ilakkiyainfo

ilakkiyainfo

விநோத கோயில்கள் – எல்லா விதமான பேயும் இங்கு ஓட்டப்படுமாம் (வீடியோ)

விநோத கோயில்கள் – எல்லா விதமான பேயும் இங்கு ஓட்டப்படுமாம் (வீடியோ)
October 13
06:16 2017

இன்று வெள்ளிக்கிழமை அக்டோபர் 13வது நாள். எங்கேயோ கேள்வி பட்டிருப்பதுபோலிருக்கிறது அல்லவா. ஆம். திரைப்படங்களிலும், பழைய பாட்டிகளின் கதைகளிலும் இது பேய்களுக்கான நாள். உண்மையில் பேய்க்கும் இந்த 13ம் தேதி வெள்ளிக்கிழமைக்கும் என்ன சம்பந்தம்?

இந்தியாவின் பழம்பெரும் நம்பிக்கைகளுக்கு உள் சென்றால் நீங்களும் வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

ஆவிகள், பேய்கள் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலையில், கடவுள் என்ற ஒன்று இருக்குமானால் அமானுஷ்ய சக்திகளும் இருக்கும் என்று விடை தருகின்றனர் சிலர்.

கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் பேய் என்றால் பயந்து நடுங்குகிறோம். பேய் இல்லை என்று நண்பர்களிடையே விவாதித்து விட்டு வீட்டுக்கு ஏழு மணிக்கே சென்றாலும் மரத்தடியிலும், மன இருட்டிலும் பேய் ஒளிந்திருப்பதாகவே உணர்கிறோம்.

கடவுள் நம்பிக்கை அற்ற ஒருவருக்கு கூட பேய் பயம் இருக்கிறது என்றால் அது மூளை சம்பந்தப்பட்ட விசயம். ஆனால் இந்த இடங்களில் நிஜமாகவே பேயை காணலாம். பேய் ஓட்டும் முறையை கண்டால் உங்களுக்கே ஒரு நிமிடம் இதயம் உறைந்துவிடும். வாருங்கள் இந்தியாவின் பேய் ஓட்டும் இடங்களை பார்க்கலாம்.

 

ஹஸ்ராட் சயத் அலி மிரா தடர் தர்கா,

குஜராத் குஜராத் மாநிலத்தின் யுனிவா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தர்கா.

குஜராத் மாநிலத்தின் யுனிவா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தர்கா. ஹஸ்ராட் சயத் அலி மிரா தடர் தர்கா ஹஸ்ராட் சயத் அலி மிரா தடர் தர்கா இங்கு மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், பேய் வந்து ஆடுபவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.

 

 

ஸ்ரீ கஸ்டபஜன் தேவ் ஹனுமான்ஜி மந்திர்,

குஜராத் மிகவும் சக்தி வாய்ந்த கோயில் ஆகும். ஹனுமான் கோயிலில் பேய் ஓட்டுவது என்பது மிக சிறப்பானது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சியவர்கள் இங்கு அழைத்து வரப்படுகிறார்கள். இங்கு தரப்படும் பிரசாதம் உள்ளிட்ட அனைத்தும் மிகவும் விசேசமாக கருதப்படுகிறது.

தேவ்ஜி மகராஜ் மந்திர், மபி

கையில் கற்பூரம் ஏற்றி வழிபடுவது இங்கு வாடிக்கையாகிறது. அப்படி செய்தால் பேய் தன்னை விட்டு விலகும் என்பது நம்பிக்கை.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். துடைப்பத்தால் அடித்து பேயை ஓட்டுவது இக்கோயிலின் சிறப்பு.

தத்தாத்ரேயா மந்திர், கனகபூர்

வித்தியாசமான வேண்டுதல்களுக்கு பெயர் பெற்ற இந்த கோயில் கனகபூரில் அமைந்துள்ளது.

அந்தரத்தில் தொங்கும் வேண்டுதல் இங்கு பிரசித்தி பெற்றது. மக்கள் கடவுளிடம் கத்தி வேண்டுவது சிறப்பு. முணுமுணுத்தல், அலறுதல் முதலிய சத்தங்களை கேட்கலாம்.

பக்தர்கள், பேய் பிடித்தவர்கள் அந்தரத்தில் தொங்கி நேற்றிக்கடன் செலுத்துகின்றனர்.

நிஜாமுதீன் தர்கா,

தில்லி தில்லியில் அமைந்துள்ள இந்த தர்கா பேய் ஓட்டுவதற்கு உலக புகழ் பெற்றது.

உலகின் பல்வேறு இடங்களிலிருந்தும் பலர் வந்து இந்த விசித்திர நிகழ்வுகளைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

சாண்டி தேவி கோயில், ஹரித்வார்

வராத்திரி தினங்களில் இந்த கோயில் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கெட்ட ஆவிகளை விரட்ட இந்த கோயிலில் விசேச வழிபாடு, செயல் முறைகள் கடை பிடிக்கப்படுகின்றன.

ஹர்சு பிரம் கோயில்

துஷ்ட சக்திகளை விரட்டுவதற்கு சிறப்பான இந்த கோயில் பலருக்கு விருப்பமான இடமாக இருக்கிறது.

இந்த கோயிலுக்கு ஒரு முறை வந்தால் திரும்பவும் வரவேண்டிய அவசியம் இருக்காது என்கின்றனர் சிலர்.

சண்ட் சபீர் ஷா தர்கா

இந்த ஊருக்கு செய்ன்பூர் என்று பெயர் வந்தது இதான் காரணமாக இருக்கலாம்.

பயம் மிகுந்த இடமாக உள்ள இந்த தர்காவுக்கு நீங்கள் சென்றால் பின்னங்கால் பிடதியில் அடிக்க ஓடி வருவது நிச்சயம்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Latest Comments

எல்லோரது ஆசையும் விக்னேஸ்வரன் என்ற நொண்டிக் குதிரைமீது பணம் கட்டுவதான். அவரை ஒரு பஞ்ச கல்யாணிக் குதிரை எனப் பலர் [...]

I want rohyponl tablet [...]

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி. கர்நாடக முன்னாள் முதவர். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மாநில தலைவர். தற்போது [...]

கேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]

குட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News