ilakkiyainfo

ilakkiyainfo

விக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்

விக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும்  – கபில்
September 30
13:41 2018

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன், தமிழ் ஊடகப் பரப்பில் மாத்­தி­ர­மன்றி இப்­போது சிங்­கள, ஆங்­கில ஊடகப் பரப்­பிலும் அதி­க­ளவில் உலாவும் ஒரு­வ­ராக மாறி­யி­ருக்­கிறார்.

வடக்கில் இரா­ணுவ இருப்­புக்கு எதி­ரான அவ­ரது நிலைப்­பா­டுகள், சமஷ்டி தொடர்­பான அவ­ரது கருத்­துகள் என்­பன முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனை எதிர்­ம­றை­யான கோணத்தில் காட்­டு­வதில் சிங்­கள ஊட­கங்கள் அதிக கவனம் செலுத்தி வந்­தன.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடி­வுக்கு வர இன்னும் 25 நாட்கள் வரையே இருக்­கின்ற நிலையில், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனின் அடுத்­த­கட்ட அர­சியல் பயணம் பற்­றிய செய்­திகள், விவா­தங்­க­ளுக்கு சிங்­கள, ஆங்­கில ஊட­கங்கள் இப்­போது, அதிக முக்­கி­யத்­து­வத்தை கொடுக்க ஆரம்­பித்­துள்­ளன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றிய மிகை­யான, பொய்­யான புர­ளி­யான செய்­தி­களை வெளி­யி­டு­வதும், நாட்டின் இறை­மைக்கும், பாது­காப்­புக்கும் ஆபத்தை விளை­விக்கக் கூடி­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­து­வதும், வழக்­க­மான போக்­கா­கவே இருந்து வந்­துள்­ளது.

இத்­த­கைய பின்­னணிச் சூழலில் இருந்து பார்க்கும் போது, முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னுக்கு சிங்­கள ஊடகப் பரப்பில் அதி­க­ரித்­துள்ள முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­வது கடி­ன­மல்ல. அதா­வது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பைப் பிள­வு­ப­டுத்தி, பல­வீ­னப்­ப­டுத்தும் வாய்ப்­புள்­ள­வ­ராக அவரை அடை­யாளம் கண்­டுள்ள சிங்­கள ஊட­கங்கள், அதனைச் சார்ந்த செய்­தி­களை வெளிப்­ப­டுத்­து­வதில் அக்­கறை கொண்­டுள்­ளன போலும்.

அண்­மையில் ஒரு சிங்­கள இதழில் வெளி­யான செய்­தியை ஆங்­கில ஊடகம் ஒன்று வெளி­யிட்­டி­ருந்­தது. அடுத்த மாதம் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் புதிய கட்­சியை-, கூட்­ட­ணியை அறி­விக்கப் போகிறார் என்­பதே அந்தச் செய்­தியின் சுருக்கம்.

அவ­ருடன், ஆனந்­த­சங்­கரி தலை­மை­யி­லான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியும், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான அகில இலங்கை தமிழ் காங்­கி­ரஸும் கூட்டுச் சேரப் போவ­தா­கவும், அந்தச் செய்­தியில் கூறப்­பட்­டி­ருந்­தது.

இந்த இரண்டு கட்­சி­களும், அவற்றின் தலை­வர்­களும் கீரியும் பாம்­பு­மா­கவே இருக்­கி­றார்கள். இற்றை வரைக்கும் அவர்­க­ளுக்குள் இணங்கிப் போவ­தற்­கான எந்த சமிக்­ஞை­களும் இல்லை என்­பது தான் உண்மை. அதனை சில­வே­ளை­களில் குறித்த சிங்­கள ஊடகம் அறி­யாமல் இருந்­தி­ருக்­கலாம்.

அது­போக, இன்­னொரு சிங்­கள ஊட­கத்­துக்கு ஆனந்­த­சங்­கரி ஒரு செவ்­வியைக் கொடுத்­தி­ருந்தார். அதில் அவர், முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் அர­சி­ய­லுக்குப் பொருத்­த­மா­ன­வ­ரில்லை,

அவர் தமிழ் மக்­க­ளுக்கு எதை­யா­வது செய்ய விரும்­பினால் வேறே­தா­வது வழியில் முயற்­சிக்க வேண்டும்” என்று குறிப்­பிட்­டி­ருந்தார்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் முன்­வந்தால், அவ­ருக்கு தமது கட்­சி­யான தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணியின் தலைமைப் பத­வியைத் தந்து விடத் தயா­ராக இருக்­கிறேன் என்று சில காலத்­துக்கு முன்னர் கூறிய ஆனந்­த­சங்­கரி தான் இப்­போது, அவ­ருக்கு அர­சியல் சரிப்­பட்டு வராது என்று கூறி­யி­ருக்­கிறார்.

அவர் இப்­படிக் கூறு­வது புதி­தான விட­ய­மல்ல தான்.என்­றாலும்,

விக்­னேஸ்­வ­ரனின் கூட்­ட­ணியில், ஆனந்­த­சங்­க­ரியின் கட்­சியும் இடம்­பெறப் போகி­றது என்று ஒரு சிங்­கள ஊட­கமும், அவ­ருக்கு அர­சியல் சரிப்­பட்டு வராது என்று அதே ஆனந்­த­சங்­கரி கூறி­யதை இன்­னொரு சிங்­கள ஊட­கமும் சம­கா­லத்தில் செய்­தி­யாக்­கி­யி­ருந்­தமை தான் ஆச்­ச­ரி­ய­மா­னது.

கிட்­டத்­தட்ட இதே முரண்­பட்ட கருத்துச் சூழல் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ர­னிடம் இருந்தும் வெளிப்­பட்டுக் கொண்டு தான் இருக்­கி­றது.

ஓரிரு வாரங்­க­ளுக்கு முன்னர் ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­தி­ருந்த செவ்­வியில், 2009இல் ஏற்­றுக்­கொண்ட வகி­பாகம் மற்றும் அணு­கு­மு­றையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தோல்வி கண்டு விட்­டது என்று கூறி­யி­ருந்த முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், கடந்­த­வாரம், அதே கூட்­ட­மைப்பில் போட்­டி­யிடத் தயார் என்றும் கூறி­யி­ருக்­கிறார். (8ஆம் பக்கம் பார்க்க)

விக்கினேஸ்வரனும்…. (தொடர்ச்சி)

அதற்­காக அவர் சில நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கிறார் என்­பது வேறு விடயம்.

கூட்­ட­மைப்பை ஒரு அர­சியல் கட்­சி­யாகப் பதிவு செய்து, கூட்­ட­மைப்பின் தலை­மைத்­து­வத்தில் மாற்றம் செய்­யப்­பட்டால், மீண்டும் கூட்­ட­மைப்பில் போட்­டி­யி­டலாம் என்ற வகையில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

கூட்­ட­மைப்பை பதிவு செய்­வதோ, கூட்­ட­மைப்பு தலை­மைத்­து­வத்தில் மாற்­றங்கள் செய்­யப்­ப­டு­வதோ நடக்­கக்­கூ­டிய காரி­ய­மன்று. இது அவ­ருக்குத் தெரிந்­ததால் தான் அப்­படிக் கூறி­னாரோ தெரி­ய­வில்லை.

எது­எவ்­வா­றா­யினும், தோல்­வி­ய­டைந்து விட்­ட­தாக அவரே அறி­வித்து விட்ட கூட்­ட­மைப்பில் மீண்டும் போட்­டி­யிட இணங்­கு­வது என்­பது அவ­ருக்கு தலை­கு­னி­வான விடயம் தான்.

முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் போட்­டி­யிட விரும்­பு­கி­றாரோ இல்­லையோ தெரி­ய­வில்லை. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பிர­தான பங்­காளிக் கட்­சி­யாக தமி­ழ­ரசுக் கட்சி அவரை நிறுத்தத் தயா­ராக இல்லை என்­பது மட்டும் தெளி­வாகத் தெரி­கி­றது.

விக்­னேஸ்­வரன் வெளி­யே­று­வது, கூட்­ட­மைப்பைப் பல­வீ­னப்­ப­டுத்தும் என்று புளொட் கரு­தி­னாலும், விக்­னேஸ்­வ­ர­னுக்குப் பின்னால் ரெலோவின் ஒரு குறிப்­பிட்ட சிலர் சென்று விடக் கூடும் என்ற கருத்­துக்கள் காணப்­பட்­டாலும், தமி­ழ­ரசுக் கட்­சிக்குள் அவ­ருக்கு எதி­ரான நிலை வலுப்­பெற்று விட்­டது.

அண்­மைக்­கா­லத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பற்­றியும், அதன் தலை­மைத்­துவம் பற்­றியும் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன் வெளி­யிட்ட கருத்து, அவரைத் தொடர்ந்து கூட்­ட­மைப்­புக்குள் ஒட்ட வைத்­தி­ருப்­ப­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­ட­வர்­க­ளையும் கூட சலிப்­ப­டைய வைத்து விட்­டது.

விக்­னேஸ்­வரன் இல்­லாமல் மாகா­ண­சபைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்சி தயா­ராகி விட்­டது.

விக்­னேஸ்­வ­ர­னுக்கும், கூட்­ட­மைப்புத் தலை­மைக்கும் இடை­யி­லான ஆகப் பிந்­திய விரிசல் தீவி­ர­ம­டைந்த பின்னர், சம்­பந்­த­னுக்கும், விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் சந்­திப்பு நடக்கப் போவ­தாக பர­வ­லான செய்­திகள் வெளி­யா­கின. அது­பற்­றிய எதிர்­பார்ப்­பு­களும் பல­மாக காணப்­பட்­டன.

வேண்டா வெறுப்­பாக அத்­த­கைய சந்­திப்­புக்­கான வாய்ப்­புகள் கோரப்­பட்ட போதும், அதற்­கான சூழல் உரு­வா­க­வில்லை.

தமக்கும் சம்­பந்­த­னுக்கும் எந்தப் பிரச்­சி­னையும் இல்லை என்று சொல்லிக் கொண்டே, கூட்­ட­மைப்பின் தலைமை மீது முத­ல­மைச்சர் பழியைப் போட்டுக் கொண்­டி­ருந்­தது சம்­பந்­த­னுக்குப் பிடிக்­காமல் போயி­ருக்­கலாம்.

அவரும் கூட, தன்னை விக்­னேஸ்­வரன் சந்­திக்க விரும்­பினால் எப்­போதும் சந்­திக்­கலாம் என்று கூறி விட்டு, அதற்­கான வாய்ப்பைக் கொடுக்­காமல் நழுவிக் கொண்டு வரு­கிறார்.

ஆக, இப்­போ­தைய நிலையில், இரண்டு பேரும் சந்­தித்துக் கொள்­வதை விரும்­ப­வில்லை.. அல்­லது சந்­திக்­காமல் இருப்­பதே நல்­லது என்று அவர்­க­ளுக்குள் ஓர் இணக்கம் உரு­வா­கி­யி­ருப்­ப­தா­கவே தோன்­று­கி­றது.

வடக்கு மாகாண சபையின் ஆயுள்­காலம் முடிந்த பின்னர், தமிழ் மக்கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடுதல் கவனம் செலுத்தப் போவ­தாக விக்­னேஸ்­வரன் கூறி­யி­ருக்­கிறார்.

அவ­ரது அடுத்­த­கட்ட அர­சி­ய­லுக்­கான தளம் அதுவே என்­பதால், அதன் மீது கவனம் செலுத்­து­வதே அவ­சி­ய­மாக இருக்கும்.

எனினும், முத­ல­மைச்சர் பதவி போன பின்னர் தன் மீது வரக் கூடிய குற்­றச்­சாட்­டு­களை சமா­ளிக்க இப்­போதே பாது­காப்பு வியூ­கங்­களை அவர் வகுக்கத் தொடங்கி விட்டார்.

வடக்கு மாகாண சபையின் வினைத்­திறன் தொடர்­பாக, தன் மீது சர­மா­ரி­யான குற்­றச்­சாட்­டுகள் வரும் வாய்ப்பு இருப்­பதை உணர்ந்து இப்­போதே- அதி­கா­ரத்தில் இருக்கும் போதே- தர­வு­களைத் திரட்டி ஒரு அறிக்­கையைத் தயார்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார்.

வடக்கு மாகாண சபை என்ன செய்­தது என்ற விளக்­கங்­களைக் கொடுப்­பதே அந்த அறிக்கை. அடுத்த கட்ட அர­சியல் பய­ணத்­துக்­கான தடை­களை அகற்­று­வ­தற்கு இந்த அறிக்கை முத­ல­மைச்­ச­ருக்கு முக்­கி­ய­மா­னது.

ஏனென்றால், வரும் நாட்­களில், கூட்­ட­மைப்புத் தலைமை கூட, “எல்­லா­வற்­றையும் பார்த்துக் கொள்­ளுங்கள் என்று தான் முத­ல­மைச்­ச­ரிடம் கொடுத்தோம், அதனை அவர் கெடுத்து விட்டார்” என்று, தான் பிர­சாரம் செய்யப் போகி­றது.

அதனை எதிர்­கொள்­வ­தற்குத் தான், முத­ல­மைச்­சரும் இத்­த­கைய அறிக்கையை வெளியிடத் தயாராகி வருகிறார். அத்துடன், வடக்கு மாகாணசபையின் தோல்விக்கும், சபையின் ஒரு பகுதி உறுப்பினர்களே காரணம் என்ற குற்றச்சாட்டையும் முதலமைச்சர் இப்போதே அழுத்தமாக கூற முற்பட்டிருக்கிறார்.

2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்பட்ட போது கூட்டமைப்புக்குள்ளேயும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. நீதியரசர் ஒரு சிறந்த நிர்வாகியாக இருப்பாரா என்ற வலுவான கேள்வி இருந்தது.

முதலமைச்சர் பதவி அவரை விட்டுச் செல்லும் இந்தச் சூழலிலும் கூட இத்தகைய கேள்வி இன்னும் வலுவடைந்திருக்கிறதே தவிர குறையவில்லை.

விக்னேஸ்வரன் பற்றிய அரசியல் பார்வைகள் மாற்றமடைந்திருந்தாலும், அவர் மீதான அரசியல் வசீகரத்தன்மை குறைந்து விட்டதாகத் தெரியவில்லை.

அந்த வசீகரத் தன்மை எந்தளவுக்கு அவருக்கு வாக்குகளைப் பெற்றுத் தரும் என்பதை பொறுத்திருந்து தான பார்க்க வேண்டும்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News