ilakkiyainfo

ilakkiyainfo

வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்! (படங்கள் & வீடியோ)

வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்! (படங்கள் & வீடியோ)
January 09
21:57 2017

கஜகஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த சிலருக்கு, கட்டுப்படுத்த முடியாத அளவில் தூங்கும் வினோத நோய் ஒன்று தாக்கியுள்ளது.

Kalachi என்ற கிராமத்தில் கடந்த மார்ச் 2013 முதல் 2015 வரை இந்த வினோதம் தொடர்ந்துள்ளது.

இங்கு வசிக்கும் நபர்கள் தங்களுக்கே தெரியாமல் திடீரென தூங்க தொடங்கி விடுகின்றனர்.

அவ்வாறு தூங்குபவர்கள் சில சமயங்களில் 2 நாட்கள் கழித்து தூக்கத்தில் இருந்து விழித்த கதையும் நடந்துள்ளது.

மேலும், இவ்வாறு நீண்ட நேரம் தூங்கி எழும் அவர்களுக்கு ஞாபக மறதி நோயும் ஏற்பட்டுள்ளது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வினோத நிகழ்வுகளின் காரணங்களை கண்டறிய அறிவியலாளர்கள் பல சோதனைகளை மேற்கொண்டனர்.

பல மருத்துவர்கள் அங்கு வாழும் நபர்களின் ரத்த மாதிரிகளை சோதித்து பார்த்த நிலையில், அறிவியலாளர்கள் சுமார் 7,000 முறை அங்குள்ள மண், நீர், காற்று, என சோதித்து பார்த்துள்ளனர்.

முதலில் பலராலும் இதற்கான காரணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் அந்த கிராமவாசிகள் பெருமளவில் தொடர்ந்து தூக்க நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர்.

2a8ff2c100000578-3162867-image-a-39_1437000217473  வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்! (படங்கள் & வீடியோ) 2A8FF2C100000578 3162867 image a 39 1437000217473பின்னர் அங்கிருந்த மண்ணிலும் நீரிலும் அதிகளவில் கன உலோகங்கள் இருந்ததால், நீரில் எண்ணற்ற வைரஸ்கள், பக்டீரியாக்காள் இருப்பது காரணமாக இருக்குமோ என்று ஆராயப்பட்டது.

அந்த பகுதியில் கதிரியக்கம் அதிகம் இருந்ததால் அது காரணமாக இருக்கலாம் என கருதப்பட்டது.

ஆனால் இவற்றில் எதையுமே அறிவியலாளர்களால் அதிகாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாததால் காரணம் பற்றிய மர்மம் விலகாமலே இருந்துள்ளது.

இந்நிலையில், அங்கு முன்பு செயல்பட்ட யுரேனியம் சுரங்கம் அருகே இருந்தது கண்டறியப்பட்டது.

2a8ff25d00000578-3162867-image-a-34_1437000201525  வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்! (படங்கள் & வீடியோ) 2A8FF25D00000578 3162867 image a 34 1437000201525அதிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைட் எனப்படும் விஷ வாயுவின் தாக்கத்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.

முன்பு 6500 என மக்கள் தொகை கொண்டு விளங்கிய அந்த கிராமத்தில், இன்று சுமார் 700 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், அந்த பழைய யுரேனிய சுரங்கம் தான் காரணம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

2a8ff2a700000578-3162867-image-a-33_1437000200262  வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்! (படங்கள் & வீடியோ) 2A8FF2A700000578 3162867 image a 33 1437000200262

அதில் இருந்து அதிகளவில் வெளியான கார்பன் மோனாக்ஸைட் மற்றும் ஹைட்ரோ கார்பனின் அதிகரிப்பால் ஆக்ஸிஜனின் அளவு காற்றில் பெருமளவில் குறைந்துள்ளது.

இதையடுத்து அங்கு வசித்து வந்த கிராம மக்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டு அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

2a91163500000578-3162867-image-a-42_1437005961604  வாரக்கணக்கில் தூங்கும் விசித்திர கிராமம்! (படங்கள் & வீடியோ) 2A91163500000578 3162867 image a 42 1437005961604

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

March 2017
M T W T F S S
« Feb    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

நாட்டில போர் நடந்துகொண்டிருந்து போது தமிழக சினிமாக்கார்களும், போலி தமிழக சில்லறை அரசியல்வாதிகளான நெடுமாறன், வைகோ, சீமான்: திருமாவளவன்,தியாகு.தாமரை, .... [...]

Onb

Masha allah arumauyana pathiladi...senkodi pontra moolai illathavarkal satru sinthika vendum [...]

யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை பதிப்புரிமை பெற்றது. அனுமதியின்றி பகிர்துவது,. நகலெடுப்பது இந்திய பதிப்புரிமை சட்டப்படி குற்றம். எனவே இந்த [...]

எனக்கு இந்த வேண்டும்பு, த்தகம் எங்கு கிடைக்கும். [...]

Sumathiran M.P is a traitor, he want only all tamils convert to Christian. that also [...]

இலங்கை பத்திரிகைகள்

English News