வவுனியாவில்  கற்பகபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி!! வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி!! IMG 02495ba17e7bae1bac6a0e8175f05564 V

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது  அதே திசையில் பயணித்த ஆடை தொழிற்சாலைக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள  ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி!! வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி!! IMG 20190612 WA0005

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை  சேர்ந்த 25 வயதான சிவபெருமாள் கஜேந்திரன் என்ற இளைஞன் மரணடைந்துள்ளார்.

ஹயஸ் ரக வாகனத்தையும் முச்சக்கரவண்டியையும் பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றதுடன் ஹயஸ்வாகன சாரதியையும் கைது செய்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.

வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி!! வவுனியாவில் வாகன விபத்தில் இளைஞன் பலி!! IMG ee0865445198b74385279405edf1ba44 V

மரணமடைந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.