அரசபுரக்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இருபிள்ளைகளும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப்பிரிவிற்குரிய 5 (தொ) பொறிமுறை காலாட் படையணியினரால் நேற்று பகல் மீட்கப்பட்டனர்

அரசபுரக்குளம் வாவியில் நீராடச் சென்ற தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கும் சந்தர்ப்பத்தில் கூச்சலிட்டனர்.

அச்சமயத்தில் மனிதாபிமான ரீதியில் உதவும் நோக்கத்துடன் இரு படை வீர்கள் தங்களது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் வாவிக்குள் பாய்ந்து அந்த மூவரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் D.G.S அமரசிறி, லான்ஸ் கோப்ரல் T.G.J.P ஆரியரத்ன ஆகியோரே  இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு இவர்களை காப்பாற்றியவர்களாவர்.

பின்னர் வாவியில் மூழ்கிய மூவரும் இராணுவத்தினரது உதவியுடன் பூநகிரி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

பின்பு வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய மேலதிக சிகிச்சைக்காக குறித்த  மூவரும் யாழ் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

1567930808-Drowned-2  வாவியில் மூழ்கிய தாயையும் இரு பிள்ளைகளையும் உயிருடன் மீட்ட படையினர் 1567930808 Drowned 21