Weather , , 0°C

ilakkiyainfo

வயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்!

வயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று  உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்!
August 22
14:12 2019

கொழும்பை அண்­மித்த பிர­தேசம் ஒன்­றி­லுள்ள தொழில்­நுட்ப தொழிற்­ப­யிற்சி கல்­லூ­ரி­யொன்றின் விடு­தியில் தங்­கி­யி­ருந்த மாணவி ஒருவர் குறித்த விடு­தியின் குளி­ய­ல­றையில் நேற்­று ­முன்­தினம் அதி­காலை குழந்தை ஒன்றை பிர­ச­வித்­துள்­ள­தாக கல்­கிஸை பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

பிறந்த குழந்தை உயி­ரி­ழந்­துள்ள நிலையில், மாணவி சிகிச்­சை­க­ளுக்­காக களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.  இவர், உணவு உற்­பத்தி தொழி­நுட்­ப­வியல் பாட­நெறி ஒன்றை கற்­று­வந்த, 20 வய­தான மாணவி என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது, கடந்த ஜூன் மாத நடுப்­ப­கு­தியில் குறித்த கல்­லூ­ரியில் இணைந்­து­கொண்ட இம்­மா­ணவி, அங்­கி­ருந்த மேலும் 3 மாண­வி­க­ளுடன் விடு­தியில் தங்­கி­ வந்­துள்ளார்.

தனது சொந்த ஊரான மிஹிந்­த­லைக்கு சென்­றி­ருந்த இம்­மா­ணவி கடந்த 18 ஆம் திகதி மாலை மீண்டும் விடு­திக்கு திரும்பி எவ்­வித மாற்­றத்­தையும் காட்­டிக்­கொள்­ளாமல் சக மாண­வி­க­ளுடன் பேசி­ய­துடன், வீட்­டி­லி­ருந்து தான் கொண்டு வந்த உண­வு­பொ­ருட்­களை பகிர்ந்து உண்ட போதிலும் அவர் இரவு உணவை புறக்­க­ணித்­துள்ளார்.

இந்­நி­லையில் அன்­றைய தினம் இரவு 11 மணி­ய­ளவில் கடும் வயிற்று வலி­யினால் அவர் அவ­திப்­பட்­ட­போது, சக மாணவி ஒருவர் அவ­ருக்கு வலி நிவா­ரண வில்­லை­களை கொடுத்­த­துடன் சில சிகிச்சை முறை­களை கையாண்­டுள்ளார்.

75322029_newborn  வயிற்று வலியினால் அவதியுற்ற மாணவி குளியலறைக்குள் சென்று  உயிரிழந்த குழந்தையுடன் வெளியே வந்தார்! 75322029 newbornஎனினும், வலி மேலும் அதி­க­ரித்­த­மை­யினால் ஏனைய மாண­வி­களும் இது குறித்து விடுதி நிர்­வா­கிக்கு தெரி­யப்­ப­டுத்த முயன்­ற­போது, குறித்த மாணவி குளி­ய­ல­றைக்குள் சென்று கத­வ­டைத்துக் கொண்டு சுமார் 1 மணித்­தி­யா­லத்­துக்கும் அதி­க­நேரம் உள்­ளேயே இருந்­துள்ளார்.

பின்னர் ஏனைய மாண­வி­க­ளி­ட­மி­ருந்து துணி­யொன்றை பெற்ற அவர், சிறிது நேரம் கழிந்து குறித்த துணியில் குழந்தை ஒன்றை சுற்றிக் கொண்டு வெளி­யே­றி­யுள்ளார். இதனால் பதற்ற ­மடைந்த மாண­விகள் மீண்டும் விடுதி நிர்­வா­கிக்கு தெரி­யப்­ப­டுத்த முயன்­றுள்­ளனர்.

எனினும், இந்த விட­யத்தை எவ­ருக்கும் தெரி­விக்க வேண்டாம் எனவும், விடிந்­த­வுடன் தான் ஊருக்கு செல்­வ­தா­கவும் கூறி­யுள்ளார். சிறிது நேரத்தின் பின்னர் அவ்­வி­டத்­துக்கு வந்த விடுதி நிர்­வாகி, அங்கு தங்­கி­யி­ருந்த விரி­வு­ரை­யாளர் ஒரு­வரை அழைத்து, மாண­வியை வைத்­தி­சா­லையில் அனு­ம­தித்­த­துடன், இது தொடர்பில் பொலி­ஸா­ருக்கும் தகவல் வழங்­கி­யுள்ளார்.

அதன்­போது, மாண­வியின் கையி­லி­ருந்த குழந்தை உயி­ரி­ழந்­தி­ருந்­த­தாக பொலிஸார் மேலும் தெரி­வித்­துள்­ளனர்.
இம் மாணவி மிஹிந்­த­லையில் ஒரு­வ­ருடன் காதல் தொடர்­பு­களை கொண்­டி­ருந்­த­தா­கவும், அதனால் அவர் கர்ப்­ப­மா­கி­யி­ருக்­கலாம் எனவும் பொலிஸார் சந்­தேகம் வெளி­யிட்­டுள்­ளனர்.

இந்நிலையில், கல்கிஸை வலயத்துக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் முதித புஸ்ஸெல்ல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜயசேகர ஆகியோரின் அறிவுறுத்தலுக்கமைய, கல்கிஸை பொலிஸ் நிலைய குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

February 2020
M T W T F S S
« Jan    
 12
3456789
10111213141516
17181920212223
242526272829  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

தமிழ் நாளிதழ்கள்

English News

வானொலிகள்