ilakkiyainfo

ilakkiyainfo

வாயை ஊதச் சொன்னதால் போக்குவரத்து பொலிஸாரை கண்மூடித்தனமாக தாக்கிய நபர்- (வீடியோ)

வாயை ஊதச் சொன்னதால் போக்குவரத்து பொலிஸாரை கண்மூடித்தனமாக தாக்கிய நபர்- (வீடியோ)
October 11
06:23 2018

கர்நாடக மாநிலம் தவாங்கர் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ருத்ரப்பா என்ற நபரை போலீசார் நிறுத்தி விசாரித்தனர். அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, மூச்சு பரிசோதனை செய்வதற்காக அவரிடம் வாயை ஊதச் சொல்லியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான் ஒரு வக்கீல், என்னையே சோதிக்கிறாயா? என்று கூறி போலீசாரை திட்டியுள்ளார்.

ஆனாலும் போலீசார் விடவில்லை. கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்கள். இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நபர், போலீஸ்காரர்களை ஆக்ரோஷமாக தாக்கினார். சாலையோரம் உள்ள கடையில் இருந்த டெரகோட்டா பொம்மைகளை தூக்கி அடித்தார். இதில் ஒரு போலீஸ்காரரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. முரட்டுத்தனமாக மோதி கீழே தள்ளிவிட்டதில் மற்றொரு போலீஸ்காரரும் காயமடைந்தார்.

அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை தங்கள் செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகப் பரவி வருகிறது. போலீசாரை தாக்கிய வழக்கறிஞரின் செயலை பலரும் கண்டித்துள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கறிஞர் ருத்ரப்பாவை போலீசார் கைது செய்தனர். அவர் குடிபோதையில் இருந்தாரா? என்பதை அறிய, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிக்கையில் அவர் போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டால், அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Latest Comments

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

சில நாடுகளில் தேச நலனை கருத்தில் கொண்டு ராணுவம் அரசை கைப்பற்றி அடுத்த தேர்தல் வரை ஆடசி [...]

இந்த அலோலோயா மதமாற்றுக்கார CIA ஏஜென்ட் , உடனடியாக கைது செய்ய பட வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News