ilakkiyainfo

ilakkiyainfo

“விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?

“விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?
October 23
21:11 2017

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2013–ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

virat,anushka_2  "விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்? viratanushka 2
ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது.

இதையடுத்து 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரின் நட்பும் தொடர்ந்தது.

virat,_anushka_1  "விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்? virat anushka 1 e1508792856166

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்தாலும் வரும் 2018-ம் ஆண்டுக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பெண்ணாக (கேப்டன் மனைவி) அனுஷ்கா ஷர்மா இருக்கப்போவது உறுதி என்றே கூறப்படுகிறது.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

November 2017
M T W T F S S
« Oct    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Latest Comments

This idiot traitor must be killed too horror than LTTE leader Pirabakaran killed. [...]

குறைந்த ஊதிய தகவல் சரியானது. ஆனால், ஒரு கத்தார் ரியால் 42.2 ரூபாய்கள் மட்டுமே. ஆகவே குறைந்த ஊதியம் இலங்கை [...]

முஸ்லிம்களின் உள்விவகாரங்களில் எப்பவுமே நான் கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் முஸ்லிம் பெண்களை பகீரங்க வெளியில் படங்களோடு கேழ்விக்குளாக்குவது அதிற்சியாய் இருக்கிறது.குறானில் [...]

புலி கூடடத்தால் மிஞ்சியது அழிவு மட்டுமே, இன்று தமிழர்களுக்கு இருக்கும் ஒரே அரசியல் தீர்வான " மாகாண சபை [...]

How can you tell she is a Eelam girl, has she Sri Lankan Citizen ? [...]

இலங்கை பத்திரிகைகள்

English News