விக்னேஸ்வரனை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சம்பந்தமாக இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜரான வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
வட மாகாண போக்குவரத்து, உள்ளூராட்சி மற்றும் மீன்பிடித்துறை அமைச்சாராக பா.டெனீஸ்வரன் பதவி வகிக்க வேண்டும் என்று நீதிமன்றம் வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றை அவமதித்த குற்றச்சாட்டின் பிரகாரமே முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகினர்.
இதன்போதே நீதிவான் முதலமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளார்.
There are no comments at the moment, do you want to add one?
Write a comment