ilakkiyainfo

ilakkiyainfo

விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!

விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!
December 03
16:02 2019

கன்னியாகுமரியில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே ஆரோக்கியபுரம் பகுதியை சேந்தவர்கள் ரெத்தினசாமி-சார்ல்லெட்பாய் தம்பதி. இவர்களது மகள் அனுஷியா (18). இவர் அழகு நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 24ம் தேதி வீட்டில் அனுஷ்யா விஷம் அருந்திய நிலையில் மீட்கப்பட்டார். இதனை அடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை அடுத்து அவரின் தாய் சார்லெட்பாய், பியூட்டி பார்லரில் வேலை பார்க்கும் தனது மகள் அனுஷியா கடந்த 23ம் தேதி வீட்டில் இருந்து 2000 ரூபாயை திருடிவிட்டதாகவும், அதற்காக திட்டியதால் எலி மருந்தை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக போலீஸில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அனுஷியாவின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் அனுஷியாவின் மரணம் தற்கொலை இல்லை கொலை என அவரது தோழிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரசநறய விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..! விஷம் குடித்து தற்கொலை’! ‘காதலனிடம் கடைசியாக போனில் பேசிய இளம்பெண்’.. பரபரப்பு சம்பவம்..!  e1575389172461தங்களிடம் அனுஷியா ஒருபோதும் சந்தோஷங்களை பகிர்ந்துகொண்டதில்லை என்றும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகும் தெரிவித்துள்ளனர். இதற்கு அவரின் தாய் வீட்டில் அடைத்து கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே அவரது காதலனுடன் செல்போனில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. அதில், தனது தாய் தன்னிடம் பேசும்போதெல்லாம் ‘செத்துப்போ’ என கூறுவதாகவும், அதனால் தனக்கு தற்கொலை எண்ணம் வருவதாகவும், நான் தற்கொலை செய்துகொண்டால் நீ என்ன செய்வாய் என்றும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அனுஷியாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் தீவர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரது தோழிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2020
M T W T F S S
« Dec    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

செருப்பாலபடிக்கோணும் உந்த பரதேசி நாயள... அவேன்ர லட்சணத்துக்குள்ள வந்துடுவினம் தமிழ் தேசியத்த பற்றி கதைக்க. குப்பமேட்டு நாயள்... இதுக்கு முதலும் [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

நன்றி மறந்த இந்த நாட்டு மக்கள் அனுபவிக்கின்றார்கள் ,38 வருட புலி பயங்கரவாதத்தை அழித்து , [...]

Wellcome our future President , we need you for our country. [...]

வலிகள் வரிகளாக எனக்குள் அதை கவிதையாக [...]

இலங்கை பத்திரிகைகள்

English News