வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

வவுனியா புதிய பஸ் நிலைய முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் கடமையில் ஈடுபடும் குறித்த முச்சக்கர வண்டியானது பயணிகளை ஏற்றிக்கொண்டு பட்டானீச்சூர் பகுதியினை அண்மித்த சமயத்தில் முச்சக்கரவண்டியினை பின் தொடர்ந்து சென்ற மோட்டார் சைக்கில் பயணித்த இளைஞர் ஒருவர் முச்சக்கரவண்டி முன்பாக மோட்டார் சைக்கிளினை நிறுத்தி விட்டு முச்சக்கரவண்டியின் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான முச்சக்கரவண்டி சாரதி வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்ட நிலையில் வவுனியா பொலிஸார் சி.சி.ரி.வி காணொளியின் உதவியுடன் தாக்குதல் மேற்கொண்ட நபரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.