ilakkiyainfo

ilakkiyainfo

 Breaking News

வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க ‘பாரிய இயந்திரம்’ கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!!

வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க ‘பாரிய இயந்திரம்’ கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை  தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!!
July 14
03:54 2015

 

யாழ். ஊர்­கா­வற்­றுறை புங்­கு­டு­தீவுப் பிர­தே­சத்தில் மாணவி வித்­தியா துஷ்­பி­ர­யோ­கத்­திற்­குட்­ப­டுத்­தப்­பட்டு படுகொலை செய்­யப்­ப­ட­முன்னர் அத­னுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் அனை­வரும் ஓரி­டத்தில் ஒன்­று­கூடி மது­பானம் அருந்தி சிகரட் புகைத்­துள்­ள­தா­கவும் அந்த இடத்­தி­லி­ருந்து டி.என்.ஏ. கூறு­களைப் பெற்றக்கொள்வதைத் தடுக்க அண்­மையில் அவ்­விடம் டோசர் இயந்­திரம் கொண்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதா­கவும் பாதிக்­கப்­பட்ட தரப்பின் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனுரடீசில்­வா­வினால் மன்றின் கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது.

thavrasa வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க 'பாரிய இயந்திரம்' கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை  தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!! thavrasa

(மாணவி வித்தியாவின் படுகொலையின் பின் தீவகத்தில் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு! http://www.allaiyoor.com/?p=1966)

அது­தொ­டர்பில் விசேட விசா­ர­ணை­யொன்று பாதிக்­கப்­பட்ட தரப்­பி­னரால் கோரப்­பட்ட நிலையில் கைதா­கி­யுள்ள 9 சந்­தே­க­ந­பர்­க­ளையும் மேலும் ஒரு மாத காலத்­திற்கு நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசா­ரிக்க புலனாய்வுப் பிரி­வி­னரின் விண்­ணப்­பத்­திற்­க­மைய நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது.

அத்­துடன் சந்­தே­க­ந­பர்­க­ளி­ட­மி­ருந்தும் அவர்­க­ளது உற­வி­னர்­க­ளி­ட­மி­ருந்தும் கைப்­பற்­றப்­பட்ட கைய­டக்­கத்­தொலை­பே­சிகள்,  ரெப் ஆகி­ய­வற்றை மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு பரி­சோ­த­னைக்­காக அனுப்­பவும் ஏனைய தட­யங்கள் தொடர்­பாக அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் உள்­ளிட்­ட­வர்­களின் அறிக்­கையைப் பெறவும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு நேற்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

பாட­சாலை மாணவி வித்­தியா படு­கொலை வழக்கு நேற்று ஊர்­கா­வற்­றுறை பிர­தான நீதிவான் எஸ்.லெனின்­குமார் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

vithya-11 வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க 'பாரிய இயந்திரம்' கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை  தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!! vithya 11சந்­தே­க­ந­பர்கள் மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை

வழக்கு விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­போது வழக்குத் தொடுநர் சார்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் கூட்­டுக்­கொள்ளை தொடர்­பான விசா­ரணைப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சண்­டிமல் ஆஜராகியிருந்­தார்.

பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரான வித்­தி­யாவின் குடும்­பத்­தினர் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அனுர டீ சில்வா, சிந்தக்க அம­ர­சிந்த, தனந்த தேசப்­பி­ரிய ஆகி­யோ­ருடன் சட்­டத்­த­ரணி அம்­பிகா ஆகியோர் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

பிர­தி­வா­திகள் சார்பில் எவரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ராத நிலையில் அவர்­களும் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருக்க­வில்லை.

kv_thavarasa_06 வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க 'பாரிய இயந்திரம்' கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை  தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!! kv thavarasa 06சிரேஷ்ட சட்­டத்­த­ரணி தவ­ராசா விலகல்

இது­வரை பாதிக்­கப்­பட்ட வித்­தியா குடும்பம் சார்பில் மன்றில் ஆஜ­ராகி வந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வீ.தவராசா நேற்று மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

அவர் இந்த வழக்­கி­லி­ருந்து வில­கிக்­கொண்­ட­தாக அறி­ய­மு­டிந்­தது. பிர­பல வர்த்­தகர் என அறி­யப்­படும் ஒரு­வரின் பின்­ன­ணி­யூ­டாக தொடர்ச்­சி­யான இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­பட்டு வந்­த­மையால் அவர் இவ்­வாறு விலகிக்கொண்­ட­தாக அறி­ய­மு­டிந்­தது.

(வித்தியாவின்  இவ் வழக்கில் நீதியை நிலைநாட்டுவார் என நம்பியிருந்த  புங்குடுதீவு மக்களுக்கு,   வர்த்தகர் ஒருவரின்  இடையூறால்  தான்?? கே.வி.தவராசா விலகியுள்ளார்  என்பது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக இருக்கும்.)

சந்­தே­க­ந­பர்­களை ஆஜர்­ப­டுத்­து­வதில் பாது­காப்பு சிக்கல்

வழக்கு ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உப­பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சண்­டிமல் மேலதிக விசா­ரணை அறிக்­கையை நீதிவான் லெனின்­கு­மா­ரிடம் சமர்ப்­பித்­த­துடன் சந்­தே­க­ந­பர்­களை மன்றில் ஆஜர்­ப­டுத்­து­வதில் பாது­காப்பு சிக்­க­லுள்­ள­தாக குறிப்­பிட்டார்.

மேல­திக அறிக்­கைக்கு மேல­தி­க­மாக மாணவி வித்­தி­யாவின் இரத்த மாதிரி, சந்­தேக நபர்­க­ளது இரத்த மாதிரி ஆகி­யன பகுப்­பாய்­விற்கு உட்­ப­டுத்­தப்­பட்டு பெறப்­பட்ட அறிக்கை, தடயப் பொருட்­களை பரி­சோ­த­னைக்கு உட்படுத்­து­வது தொடர்­பி­லான மேலும் சில ஆவ­ணங்­களும் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டன.

நேற்­றைய தினம் பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுக்­களை ஏற்கும் இறுதித் தினம் என்­பதால் சந்­தேகநபர்­க­ளுக்கு உரிய பாது­காப்பை பெற்­றுக்­கொ­டுப்­பதில் சிக்கல் உள்­ள­தா­கவும் பாது­காப்பு குறை­பாட்­டுடன் அவர்­களை மன்றில் ஆஜர்­ப­டுத்த அழைத்து வந்தால் மீண்டும் யாழ். பிர­தே­சத்தில் அமை­தி­யின்­மை­யொன்று ஏற்­ப­டலாம் என்ற அச்­சு­றுத்தல் கார­ண­மா­கவே அவர்­களை அழைத்து வர­வில்லை என அவர் நீதி­வா­னுக்கு விளக்­க­ம­ளித்தார்.

அத்­துடன் சந்­தே­க­ந­பர்­களை கொழும்பு பிர­தான நீதிவான் முன்­னி­லையில் ஆஜர் ப­டுத்­து­வ­தா­கவும் அவர் சுட்டிக்­காட்­டினார்.

மேலும் 30 நாட்­க­ளுக்கு தடுப்­புக்­காவல்

இத­னை­ய­டுத்து தனது கையி­லி­ருந்த பாது­காப்பு அமைச்சின் விசேட தடுப்­புக்­காவல் உத்­த­ரவுப் பத்­தி­ரத்தை நீதிவான் லெனின் ­கு­மா­ரிடம் சமர்ப்­பித்த உப­பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் சண்­டிமல் சந்­தே­க­ந­பர்கள் ஒன்­பது பேரையும் மேலும் ஒரு மாதத்­திற்கு பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைத்து விசா­ரிப்­ப­தற்­கான பாது­காப்பு அமைச்சின் அனு­மதி கிடைத்­துள்­ள­தா­கவும் அதனை மன்றில் சமர்ப்­பிப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார்.

அத்­துடன் சந்­தே­க­ந­பர்­க­ளான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார், பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார், பூபா­ல­சிங்கம் தவக்குமார், மகா­லிங்கம் சஷிந்­தரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­காசன், சிவ­தேவன் குஷாந்தன், பழ­னி­ரூ­ப­சிங்கம் குக­நாதன், ஜெய­தரன் கோகிலன் அல்­லது கண்ணன் மற்றும் சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசிக்­குமார் ஆகி­யோரை கடந்த ஜுன் 15ஆம் திகதி பெற்­றுக்­கொண்ட தடுப்­புக்­காவல் உத்­த­ரவின் கீழ் விசா­ரித்­ததில் பல்வேறு தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அது­தொ­டர்பில் மேல­திக அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்டுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

அதனால் மேலும் 30 நாள் சந்­தே­க­ந­பர்­களை தடுத்­து­வைத்து தொடர்ந்து விசா­ரணை செய்ய எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.

பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ர­ணி­களின் வாதம்

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் உப­பொலிஸ் பரி­சோ­தகர் மேற்­படி தமது நிலைப்­பாட்டை நீதி­வா­னுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்பு சார்­பான சட்­டத்­த­ர­ணிகள் தமது வாதத்தை முன்­வைத்­தனர்.

இதன்­போது வாதத்தை முன்­வைத்தார் சட்­டத்­த­ரணி இந்­தி­ர­திஸ்ஸ, வித்­தியா படு­கொலை விசா­ர­ணை­களை கடந்த ஜுன் முதலாம் திக­தி­யி­லி­ருந்து புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்து வரு­வ­தாக அறி­கிறேன்.

அவர்கள் சடலம் காணப்­பட்ட இடத்தை சென்று பரி­சோ­தித்­த­தா­கவும் அறி­கிறேன். இந்த வழக்கைப் பொறுத்தவரை டீ.என்.ஏ. சாட்­சிகள் மிக முக்­கி­ய­மா­னவை.

மாணவி வித்­தியா பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை­செய்­யப்­பட முன்னர் அவர் கடத்­தப்­பட்டுள்ளார். அவ்­வாறு அவர் கடத்­தப்­பட முன்னர் சந்­தே­க­ந­பர்கள் அனை­வரும் குறித்த வழியில் ஒன்­று­கூடி காத்திருந்­துள்­ளனர்.

இவ்­வாறு அவர்கள் ஒன்­று­கூ­டி­ய­போது சிகரட் புகைத்­துள்­ளனர். அத்­துடன் மது­பானம் அருந்­தி­யுள்­ளனர். அவ்வாறு அவர்கள் நடந்­து­கொண்­டி­ருப்பின் அவர்கள் ஒன்­று­கூ­டி­ய­தாகக் கூறப்­படும் இடத்தில் சிகரட் எச்­சங்கள், மது அருந்த பயன்­ப­டுத்­திய கிண்­ணங்கள் உள்­ளிட்­டவை அங்கு கைவி­டப்­பட்­டி­ருந்­தி­ருக்கும்.

அப்­ப­டி­யானால் அந்த இடத்தை பொலி­ஸாரும் புல­னாய்வுப் பிரி­வி­னரும் சோதனை செய்து சிகரட் எச்­சங்களையும் மதுக்­கிண்­ணங்­க­ளையும் கைப்­பற்­றி­யி­ருப்பின் அதி­லுள்ள டீ.என்.ஏ. மூலக்­கூ­றுகள் இந்த வழக்கிற்கு மேலும் உறு­து­ணை­யாக இருந்­தி­ருக்கும்.

எனினும் அந்த ஆதா­ரங்­களை அல்­லது தட­யங்­களை இது­வரை விசா­ரணைப் பிரி­வினர் கைப்­பற்­ற­வில்லை.

இவ்­வா­றி­ருக்க சந்­தே­க­ந­பர்கள் ஒன்­று­கூ­டி­ய­தாக கூறப்­படும் இடம் டோசர் இயந்­திரம் கொண்டு தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மையில் இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­ட­போது வித்­தி­யாவின் அண்­ணனும் பிர­தே­சத்தின் கிரா­ம­சே­வ­கரும் எதிர்ப்பு வெளி­யிட்­டுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து அந்­ந­ட­வ­டிக்கை பாதியில் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. எனவே அது­தொ­டர்பில் உரிய விசாரணையொன்று அவ­சி­ய­மாகும். இது­தொ­டர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் கிரா­ம­சே­வ­க­ரிடம் வாக்­கு­மூலம் பதி­வுசெய்து தக­வல்­களைப் பெற்­றுக்­கொள்ள முடியும். நாமும் அவர்­க­ளுக்கு தக­வல்­களை வழங்க தயா­ரா­கவே உள்ளோம் என்றார்.

நீதி­வானின் வினவல்

இந்த வாதத்தை தொடர்ந்து நீதிவான் லெனின் குமார் இது தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரி­டமும் மன்றில் இருந்த ஊர்­கா­வற்­றுறை பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­கா­ரி­யி­டமும் இது தொடர்பில் வின­வினார்.

எனினும் அவ்­வா­றான எந்த தக­வலும் முறைப்­பா­டு­களும் தமக்குக் கிடைக்­க­வில்லை என அவர்கள் நீதிவானிடம் தெரி­வித்­தனர். எனினும் தமக்கு அது தொடர்பில் தகவல் கிடைத்­துள்­ள­தாக சட்­டத்­த­ர­ணிகள் எதிர்த்து கருத்து முன் வைத்­தனர்.

குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணைக்கு ஒப்­புதல்

இத­னை­ய­டுத்து நீதிவான் எஸ்.லெனின் குமார் அது தொடர்பில் கிராம சேவ­க­ரிடம் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்று விட­யத்தை தெளி­வு­ப­டுத்திக் கொள்ள முடியும் என ஆலோ­சனை முன் வைக்கும் போதே, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உப பொலிஸ் பரி­சோ­தகர் பின் வரு­மாறு நீதி­வா­னிடம் உறுதி வழங்­கினார்.

இப்­போது மன்றில் பாதிக்­கப்­பட்ட சட்­டத்­த­ர­ணிகள் முன் வைக்கும் விடயம் குறித்து இன்­றைய தினமே நான் உட­ன­டி­யாக விசா­ரணை அதி­கா­ரி­களை தெளி­வு­ப­டுத்­து­கின்றேன்.

அது தொடர்பில் உட­ன­டி­யாக விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றார்.

கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு தொலை நகல் அனுப்­பிய ஊர்­கா­வற்­றுறை நீதிவான்

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்­களை பரி­சீ­லனை செய்­யு­மாறு வேண்டி கொழும்பு பிர­தான நீதி­வா­னுக்கு தொலை நகல் ஒன்­றினை அனுப்­பிய நீதிவான் லெனின் குமார் பாது­காப்பு அமைச்சின் அனு­ம­தி­யுடன் கோரப்­பட்ட மேல­திக தடுப்புக் காவல் உத்­த­ர­வுக்கும் அனு­ம­தி­ய­ளித்தார்.

தடுப்புக் காவல் உத்­த­ரவு தொடர்பில் சல­ச­லப்பு

இத­னை­ய­டுத்து பாதிக்­கப்­பட்ட தரப்­பான வித்­தியா குடும்பம் சார்பில் சுயேச்­சை­யாக மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி அம்­பிகா, மேல­தி­க­மாக இன்னும் 30 நாட்­க­ளுக்கு சந்­தேக நபர்­களை தடுத்து வைப்­பது குறித்து அதிருப்தி தெரி­வித்­த­துடன் அது விசா­ர­ணையை இழுத்­த­டிக்கும் செயற்­பாடா என வின­வினார்.

ஏனைய சட்­டத்­த­ர­ணிகள் பாய்ச்சல்

இத­னை­ய­டுத்து மன்றில் வித்­தியா குடும்பம் சார்பில் நேற்று ஆஜ­ரா­கி­யி­ருந்த ஏனைய சட்­டத்­த­ர­ணிகள், சந்­தேக நபர்­களை தடுத்து வைத்து விசா­ரணை செய்­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி ஒருவர் எதிர்ப்பு தெரிவிப்­பது ஏன் என வினா எழுப்­பி­ய­துடன் அதனை புரிந்­து­கொள்ள முடி­யாமல் உள்­ள­த­ாகவும் குறிப்­பிட்­டனர்.

திருப்­தி­யின்றேல் உயர் நீதி­மன்றை நாடலாம்

இத­னை­ய­டுத்து கருத்து தெரி­வித்த நீதிவான் எஸ்.லெனின்குமார் தான் விசா­ர­ணை­யா­ளர்­க­ளான புல­னாய்வுப் பிரி­வி­னர் முன் வைக்கும் மேல­திக அறிக்­கையை வைத்தே முடி­வு­களை எடுப்­ப­தா­கவும் விசா­ர­ணை­களில் திருப்தி இன்றேல் அல்­லது சந்­தேகம் நில­வினால் உயர் நீதி­மன்றை நாட முடியும் என கூறினார்.

இத­னை­ய­டுத்து சந்­தேக நபர்­க­ளி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்ட கைய­டக்கத் தொலை­பே­சிகள், டெப் ஆகி­ய­வற்றை மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்தின் தகவல் தொழில் நுட்ப பீடத்­துக்கு பரி­சோ­த­னைக்­காக அனுப்ப ஒப்­புதல் அளித்த நீதிவான் ஏனைய இரத்த மாதி­ரிகள் தட­யங்கள் உள்­ளிட்­ட­வற்­றையும் அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் உள்­ளிட்­டோ­ருக்கு சமர்­ப்பித்­த­தற்­கான ஆவ­ணங்கள் மன்­றுக்கு சமர்­ப்பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன் அறிக்கைகளையும் மன்றில் ஒப்படைக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.

மரணவிசாரணைத் தீர்ப்பு விரைவில்

அத்துடன் கடந்த தவணையின் போது வித்தியாவின் மரண விசாரணைகள் இடம்பெற்ற நிலையில் அதன் அறிக்கை தயார் நிலையில் உள்ளதாகவும் அதன் தீர்ப்பை விரைவில் அறிவிப்பதாகவும் நீதிவான் எஸ்.லெனின் குமார் திறந்த மன்றில் அறிவித்தார்.

அத்துடன் 30 நாள் தடுப்புக் காவல் முடிவடைந்ததும் சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவு பிறப்பித்தார்.

(யாழி­லி­ருந்து எம்.எப்.எம்.பஸீர்)

 

வித்தியா படுகொலை  வழக்கில் மறைக்கப்படும் உண்மைகள்

கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட  நிலையில்,   திடீரென அதேமாதம் 31 ஆம் திகதி  கே.வி. தவராசா  தலைமையில்  புங்குடுதீவில்   சிரமதான பணிகள்  மேற்கொள்ளப்படும்  என அறிவிக்கப்பட்டு,  வித்தியா  படுகொலை செய்யப்பட்ட பிரதேசத்தை அன்மித்த  பகுதிகளில் ‘டோசர்’ கொண்டு  அழிக்கபட்டதற்கான ஆதாரங்களும், சான்றுகள்  உள்ளதாக நமக்கு  அனப்பிவைக்கப்பட்ட  ஆதாரங்கள் இவை..

vithiyaaa வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க 'பாரிய இயந்திரம்' கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை  தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!! vithiyaaa

1.வித்தியா வழக்கில் யார் கூறுவது உண்மை?? வித்தியா வழக்கில் இருந்து  கே.வி. தவராசா விலகியதன்  உண்மை காரணம்  என்ன?

2. அவசரம் அவசரமாக  கே.வி. தவராசா  தலைமையில்  புங்குடுதீவில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டமைக்கு காரணம் என்ன??

3. வித்தியா படுகொலை வழக்கில் துவாரகேஸ்வரன் மூக்கை நுழைப்பதேன்?

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பான தடயங்களை அழிக்க முயற்சி

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா தொடர்பான தடயங்களை அழிக்கும் முயற்சியில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனும் ,சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசாவும் முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் தியாகராசா துவாரகேஸ்வரன் குற்றம் சாட்டியுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவி வித்தியாவின் கொலை தொடர்பாக ஊடகங்களை பயன்படுத்தி சிரேஸ்ட சட்டத்தரணி தவராசா பொய்களை கூறி வருகின்றார்.இவர் இவ்வழக்கில் ஆஜராகியதற்கு காரணம் பெருந்தொகை பணம் வெளிநாடு ஒன்றில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான ஆதாரமும் உள்ளது.ஆனால் இறந்த மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும்.அதற்காகவே நான் பாடுபடுகின்றேன்.இதனை வைத்து அரசியல் வியாபாரம் செய்ய நான் வரவில்லை.அதுவும் தோற்றுப்போன அரசியல்வாதி நான்.
ஆரம்பம் முதல் இன்று வரை இம்மாணவி தொடர்பாக குரல் கொடுத்து வருகின்றேன்.இதன் காரணமாக தான் இச்சட்டத்தரணி,பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடு தொடர்பாக சந்தேகம் தோன்றியது.
இதற்கு சான்றாக இறந்த மாணவியின் சடலம் கிடந்த இடம் பாரிய இயந்திரத்தின் உதவியுடன் பற்றைக்காடுகளை அழிப்பதாக தெரிவித்து இவ்விருவரும் மாணவியின் தடயங்களை அழித்துள்ளனர்.இதனை சும்மா நான் பார்த்துக்கொள்ளப்போவதில்லை.இறந்த மாணவிற்கு நீதி கிடைக்கவே பாடுபடுகின்றேன் என அவர் மேலும் கூறினார்.

 

 

kv_thavarasa_04 வித்தியா படுகொலை வழக்கு: டி.என்.ஏ. சான்றுகளை அழிக்க 'பாரிய இயந்திரம்' கொண்டு வித்தியா கொலை நடந்த பிரதேசத்தை  தரைமட்டமாக்கியது யாா? அதிர்ச்சி தகவல்கள்!! kv thavarasa 04
வருவிருக்கும்  பாராளுமன்ற   தேர்தல் முடிந்தவுடன்,   வித்தியா படுகொலை வழக்கில்  தாங்களாக வந்து தலையை காடடிய   அரசியல் வாதிகள்  காணாமல் போய்விடுவாகள்.

அதன் பின்னராவது..,   வித்தியாவின் ஆன்மாவாவை  சாகடிக்காமல்   அரசியல்வாதிகள்  விட்டுவைத்தால் போதும்.

புங்கையூர்- வரதன்

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2017
M T W T F S S
« Jul    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

Sritharan stop deviding people. No election yet. Shame you do this for your food. STOP IT NOW. [...]

நல்ல விடையம், கண்டிப்பாக செய்ய வேண்டும், தேச துரோகியாகிய இவளுக்கு இது சிறை செல்லாமல் [...]

தமிழ் ஈழம் என்ற மாயை காட்டி தமிழ் இனத்தை சீரழித்து இன்று தமிழ் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News