வவுனியா தாண்டிகுளம் பகுதியில் வெள்ளைநாகம் ஒன்று வீதிக்கு வந்தமையால் அதனை பார்க்க மக்கள் ஒன்றுகூடிய சம்பவம் ஒன்று இன்றையதினம் காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை தாண்டிக்குளம் ஒண் மாட் உணவகத்திற்கு அருகில் வயல்வெளியில் இருந்து வெள்ளை நாகம் ஒன்று வீதிக்கு வந்துள்ளது. வீதியால் சென்ற அனைவரும் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு குறித்த பாம்பினை பார்வையிட குவிந்தனர்.

குறித்த பாம்பு வீதியில் நின்ற மோட்டார் சைக்கிள் ஒன்றிற்குள் சென்று ஒழிந்து கொண்டது. இதனால் அதனை வெளியில் எடுத்து விடும் நோக்குடன் உணவகத்திற்கு அருகில் உள்ள சாந்தசோலை நாகபூசணி அம்மன் ஆலயத்திற்கு குறித்த மோட்டார் சைக்கிள் கொண்டு செல்லபட்டு பாம்பு வெளியில் எடுத்து விடப்பட்டது.

குறித்த சம்பவத்தினால் ஏ9 வீதியில் சற்றுநேரம் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG-0f08873a1dd00c8b04f7c1850a41305c-V வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு IMG 0f08873a1dd00c8b04f7c1850a41305c V e1565816626280IMG-3ab45227cd432d85d6c97f26322fa132-V வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு வவுனியாவில் வெள்ளை நாகத்தை பார்க்க குவிந்த மக்கள் ; படங்கள் இணைப்பு IMG 3ab45227cd432d85d6c97f26322fa132 V e1565816692121