ilakkiyainfo

ilakkiyainfo

வவுனியாவில் சிறுவனின் மரணத்திற்கான வைத்திய அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகம்

வவுனியாவில் சிறுவனின் மரணத்திற்கான வைத்திய அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகம்
February 10
20:31 2019

வவுனியா சிதம்பரபுரம் கற்குளம் பகுதியில் நேற்றுமுந்தினம் மாலை அப்பம்மாவுடன் சென்ற சிறுவன் நேற்று காலை கிணற்றிலிருந்து  சடலமாக மீட்கப்பட்டுள்ளமை கிராமத்தையே சோகமாக மாற்றியிருந்தது.

அத்துடன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்ததையடுத்து இன்று மருத்துவ அறிக்கை வெளிவந்ததானது உறவினர்களை மேலும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.

இச்சம்பவம் பற்றி மேலும்  தெரியவருவதாவது,

நேற்றுமுந்தினம் மாலை சுந்தரபுரத்திலிருந்து  சிதம்பரபுரம் கற்குளம் படிவம் 3 பகுதிக்கு  தொண்ணூறாம் நாள் நினைவஞ்சலிக்கு முன் ஆயத்த வேலைக்காக  சிவானந்தம் தருண் என்ற ஆறு வயது சிறுவன் அப்பம்மாவுடன் சென்றிருந்தார்.

அங்கு ஏனைய சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாகவும் இரவாகியதால் சிறுவனை காணவில்லை என நீண்ட நேரமாக தேடியும் எங்குமே கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று காலை கிணற்றில் இருந்து  குறித்த சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

SnapShot1321  வவுனியாவில் சிறுவனின் மரணத்திற்கான வைத்திய அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகம் SnapShot1321மேலும் குறிப்பிட்ட கிணறானது முழுமையாக நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன் கிணற்றின் கட்டு 3அடிக்கு உயற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள கிணறு என்றும் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் உறவினர்கள், அயலவர்கள் தெரிவித்திருந்த நிலையில் இன்று மருத்துவ பரிசோதனை இடம்பெற்றிருந்தது.

எனினும் வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். சட்ட வைத்திய அதிகாரி பிரசன்ன அப்புகாமி பிரேத பரிசோதனையின் பின்னர் நீரில் மூழ்கி மூச்சுதிணறியே சிறுவன் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் இன்று உறவினர்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.

SnapShot1325  வவுனியாவில் சிறுவனின் மரணத்திற்கான வைத்திய அறிக்கையால் உறவினர்கள் மேலும் சோகம் SnapShot1325

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News