வவுனியா குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட மர்ம பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்து.

 

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில்,

DSC_4580 வவுனியாவில் காணப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு வவுனியாவில் காணப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு DSC 4580 e1572413690534இன்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சிலர் மர்ம பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

 

Screenshot_2019-10-29-20-53-51-02 வவுனியாவில் காணப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு வவுனியாவில் காணப்பட்ட மர்ம பொதியால் பரபரப்பு Screenshot 2019 10 29 20 53 51 02

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியில் நின்றிருந்த பொதுமகன் அவசர பொலிசாருக்கு தகவல் தெரிவித்திருந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிசார் குறித்த பொதியினை சோதனை செய்து பார்த்தபோது அதனுள் கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன.

 

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை பார்வையிட்ட போது  கயஸ் வாகனத்தில் வந்தவர்கள் அந்த பொதியினை வீதி ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை அவதானித்ததுடன், வாகன இலக்கங்களையும் பதிவு செய்துவிட்டு சென்றனர்.

இதனால் குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான சூழல் ஏற்பட்டிருந்தது.