ilakkiyainfo

ilakkiyainfo

வைகோவிடம் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கிழித்தெறிந்து விட்ட கருணாநிதி!! (கடிதம் இணைப்பு)

வைகோவிடம் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கிழித்தெறிந்து விட்ட கருணாநிதி!! (கடிதம் இணைப்பு)
September 17
10:03 2016

தாம் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்!- வைகோ, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். கருணாநிதிக்கு, விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், 1989ம் ஆண்டு அனுப்பிய கடிதத்தை 28 வருடங்களின் பின்னர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை.கோபாலசுவாமி தற்போதுவெளியிட்டுள்ளார்.

இந்திய அமைதிப்படையினர் இலங்கையின் வடக்கு கிழக்கில் மேற்கொண்டு வரும்  அத்துமீறல்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அந்த கடிதத்தில் பிரபாகரன், கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கைக்கு தாம் சென்றிருந்த வேளையில் வனப்பகுதியில் வைத்து குறித்த கடிதத்தை பிரபாகரன் தம்மிடம் தந்ததாக கோபாலசுவாமி தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தை கையளித்த சில மாதங்களில் தாம் அதனை கிழித்தெறிந்து விட்ட தாக கருணாநிதி தெரிவித்திருந்தார்.

எனினும் உலகம் அந்த கடிதத்தில் உண்மைகளை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதாம் அதன், பிரதியை பத்திரமாக வைத்திருந்ததாக வைகோ குறிப்பிட்டுள்ளார்.

22 பெப்ரவரி 1989 என்ற திகதியிடப்பட்டு பிரபாகரன், தமது கைப்பட எழுதிய அந்தகடிதத்தில், இலங்கையின் தமிழ் தலைவர்கள் தமது இன்பங்களுக்காக தமிழர்களை கைவிட்டுசென்றுள்ள நிலையில் வைகோ, உயிரையும் பணயம் வைத்து தம்மையும் தமது வீரர்களையும் சந்தித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

வைகோ, இலங்கை தமிழர்கள் மீது வைத்துள்ள உணர்வுக்காக ஆயிரம் தடவைகள் தாம்மரணிக்க முடியும் என்றும் பிரபாகரன் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய அமைதிப்படையின் காரணமாக தமது நாடு பாரிய இடுகாட்டில் தள்ளப்பட்டுள்ளதாகபிரபாகரன் அந்த கடிதத்தில் குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தநிலையில் இந்திய அமைதிப்படை தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளதுமட்டுமல்லாமல், பாரிய தாக்குதல் ஒன்றுக்கும் தயாராவதாக பிரபாகரன் அதில்கூறியிருந்தார்.

index வைகோவிடம் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கிழித்தெறிந்து விட்ட கருணாநிதி!! (கடிதம் இணைப்பு) index7

எனவே ஆபத்தான சூழ்நிலை காரணமாக வைகோ அண்ணனை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக பிரபாகரன் தமது கடிதத்தில் கருணாநிதிக்கு அறிவித்திருந்தார் என்றும் வைகோகுறிப்பிட்டுள்ளார்.

தமிழீழத்திற்காக ஆயிரம் தடவைகள் வேண்டுமானாலும் இறக்கலாம் – பிரபாகரன் எழுதிய கடிதம் இதோ

காலத்தால் பல விடயங்கள் மறைக்கப்படலாம், அல்லது அழிக்கப்படலாம் ஆனால் நிதர்சனங்கள் எப்போதும் அழியாது.

காலத்தின் பாதையில் என்றாவது ஓர் நாள் அது வெளிப்படுத்தப்படும் அல்லது வெளிவரும் என்பதே உண்மை.

ஈழத்தில் நடைபெற்று வந்த இன அழிப்பு, இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள் போன்றவற்றை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கடிதம் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் முத்துவேல் கருணாநிதிக்கு தெரியப்படுத்தினார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் 22.02.1989 அன்று கருணாநிதிக்கு எழுதிய கடிதம் தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ வெளியிட்டுள்ளார்.

அழிக்கப்பட்ட ஆவணம் இதோ

index வைகோவிடம் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கிழித்தெறிந்து விட்ட கருணாநிதி!! (கடிதம் இணைப்பு) index9pirapakarann வைகோவிடம் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கிழித்தெறிந்து விட்ட கருணாநிதி!! (கடிதம் இணைப்பு) pirapakarann2index வைகோவிடம் பிரபாகரன் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கிழித்தெறிந்து விட்ட கருணாநிதி!! (கடிதம் இணைப்பு) index10

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

April 2018
M T W T F S S
« Mar    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Latest Comments

இந்த கோழை பயல் சரத் போன்சேகா 30 வருடத்துக்கு மேல் ராணுவத்தில் இருந்துள்ளான் , இவன் பயங்கர [...]

நான் ஒவ்வொரு முறையும் சொல்வதை போல் , இந்த தேச துரோக அரசு இந்த நாடடை அமெரிக்கா விடமும் [...]

Its Fake news, See the true here at following link: http://inexplicata.blogspot.ch/2018/04/argentina-strange-creature-slays-two.html?m=1 [...]

மீடியாக்களை சந்தித்தது மட்டுமல்ல பெண் செய்தியாளரின் கன்னத்தையும் கிள்ளி போடடான் காம தாத்தா கவ்னர் [...]

இது போல் பாகிஸ்தானில் ஒரு இந்துவுக்கோ அல்லது எதாவது ஓர் இஸ்லாம் இல்லாதவருக்கோ உயர் விருது கிடைக்குமா , [...]

இலங்கை பத்திரிகைகள்

English News