் வெளியேறும் திட்டத்தில் பெண் போராளிகள் எவரையேனும் இணைத்துக்கொள்ளவில்லை!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -17)

1 comment Read Full Article

Latest Comments

இனி விண் வெளியிலும் பயங்கரவாதிகளா ??? பொறுக்க முடியவில்லை , பல கொடூர தட் கொலை [...]

புலிகளால் கடத்த பட்டு கொடூர மான சித்திரவதை செய்து கொல்ல [...]

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இலங்கை பத்திரிகைகள்

English News