விமானமொன்றின் பயணியான யுவதி ஒருவரை விமானிகளின் ஆசனத்தில் அமர இடமளித்த சீன விமானியொருவருக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் எயார் குய்லின் விமான சேவை நிறுவனத்தின் விமானி ஒருவருக்கே அந்நிறுவனத்தினால் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
விமானியின் ஆசனத்தில் அமர்ந்து தான் உணவு உட்கொள்ளும் புகைப்படத்தை யுவதியொருவர் சீன சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
கடந்த ஜனவரி 4 ஆம் திகதி உள்ளூர் விமானப் பயணமொன்றின் போது இப்படம் பிடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எனினும் கடந்த வார இறுதியிலேயே இப்படம் சமூக வலைத்தளத்தில் பரவத் தொடங்கியது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட விமானி, விமானியாக செயற்படுவதற்கு தாம் ஆயுட்காலத் தடை விதித்துள்ளதாக குய்லன் எயார்லைன்ஸ் நேற்று தெரி வித்துள்ளது.