ilakkiyainfo

ilakkiyainfo

வாடகைக்கு வீடு, வாடகையாக ”செக்ஸ்”

வாடகைக்கு வீடு, வாடகையாக ”செக்ஸ்”
May 17
20:06 2017

இளம் வயதினர் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களை குறிவைத்து இணையத்தில், தங்கும் வசதிக்கு பிரதிபலனாக பாலுறவுக்கு அழைப்பு விடுக்கும் விளம்பரங்கள் வெளியாவதாக பிபிசியின் ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது.

_95638627_bb139f17-5904-4cb0-9986-0cacb71520ff  வாடகைக்கு வீடு, வாடகையாக ''செக்ஸ்" 95638627 bb139f17 5904 4cb0 9986 0cacb71520ff(தன்னுடன் தங்க ‘குறும்புக்கார பெண்’ வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரம்)

கிரேய்க்ஸ்லிஸ்ட் போன்ற இணையதளங்களில் இதுப்போன்ற விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவை சட்டத்துக்கு உட்பட்டவைதான்.

ஆனால், இதுபோன்ற விளம்பரங்கள் சுரண்டல் மற்றும் சதி என்று தொண்டு நிறுவனங்கள் வர்ணித்துள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் கைல் இதனை சட்டவிரோதமாக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

வாடகைக்கு பதிலாக பாலியல் உறவு என்ற தனக்கு இருந்த ஒரே வழியை நினைத்து தான் எப்படி உணர்ந்தார் என்பதை வர்ணிக்கிறார் மாணவி ஒருவர்.

”அவர் என்னை வீட்டிலிருந்த அறைக்கு அழைத்து சென்றார், குடிப்பதற்கு பானம் வழங்கினார். அதன் பிறகு என்னை மேல் தளத்திற்கு அழைத்து சென்று அறையை காட்டினார்.” என்றார் அந்த பெண்.

தொடர்ந்து பேசியவர், ”தான் என்ன செய்ய நினைத்தாரோ அதை கட்டாயப்படுத்தி செய்வார். எனக்கும் அது பழக்கப்பட்டுவிட்டது. மூன்று முறை உறவுக்குப் பிறகு, நான் உடல் ரீதியாக சுகவீனம் அடைந்துவிட்டேன்.”

‘குறும்புக்கார பெண் தேவை’

மெயிட்ஸ்டோனிலிருந்து நபர் ஒருவர் தன் பெண் தோழியைப்போல நடித்து தன்னுடம் தங்கிக்கொள்ள பெண் ஒருவர் வேண்டும் என்றும், மற்றொரு விளம்பரத்தில் இளம் ஆண்களை குறிவைத்து ”சேவைகள்” பதிலாக ரோசெஸ்டர் மற்றும் பிரைட்டனில் அறைகள் உள்ளன போன்ற விளம்பரங்களை பிபிசியால் பார்க்க முடிந்தது.

தன்னுடன் தங்க ‘குறும்புக்கார பெண்’ வேண்டும் என்று லண்டன் வீட்டு உரிமையாளர் ஒருவர் விளம்பரப்படுத்தியிருந்தார்.

இவ்வாறான விளம்பரங்களை பதிந்துள்ள உரிமையாளர்கள் இந்த வேலை எப்படி ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

”வாரத்திற்கு ஒருமுறை என்று நினைக்கிறேன் அதுமாதிரி, பாலியல் உறவு இருக்கும் வரை எனக்கு சந்தோஷம்தான்” என்றார் வீட்டு உரிமையாளர் ஒருவர்.

_95638626_cd44bc12-f27a-43c4-ba06-b6c10e6c34f4  வாடகைக்கு வீடு, வாடகையாக ''செக்ஸ்" 95638626 cd44bc12 f27a 43c4 ba06 b6c10e6c34f4(வாடகைக்கு வீடு, வாடகையாக `செக்ஸ்” என்பதால் இருதரப்பினருக்கு நன்மையே என்கிறார் வீட்டு உரிமையாளர் ஒருவர்)

`நட்புடன் பலன்’

தன்னுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது என்ற கோரிக்கை உடன் பிபிசியிடம் பேசிய வீட்டு உரிமையாளர் ஒருவர், இதுப்போன்ற விளம்பரங்களுக்கு ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி இதனால் இருதரப்பினருக்கு நன்மையே என்றார்.

”காலியாக இருக்கும் வீட்டிற்கு அதிக வாடகை வாங்குவது குறித்து கூட சாதகமாக்கிக் கொள்வது குறித்து நீங்கள் வாதிடலாம். கட்டாயமாக பாலியல் உறவில் ஈடுப்பட வேண்டும் என்று கட்டாயமில்லை. இதில் உள்ள உண்மை நிலையை அறிந்தே தான் எல்லோரும் இதில் செல்கிறார்கள்.

நான் அதில் கடைசி வகையான நபர், சூழலை சாதகமாக்கிக் கொள்ள நினைப்பவன். இருதரப்பும் மற்றவர் என்ன விரும்புகிறார் என்பதை ஒருவருக்கொருவர் தெரியும். இதனால் யாருக்கும் எந்த நஷ்டமுமில்லை.”

பிரைட்டன் ஓயாசிஸ் திட்டத்திலிருந்து பெண் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த மெல் போட்டர் இதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரித்துள்ளார்.

மேலும், இவ்வகையான விளம்பரங்கள் ஒருவரை சிக்க வைக்கும் திறன் படைத்தது மட்டுமின்றி வன்முறை மற்றும் வன்கொடுமை ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகம் என்று கூறியுள்ளார்.

_95638628_d06d0d1f-1399-4768-bf01-0aafdf10cf0b  வாடகைக்கு வீடு, வாடகையாக ''செக்ஸ்" 95638628 d06d0d1f 1399 4768 bf01 0aafdf10cf0b

வாய்ப்புகள் மறைகின்றன’

அன்சீன் என்ற அடிமை எதிர்ப்பு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த அண்ட்ரூ வாலிஸ் கூறுகையில், ”இதுபோன்ற விளம்பரங்கள் சட்டத்தை மீறாத வகையில் சட்ட விளிம்பிற்கு நெருங்கி செல்கிறது.

”இதை தன்னார்வமாக தேர்ந்தேடுத்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் வாதிடுவார்கள்.

”சுலபமாக பாதிக்கக்கூடிய நபர் இருக்கும் போதுதான் பிரச்சனை தொடங்குகிறது, அப்போது தேர்வுக்கான கருத்து மறைந்துவிடுகிறது.”

வீடற்ற தொண்டு நிறுவனமான சென்டர் பாயிண்ட்டை சேர்ந்த பால் நோப்லெட், இணையதள உரிமையாளர்கள் இதுமாதிரியான விளம்பரங்களுக்கு தங்களுக்கு தாங்களே ஒரு விதியை பின்பற்றி அதன் மூலம் விளம்பரங்களை கண்காணித்து அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

பிபிசி செய்தி

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

காந்தியை கொன்றது "இஸ்மாயில்" என்று கையில் பச்சை குத்தியிருந்த தீவிரவாத இந்து அமைப்பை சேர்ந்த நாதுராம் கோட்சே. 1948 ஜனவரி [...]

தமிழ் நாட்டுகாரர்களின் கலாசாரம் கொஞ்சம் கொஞ்சமாக யாழ்ப்பாணிகளிடம் பரவிக்கொண்டு வருகின்றது , [...]

கொலைகாரன் பிரபாகரனிடம் சைனைட் இல்லாதது சிலருக்கு திகைப்பாக இருக்கலாம் , ஆனால் புலிகளின் அடாவடிகளை நன்கு அறிந்தவர்களுக்கு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News