ilakkiyainfo

ilakkiyainfo

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற 149பேரும் பலி!: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்

விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற 149பேரும் பலி!: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்
March 11
16:10 2019

149 பயணிகள் உட்பட 157 பேருடன் எத்தியோப்பியாவின் அடிஸ் அபா நகரிலிருந்து கென்யாவின் நைரோபி நோக்கி பயணித்த விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போயிங் விமானம் 149 பயணிகளுடன் கென்யா தலைநகரான நைரோபி நோக்கி புறப்பட்டு சென்றது.

இதன்போது வானில் உயர எழும்பிய அந்த விமானம் 6 நிமிடங்களுக்குள் தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடனான தகவல் தொடர்பை இழந்ததையடுத்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

அதையடுத்து இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில், தலைநகர் அடிடாஸ் அபாபாவில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தூரத்தில் தென்கிழக்கே உள்ள பிஷோஃப்டு என்ற நகரில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.

இந் நிலையில் விமானத்தில் பயணிகள் 149 பேரும், விமானிகள், பணியாளர்கள் என 8 பேர் இருந்துள்ளனர்.

விபத்தினால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியது.

இந்நிலையில் விபத்தில் சிக்கிய விமானத்தில் சென்ற பயணிகள் 149 பேரும், விமானிகள் மற்றும் பணியாளர்கள் என 8 பேரும் உயிருடன் இல்லை என்று அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.

அத்துடன் கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு எத்தியோப்பியா பிரதமர் அபிய் அஹமத் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

விமானத்தில் 33 நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நொறுங்கி விழுந்த எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

விழுந்து நொறுங்கிய எத்தியோப்பிய விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நொறுங்கி விழந்த இடத்தில் இருந்து போயிங் 737 ரக விமானத்தின் கறுப்புப் பெட்டி மற்றும் விமானி அறையில் உள்ள குரல் பதிவு கருவியும் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கண்டு எடுக்கப்பட்டுள்ளது.

எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபா-வில் இருந்து கென்ய தலைநகர் நைரோபிக்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நேரப்படி மணி 8.44க்கு கிளம்பிய போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் (ET302) புறப்பட்ட 6 நிமிடத்தில் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில், எட்டு விமானப் பயணிகள் உள்பட விமானத்தில் இருந்த 157 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தினையடுத்து அங்கு பல விமானங்கள் தரையிரக்கப்பட்டன.

அந்த விமானத்தில்கென்யா, எத்தியோப்பியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

நடந்தது என்ன?

_105979490_97a37be9-024e-42f2-95de-78ebac84225e  விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற 149பேரும் பலி!: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப் 105979490 97a37be9 024e 42f2 95de 78ebac84225e

எத்தியோப்பிய விமானம் விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும் விமான ஓட்டுநர் சில சிரமங்களை சந்தித்ததாக தெரிவித்ததையடுத்து மீண்டும் அடிஸ் அபாபா விமான நிலையத்துக்கே திரும்பும்படி அவரிடம் கூறப்பட்டிருந்த சூழலில் இந்த விபத்து ஏற்பட்டது என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

“தற்போதைய சூழலில் எதுவும் சொல்ல முடியாது. விசாரணைக்கு காத்திருக்க வேண்டும்” என எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிர்வாக இயக்குனர் டெவோல்டே ஜெப்ரிமரியம் தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான விமானம் பற்றி நமக்கு என்ன தெரியும்?

_105979491_3e403b88-3545-427c-b7d7-5969e1ab85f6  விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற 149பேரும் பலி!: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப் 105979491 3e403b88 3545 427c b7d7 5969e1ab85f62017ஆம் ஆண்டிலிருந்துதான் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானம் வணிக செயல்பாட்டுக்கு வந்தது.

விமான சேவையை விரிவாக்கம் செய்வதற்கு ஆறு விமானங்களை எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் இயக்கியது. அந்த ஆறு விமானங்களில் நொறுங்கி விழுந்த விமானமும் ஒன்று. கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று “கடுமையான முதல் சோதனைக்கு” அந்த விமானம் உட்படுத்தப்பட்டது.

இந்த சம்பவத்தால் மிகவும் வருந்துவதாக தெரிவித்துள்ள போயிங், தொழில்நுட்ப உதவிக்காக ஒரு குழுவை அனுப்புவதாகவும் கூறியது.

737 மேக்ஸ் 8 விமானம் விபத்துக்குள்ளாவது கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். கடந்த அக்டோபரில் லயன் விமான சேவை விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் உயிரிழந்தவர்கள் யார்?

கென்யர்கள் 32 பேர், கனடியர்கள் 18 பேர், எத்தியோப்பியர்கள் 9 பேர், இத்தாலியர்கள் 8 பேர், சீனர்கள் 8 பேர், அமெரிக்கர்கள் 8 பேர், பிரிட்டானியர்கள் 7 பேர், பிரெஞ்சுக்காரர்கள் 7 பேர், எகிப்தியர்கள் 6 பேர், ஜெர்மனியர்கள் 5 பேர், ஸ்லோவாகியர்கள் 4 பேர் மற்றும் இந்தியர்கள் 4 பேர் இதில் பயணித்துள்ளனர்.

ஐநா சபையை சேர்ந்த சிலரும் இந்த விமானத்தில் பயணித்ததாக நம்பப்படுகிறது. அவர்கள் நைரோபியில் நடைபெறும் சுற்றுச்சூழல் சபை அமர்வுக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

_105979492_5149981f-dcb8-4242-a4ef-de011941bf7d  விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற 149பேரும் பலி!: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப் 105979492 5149981f dcb8 4242 a4ef de011941bf7d

“பல ஆண்டுகளில் நடந்த மிகப்பெரிய பேரழிவுகளில் இதுவும் ஒன்று” என ஜெனிவாவின் ஜநா அலுவலக பொது இயக்குநர் தெரிவித்தார்.

அடுத்து என்ன நடக்கும்?

அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் மற்றும் போயிங் வல்லுநர்களுடன் எதியோப்பிய அதிகாரிகள் விசாரணையை முன்னெடுப்பார்கள்.

பாதுகாப்பு எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, அடுத்த அறிவிப்பு வரும்வரை, அனைத்து 732 மேக்ஸ் 8 ரக விமான சேவையும் நிறுத்தப்படும் என எத்தியோப்பிய விமான சேவை அறிவித்துள்ளது.

_105979493_040be897-bf4e-475d-ab6d-b489cad20f0d  விபத்துக்குள்ளான எத்தியோப்பிய விமானத்தில் சென்ற 149பேரும் பலி!: கறுப்புப் பெட்டி கண்டுபிடிப் 105979493 040be897 bf4e 475d ab6d b489cad20f0d

இதே வேளையில், 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் இயக்குவதை நிறுத்துமாறு உள்ளூர் விமான சேவைகளுக்கு சீன விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஏர் சீனா, சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ், சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல உள்ளூர் விமான சேவைகளில் இந்த ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

தனது இரண்டு போயிங் விமானங்கள் இயக்குவதை நிறுத்தி வைக்க கேய்மன் விமான சேவை உத்தரவிட்டுள்ளது

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Latest Comments

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இது எல்லாம் நாம் எதிர்பார்த்தது தான் , ரவி கருணாநாயகே நிதியமைச்சராக இருந்த பொது , [...]

எவ்வளவு வளம் இருந்தாலும் நெஞ்சில் வீரமும் , ஆண்மையும் இருக்க வேண்டும், இலங்கையில் மிக சிறு புலி [...]

நாங்கள் கடவுளுககும் மேலாக நேசிககும் மகிந்த ராஜபக்சேவை பதவி நீக்க 2015 சதி செய்த இந்தியா நல்லா [...]

இலங்கை பத்திரிகைகள்

English News