ilakkiyainfo

ilakkiyainfo

வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர் முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் |

வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர்  முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் |
May 18
11:18 2018

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிறுப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில் சென்றவர்கள் முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளதோடு, துப்பாக்கிச் சூட்டினையும் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றவர்கள் கொழும்பில் இருந்து வருகை தந்த அரச புலனாய்வுத்துரையினர் என தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மன்னார் உயிலங்குளம் புதுக்குடியிருப்பு கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் வெள்ளை நிற காரில் சிவில் உடையில்  8 பேர் கொண்ட குழுவினர் அங்கு சென்று  முன்னாள் போராளி ஒருவரை கடத்திச் செல்ல முற்பட்டுள்ளனர்.

குறித்த பகுதிக்கு வெள்ளை நிற காரில் வந்த குழுவினர் முதலில் முன்னாள் போராளியான விவசாயியின் வாகன சாரதியை பிடித்து அவரை தாக்கி கைவிலங்கிட்டு தமது வாகனத்தில் ஏற்றி குறித்த போராளியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த முன்னாள் போராளியான விவசாயியை பிடித்துக்கொண்டு செல்ல முற்பட்ட போது துப்பாக்கியுடன் வந்த குழுவினருக்கும், முன்னாள் போராளி மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் இடையில் தர்க்க நிலை ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து துப்பாக்கியுடன் வந்த குறித்த குழுவினர் சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சுமார் 4 தடவைகள் துப்பாக்கிப் பிரையோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த குழுவினர் முன்னாள் போராளி உள்ளிட்ட உறவினர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், கைவிலங்கிடப்பட்டு வாகனத்தில் மறைத்து வைத்திருந்த வாகன சாரதியையும் மக்கள் மீட்டுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த குழுவினர் தமது காரில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதன் போது குறித்த சாரதியின் இரண்டு கையடக்கத்தொலைபேசிகள், 50 ஆயிரம் ரூபா பணம் அகியவை அவருடைய மேல் ஆடையுடன் கொண்டு சென்றுள்ளனர்.

சம்பவ இடத்தில் வெற்று ரவைகள் 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவை மீட்கப்பட்டுள்ளது.

உடனயடியாக பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கு தகவல் வழங்கியதோடு, பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் மன்னார் பொலிஸார் அங்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது குறித்த காரில் துப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் தாங்கள் பொலிஸார் என தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக தெரிவித்து அங்கு காணப்பட்ட தடையப்பொருட்களான வெற்று ரவைகள் 4,வெடிக்காத ரவைகள் 2, கைவிலங்கு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இரத்தக்கறைகளுடன் ஆடை ஒன்று மீட்கப்பட்டதாகவும், தூப்பாக்கியுடன் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் அரச புலனாய்வுத்துரையினர் என சந்தேகிப்பதாகவும்,பொலிஸார் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்தனர்.

கடும் தாக்கதலுக்குள்ளான குறித்த புலனாய்வாளர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அறிய முடிகின்றது.

uylankulam-2  வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர்  முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் | uylankulam 2uylankulam-1  வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர்  முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் | uylankulam 1uylankulam-3  வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர்  முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் | uylankulam 3uylankulam-4  வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர்  முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் | uylankulam 4uylankulam-5  வெள்ளை நிற காரில் வந்த புலனாய்வுதுறையினர்  முன்னாள் போராளியை கடத்த முயற்சி!! : துப்பாக்கிப்பிரயோகம் : மன்னாரில் பதற்றம் | uylankulam 5

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Latest Comments

இவளுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் , அதை பார்த்து ஒரு தமிழ் நாய் பிரிவினை பற்றி பேச [...]

சுவிஸ் குமாரை தப்பிக்க 45 இலட்சம் பெற்று கொண்டு உதவியது விஜயகலா மகேஸ்வரன் என்ற தேவடியா , [...]

ஐரோப்பாவில் இப்படி ஒரு காட்டு மிராண்டி மக்களா ? இது தடை செய்யப்பட வேண்டும். ஜப்பானியர்கள் [...]

அன்று மேற்குலகின் ( அமெரிக்கா ) வாலை அன்டன் பாலசிங்கம் மூலம் பிடித்த இந்த பிரபாகரன், [...]

சீனர் என்ற படியால் பணம் கொடுத்தார் இதுவே ஒரு மேற்கு நாடடவராக இருந்தால் " Thank You [...]

இலங்கை பத்திரிகைகள்

English News