ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, ஆறுமுகத்தான்குடியிருப்பு பிரதேசத்தில் வீதி விபத்தில் சிக்கிய நபர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வியாழக்கிழமை 11 மாலை 05.00 மணியளவில் ஆறுமுகத்தான்குடியிருப்பில் வீதியைக் கடக்க முயன்ற நபர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில்  படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

arrr விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அடையாளம் காணப்படாத நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு arrrஆயினும், தற்போதுவரை இவரை இன்னாரென அடையாளம் காண முடியாதுள்ளதாக வைத்தியசாலை அலுவலர்கள் தெரிவித்தனர்.

தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் குறித்த நபரின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இவர் அடையாளம் காணப்படவில்லையாயின் உடற்கூறாய்வின் பின்னர் சடலம் அரச செலவில் அடக்கம் செய்யப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரணமானவரின் உற்றார் உறவினர்கள் எவராவது இருப்பார்களாயின் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் தொடர்pபு கொண்டு அடையாளம் காட்டுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.