ilakkiyainfo

ilakkiyainfo

‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்…!’ – செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு!

‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்…!’ – செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு!
October 12
19:46 2017

“எனக்கு விஜய் சார்னா ரொம்பப் பிடிக்கும். ஆனா அவர் கூடவே நடிப்பேன்னு நான் நெனச்சுக்கூட பார்த்தது இல்ல. ஸ்கூல்ல கலைவிழாக்கள்ல பங்கெடுத்துக்கிட்டதோட சரி.

நான் கேமரா முன்னால நடிச்சதே இல்ல. எல்லாத்துக்கும் அட்லீ சார்தான் காரணம். ஷூட்டிங் நாள்களையெல்லாம் இப்ப நினைச்சாக் கூட ஃபாரீனுக்கு போன மாதிரி இருக்குது” – பால்யத்தின் கனவுகள் மாறாமல் பேசுகிறார் ‘ஜூனியர் வடிவேலு’ ராஜமாணிக்கம்.

ஒடிந்த தேகம், ‘ராசாவின் மனசு’ காலத்து வடிவேலுவின் உடல்மொழி என அப்படியே வடிவேலுவை பிரதிபலிக்கிறார் ராஜமாணிக்கம். பேச்சிலும் அதே கிராமத்து மண்மணம் வீசுகிறது.

வடிவேலுவின் ஜூனியர் வெர்ஷனாக மெர்சலில் மெர்சல் காட்டியிருக்கும் ராஜமாணிக்கம் தற்போது பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார்.

எப்படிக் கிடைச்சது இந்த வாய்ப்பு?

”அட்லீ சாரோட அடுத்த படத்துக்கு சின்ன வயசு வடிவேல் சாயல்ல ஆள் கேட்குறாங்கனு எங்க மாமா நாகேஷ் பூபதிகிட்ட அவர் ஃப்ரெண்ட் சொல்லவும், என்னய மதுரை ஆடிஷனுக்குக் கூட்டிட்டு போனாங்க. வைகைப்புயல் மாதிரி நடிக்க, பேசச் சொல்லி டெஸ்ட் வெச்சாங்க.

அப்புறம் சென்னைல அடுத்த கட்ட ஆடிஷன் நடந்தது. அதுல அட்லீ சார் பார்த்துட்டு டபுள் ஓகேனு சொல்லிட்டார்”.

எப்படி இருந்துச்சு விஜய்யோட நடிச்ச அனுபவம்?

mersal_vadivelu_13175 ‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்...!’ - செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு! ‘விஜய் அண்ணாவின் அந்த அட்வைஸ்...!’ - செம குஷி ‘மெர்சல்’ ஜூனியர் வடிவேலு! mersal vadivelu 13175

‘முதல் நாள் முதல் ஷாட்டே விஜய் சார் கூடத்தான். அன்னைல இருந்து ஒருவாரத்துக்கு என்னய நானே கையில புடிக்க முடியாம பறந்துகிட்டு இருந்தேன்.

பனையூர், ராஜஸ்தான்னு மொத்தம் ஐம்பது நாள் நடிக்க வச்சாங்க. டைரக்டர் சாரும் விஜய் சாரும் நல்லா நடிக்கிறேன்னு சொன்னாங்க. கூடவே நல்லா படிக்கணும்னு அட்வைஸ் பண்ணாங்க. இப்போதைக்கு அவ்ளோதான் சொல்லமுடியும் அண்ணே! படம் வரவும் பார்த்துட்டுச் சொல்லுங்க.”

உங்க குடும்பம் பத்தி சொல்லுங்க.?

”அப்பா அம்மா ரெண்டு பேருமே கூலி வேலை பார்த்துதான் படிக்க வைக்கிறாங்க. சொந்த ஊரு ராசிபுரம் பக்கத்துல சின்ன கிராமம். அவுங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.

நடிக்கப் போறேன்னு சொன்னதும் ஃப்ரெண்ட்ஸ் எல்லோருமே என்னய ஹீரோ மாதிரி பாக்க ஆரம்பிச்சாங்க. விஜய் சார்கிட்ட அவுங்கள பத்தி சொல்லச் சொல்லி கேட்டுகிட்டாங்க.

ஐம்பது நாள் லீவ்னா ஸ்கூல்ல ஏதாவது சொல்லியிருப்பாங்களே?

”ஷூட்டிங் டைம்ல நான் ஒன்பதாவது படிச்சிட்டு இருந்தேன். அதனால நான் கேட்குறப்ப எல்லாம் லீவ் குடுத்தாலும் கரெக்ட்டா படிக்க வச்சுருவாங்க எங்க ஸ்கூல்ல. இப்போ பத்தாவது வந்தாச்சு. இனியும் லீவ் எடுத்துகிட்டு இருக்க முடியாதே. அதனால, லீவுக்கெல்லாம் லீவு விட்டு படிச்சுக்கிட்டு இருக்கேன்.

அப்போ சினிமாவுல நடிக்கிறதுக்கும் லீவ் விட்டாச்சா?

தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்கணும்னு ஆசை இருக்கு. அதே சமயம், படிச்சு டாக்டராகணுங்கிற கனவும் இருக்கு. பார்ப்போம் அண்ணே! என வடிவேலு ஸ்டைலிலேயே முடிக்கிறார் ராஜமாணிக்கம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

பிரதான செய்திகள்

    அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்”  தனித்து கையாண்டமையே  விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

அனைத்து விட­யங்­க­ளையும் ”பிர­பா­க­ர­ன்” தனித்து கையாண்டமையே விடுதலைப் போராட்டம் தோல்வி கண்­ட­மைக்கு காரணம்!! (இம்மானுவல் அடிகளார் வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வி)

0 comment Read Full Article
    எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது  ஏழை இளைஞனின் உயிரை பறித்து  உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

எமனுக்கே எமன்!! : 74 வயது நட­ரா­ஜனை காப்பாற்ற 19 வயது ஏழை இளைஞனின் உயிரை பறித்து உட­லு­றுப்­பு­களை அபகரித்த கொடுமை!!

0 comment Read Full Article
    “நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

“நாம் தனிநாடு கோரவில்லை சுயாட்சியே கோருகிறோம்: தாய்லாந்து பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம்!! (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -7) -வி.சிவலிங்கம்

0 comment Read Full Article
    தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

தமிழ்த்தரப்பு அரசியலின் அவலங்கள் – கருணாகரன் (கட்டுரை)

0 comment Read Full Article

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2017
M T W T F S S
« Sep    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Latest Comments

புலி கூடடத்திடம் வன்னியின் அடித்த காசில் நல்லா கலர் காட்டுகின்றான் , வெட்டி என்ன இவன் அம்மணமாக போனால் [...]

சிங்களவர்களின் வீரத்தின் முன்னாள் காசு கொடுத்து காம்ப் அடிக்கும் கொலைகார புலி குழுவால் ஒரு மயிரையும் புடுங்க முடியாது. வாழ்க [...]

துரோகி மைத்திரியை தெரிவு செய்த ஈன தமிழ்களுக்கு அவன் கொடுத்த மற்றொரு பரிசு, ஏற்க்கனவே கடந்த வருடம் [...]

உங்கள் அறிவை கண்டு வியக்க... காந்தியை கோட்சே கொன்றது 1948 ஜனவரி 30, கோட்சே அவ்விடமே கைது செய்யப்பட்டு விசாரணை [...]

நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் தான் இந்த கொலைக்கு பின்னால் இருக்க வேண்டும் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News