ilakkiyainfo

ilakkiyainfo

வாள்வெட்டுச் சம்பவங்களின் போது அதை தட்டிக் கேட்க முடியாத நிலையில் பொலிஸார் ; மக்கள் விசனம்

வாள்வெட்டுச் சம்பவங்களின் போது அதை தட்டிக் கேட்க முடியாத நிலையில் பொலிஸார் ; மக்கள் விசனம்
October 15
19:05 2019

யாழில் அண்மைக்காலமாக குழுமோதல்களும் வாள்வெட்டுச் சம்வங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதனை தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ முறையான நடவடிக்கைகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் இரவு வேளைகளில் தங்கள் தேவைகளுக்காக வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

சாவகச்சேரி, சங்கானை .கொக்குவில் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

அண்மையில் சங்கானை பஸ் நிலையம் முன்பாக இரு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. நீண்ட வாள்கள் , பொல்லுகளுடன் இரு குழுக்களிடையே மோதல் சம்வம் நடைபெற்றபோது அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெற்றுச் சோடாப் போத்தல்கள் 100 க்கும் மேல் அடித்து நொருக்கப்பட்டதோடு நடமாடும் மிக்சர் வண்டி ஒன்றின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன.

குறித்த சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து குறித்து பகுதிக்கு மானிப்பாய் பொலிஸார் சென்ற போது இரு குழுக்களும் தப்பியோடிவிட்டனர். பொலிஸாரும் அவர்களைத் துரத்திச் சென்று எவரையும் பிடிக்காமல்விட்டுவிட்டனர்.

இதேவேளை மறுநாள் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் அப்பகுதியில் நின்ற பொலிஸாருக்கு குளிர்பானம் ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார். குறித்த சம்வத்தையும் அப்பகுதியிலுள்ளவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் மாலை 5மணிக்குப் பின்னர் அடிக்கடி இவ்விடத்தில் இடம்பெற்று வருகின்றது. பொலிஸாருக்கும் குறித்த விடையங்கள் அறிவிக்கப்பட்டும் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்காத நிலையே காணப்படுகின்றது இது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

17ம் திகதிக்கு பின் இங்கு , பணம் காயும் , வாழைப்பழ குலையும் சேமிக்கும் இடமாக மாற்றப்பட [...]

இங்கு வேலை செய்யும் தமிழர்கள் நவீன கால அடிமைகள் , இந்த உணவகத்தை புறக்கணிப்பதுடன் [...]

40 வருடம்ங்கள் இவர் ராணுவத்தில் இருந்து என்ன கிழித்தார் ??????????? கோட்டாபய பாதுகாப்பு செயலர் ஆகி முப்படைகளையும் [...]

அங்கு புலி ஆதரவாளர்களை கைது செய்து பாதுகாப்பை உறுதி செய்கின்றனர், ஆனால் இலங்கையில் புலி ஆதரவாளர்கள் சுதந்திரமாக [...]

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News