ilakkiyainfo

ilakkiyainfo

ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு – (கட்டுரை)

ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு – (கட்டுரை)
September 15
16:10 2014

சேரு­தலும், பிரி­தலும் என்றும் சிக்­க­லா­னவை. மனி­தர்­களைப் பொறுத்­த­வரையில் பிரிந்­த­வர்கள் சேர்­வது சந்­தோ­ஷ­மா­னது. சேர்ந்­த­வர்கள் பிரி­வது துயரம் தரும் விடயம்.

இதனை நாடு­க­ளுடன் பொறுத்திப் பார்க்க முடி­யாது. மனி­தர்­களின் உறவும் பிரிவும் பெரும்­பாலும் உணர்­வுகள் சம்­பந்­தப்­பட்­டவை. நாடு­களைப் பொறுத்­த வரையில், அது உணர்­வு­களைத் தாண்­டிய பல விட­யங்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­தாகும்.

மூன்று நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர்  சேர்ந்த இரு சாம்­ராஜ்­ஜி­யங்கள். அவை தொடர்ந்தும் சேர்ந்­தி­ருக்க  வேண்­டுமா பிரிந்து செல்ல வேண்­டுமா என்­பதைத் தீர்­மா­னிக்­கக்­கூ­டிய தரு­ணத்தில் நிற்­கிறோம்.

இதி­லொன்று  இங்­கி­லாந்து மற்றும் அயர்­லாந்து சாம்­ராஜ்யம். மற்­றை­யது ஸ்கொட்­லாந்து சாம்­ராஜ்யம். அவை 16ஆம் நூற்­றாண்டின் முற்­ப­கு­தியில் உறவு கொண்­டன. 1703ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி முறை­யாக ஒன்று சேர்ந்­தன.

இந்தத் திரு­மணம் பெரிய பிரித்­தா­னிய இராஜ்­ஜியம் என்ற குடும்பம் உரு­வாக வழி­வ­குத்­தது. பின்­னாட்­களில் அயர்­லாந்தும் இணைந்து கொண்­டதால், இந்தக் குடும்பம் பெரிய பிரித்­தா­னிய மற்றும் அயர்­லாந்து ஐக்­கிய இராஜ்ஜியம் என்று மாறி­யது.

பின்­னாட்­களில் குடும்­பத்தில் பல பிரச்­சினைகள். குடும்­பத்­திற்குள் இழைக்­கப்­பட்ட கொடு­மையை சகிக்க முடி­யாமல், அயர்­லாந்தின் ஒரு பகுதி விலகிச் சென்­றது. அதனைத் தொடர்ந்து குடும்­பத்தின் கட்­ட­மைப்பும் பெயரும் மாறி­யது.

இன்று ஐக்­கிய இராஜ்­ஜியம் என்று பொது­வாக அழைக்­கப்­படும்   குடும்­பத்தில், பெரிய பிரித்­தா­னி­யாவும், வட-­அயர்­லாந்தும்  எஞ்­சி­யுள்­ளன. பெரிய பிரித் ­தா­னியா என்றால், இங்­கி­லாந்து, ஸ்கொட்­லாந்து, வேல்ஸ் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய கட்­ட­மைப்பு.

அயர்­லாந்தை அடுத்து ஸ்கொட்­லாந்தின் எண்­ணத்­திலும் மாற்றம் ஏற்­பட்­டது. குடும்­பத்­துடன் தொடர்ந்து இணைந்­தி­ருக்க வேண்­டுமா, தனி­யாக பிரிந்து செல்ல வேண்­டுமா என்ற கேள்வி.

இந்தக் கேள்­விக்கு பதி­ல­ளிக்க வேண்­டிய பொறுப்பு, ஐக்­கிய இராஜ்­ஜி­யத்தின் ஒப்­பு­த­லோடு ஸ்கொட்­லாந்து மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. அவர்கள் எதிர்­வரும் 18ஆம் திகதி தமது தலை­வி­தியைத் தீர்­மா­னிக்­கி­றார்கள்.

அன்­றைய தினம், ‘ஸ்கொட்­லாந்து சுதந்­திர நாடாக மாற வேண்­டுமா?’ என்ற கேள்­வி­யுடன் கூடிய கருத்துக் கணிப்பு நடை­பெறும். வாக்­கா­ளர்கள் ஆம் என்று வாக்­க­ளிக்­கலாம். அல்­லது இல்­லை­யென வாக்­க­ளிக்க முடியும்.

http://www.dreamstime.com/stock-images-great-britain-image6145064  ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு - (கட்டுரை) great britain 6145064மக்­களின் விருப்­பத்தை நாடி பிடித்­த­றிய விரும்பும் சில அமைப்­புக்கள், ஆமென்ற வாக்­குகள் அதிகம் கிடைக்கும் என்று கூறு­கின்­றன. இல்­லை­யென்ற வாக்­குகள் தான் அதி­க­மென மற்­றைய அமைப்­புக்கள் ஆரூடம் சொல்­கின்­றன.

ஸ்கொட்­லாந்தின் சுதந்­தி­ரத்தை வலி­யு­றுத்தும் அமைப்­புக்கள் ‘Yes Scotland’ என்ற வாச­கத்தின் கீழான குடையில் அணி­தி­ரண்டு, தாம் பிரிந்து செல்­வதால் கிடைக்கக் கூடிய நன்­மை­களைப் பட்­டி­ய­லிட்டு வரு­கின்­றன.

ஐக்­கி­யத்தின் முக்­கி­யத்­துவம் பற்றி பேசும் அமைப்­புக்­களோ, ‘Better Together’ என்ற வாச­கத்தை முன்­னி­றுத்தி கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என குரல் கொடுத்து வரு­கின்­றன. பிரிந்து சென்றால் பிரச்­சினை எனவும் வாதிட்டு வரு­கின்­றன.

இதில் எந்தத் தரப்பின் வாதம் நியா­ய­மா­னது என்­பதைத் தீர்­மா­னிப்­பது கடி­ன­மான விடயம். இதனை அறிய வேண்­டு­மானால், இவை எதற்­காக சேர்ந்­தன என்­பதைக் கண்­ட­றிந்து, பிரிந்தால் என்ன நடக்கும் என்­பதை அனு­மா­னிக்க வேண்­டி­யது அவ­சியம்.

ஸ்கொட்­லாந்து மக்கள் தனித்­து­வ­மா­ன­வர்கள். அந்த மக்­க­ளுக்­கென தனி­யான மொழியும், கலா­சா­ரமும் உண்டு. சூழ்­நி­லையின் நிர்ப்­பந்தம் கார­ண­மாக இங்­கி­லாந்­துடன் இணைய நேர்ந்­தது என்­பது ஸ்கொட்­லாந்து தேசி­ய­வா­தி­களின் வாதம்.

ரோம சாம்­ராஜ்­ஜி­யத்தின் ஆளு­கைக்கு உட்­பட்­டி­ருந்த காலம் தொட்டு, ஆங்­கி­லே­யர்­க­ளுக்கும் ஸ்கொட்ஷ் மக்­க­ளுக்கும் அரசியல் பகை. ஆங்­கி­லே­யர்கள் பல தட­வைகள் ஸ்கொட்­லாந்தை ஆக்­கி­ர­மித்­தி­ருக்­கி­றார்கள்.

இரு தரப்­புக்­க­ளையும் ஒன்­றி­ணைய வைத்­தது பொரு­ளா­தாரம் தானென்­பது வெளிப்­ப­டை­யான விடயம். ஆனால், இந்த விட­யத்தில் ஸ்கொட்­லாந்து தேசி­ய­வா­தி­களும், இங்­கி­லாந்தின் பழ­மை­வா­தி­களும் முன்­வைக்கும் வாதப்­பி­ர­தி­வா­தங்கள் வேறா­னவை.

தமது நாட்­டிற்குள் வடக்கில் ‘ஒரு அடங்­கா­ப்பி­டாரி’ தேசம் இருப்­பதை விரும்­பாத இங்­கி­லாந்து ஆட்­சி­யா­ளர்கள், பணத்­தாசை பிடித்த சிலரைப் பயன்­ப­டுத்திக் கொண்டு ஸ்கொட்­லாந்தை விலைக்கு வாங்­கி­ய­தாக தேசி­ய­வா­திகள் சாடு­கி­றார்கள்.

தேசி­ய­வாத இயக்­கத்தின் முன்­னோ­டி­யாகக் கரு­தப்­படும் கவிஞர் ரொபர்ட் பேர்ன்ஸ் எழு­திய கவிதை முக்­கி­ய­மா­னது. அவர் ஆங்­கி­லே­யர்­களின் தங்­கத்­திற்­காக நாம் விலைக்கு வாங்­கப்­பட்டு பின்னர் விற்­கப்­பட்டோம், என்பார்.

இங்­கி­லாந்தின் பழ­மை­வா­திகள், டேரியன் திட்­டத்­திற்கு கிடைத்த தோல்­வியால் ஸ்கொட்­லாந்து தம்­முடன் இணைய விரும்­பி­ய­தாக வாதி­டு­வார்கள். டேரியன் திட்டம் பணத்­தா­சையின் விளைவு என்­பது அவர்­களின் வாதம்.

இங்­கி­லாந்தின் கால­னித்­துவ ஆக்­கி­ர­மிப்­பிற்கு உட்­பட்ட பிராந்­தி­யங்­களில் கிழக்­கிந்­திய கம்­ப­னிக்கு கிடைத்த பொரு­ளா­தார வெற்­றியைப் பின்­பற்றி, தற்­போ­தைய பனா­மாவில் கலி­டோ­னியா என்ற கால­னியை ஏற்­ப­டுத்த ஸ்கொட்­லாந்து முனைந்­தது.

இந்தத் திட்­டத்­திற்குக் கிடைத்த தோல்­வியால் பெரும் நஷ்டம் விளைந்து திண்­டா­டிய சம­யத்தில், பொரு­ளா­தார நலன் கருதி ஸ்கொட்­லாந்து ஆட்­சி­யா­ளர்கள் பிரிட்­ட­னுடன் இணையத் தீர்­மா­னித்­தார்கள் என்­பது இங்­கி­லாந்து பழ­மை­வா­தி­களின் வாதம்.

scotland_colour_map  ஸ்கொட்லாந்தின் சுதந்திரம்: கருத்துக்கணிப்பு, வாக்கெடுப்பு - (கட்டுரை) scotland colour mapகடந்த 300 ஆண்­டு­க­ளுக்கு மேலாக இங்­கி­லாந்­துடன் இணைந்­தி­ருந்­த­போ­திலும், ஸ்கொட்­லாந்து மக்கள் மத்­தியில் தேசி­ய­வாத சிந்­தனை மழுங்கி விட­வில்லை. காலத்­திற்குக் காலம் அது தலை­தூக்கிக் கொண்டு தானி­ருந்­தது.

இதற்குப் பல கார­ணங்கள் இருந்­தன. பாரம்­ப­ரிய பகை­மைக்கு அப்பால் இங்­கி­லாந்து ஆட்­சி­யா­ளர்­களின் புறக்­க­ணிப்­பையும் மறந்து விட முடி­யாது. அவர்கள் தம்மை இரண்­டாந்­தர பிர­ஜை­க­ளாக நடத்­து­கி­றார்­க­ளென ஸ்கொட்டிஷ் மக்கள் கரு­தி­னார்கள்.

குறிப்­பாக, தற்­போ­தைய பிரிட்டன் பிர­தமர் டேவின் கமரூன் தலை­மை­யி­லான கன்­சர்­வேட்டிவ் கட்­சிக்கும் ஸ்கொட்­லாந்து தேசி­ய­வா­தி­க­ளுக்கும் ஏழாம் பொருத்தம். பிரிட்டன் பழ­மை­வா­திகள் ஏதோ­வொரு விதத்தில் பழி­வாங்கிக் கொண்டே இருப்­பார்கள்.

1989ஆம் ஆண்டு கால தேர்தல் வரியை ஞாப­கப்­ப­டுத்­தலாம். இதன் கீழ், சகல பிர­ஜை­களும் வரி செலுத்த வேண்டும். எவ­ரேனும் வரியை செலுத்­தா­விட்டால் அவ­ரது வாக்­கு­ரிமை பறிக்­கப்­படும்.

இந்த வரி முதலில் ஸ்கொட்­லாந்தில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. ஒரு வரு­டத்தின் பின்னர் தான் ஐக்­கிய இராஜ்­ஜி­யத்தின் ஏனைய பாகங்­க­ளுக்கு விஸ்­த­ரிக் ­கப்­பட்­டது. இந்த சம­யத்தில் ஸ்கொட்­லாந்தில் போராட்­டங்கள் வெடித்­ததை ஞாப­கப்­ப­டுத்­தலாம்.

ஸ்கொட்­லாந்தின் தேசி­ய­வாத சிந்­தனை எந்­த­வொரு தரு­ணத்­திலும் ஆயுதப் போராட்­ட­மாக பரி­ண­மிக்­க­வில்லை. ஸ்கொட்டிஷ் மக்­க­ளுக்கு ஐ.ஆர்.ஏ போன்­ற­தொரு அர­சியல் தலை­மைத்­துவம் இல்­லா­தி­ருந்­தமை இதற்குக் கார­ண­மாக இருந்­தி­ருக்­கலாம்.

ஸ்கொட்­லாந்தின் சுதந்­திர பிர­சார இயக்­கத்தை முன்­னின்று வழி­ந­டத்தும் ஸ்கொட்­லாந்து தேசிய கட்சி (எஸ்.­என்.பி) 1934ஆம் ஆண்டு ஸ்தாபிக்­கப்­பட்­ட­தாகும். அந்தக் கட்சி சமீ­பத்தில் தான் செல்­வாக்கு செலுத்­தக்­கூ­டிய அர­சியல் சக்­தி­யாக மாறி­யது.

1999ஆம் ஆண்டில் தொழிற்­கட்சி தலை­மை­யி­லான அர­சாங்கம் அதி­கா­ரப்­ப­கிர்வின் ஊடாக ஸ்கொட்­லாந்தில் நாடா­ளு­மன்­றத்தை ஸ்தாபிக்க வாய்ப்­ப­ளித்­தது உண்­மையே. ஆனால், எஸ்.­என்­.பியின் கை மேலோங்­கு­வதைத் தடுக்க பல தகி­டு­தத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

ஸ்கொட்டிஷ் நாடா­ளு­மன்­றத்­திற்­கான தேர்­தலில் எஸ்­.என்.பி அறுதிப் பெரும்­பான்மை பெற முடி­யா­த­வாறு, தொகு­தி­வாரி தேர்தல் முறை­யுடன் கூடிய தேர்தல் முறை அறி­முகம் செய்­யப்­பட்­டதை உதா­ர­ண­மாகக் கூற முடியும்.

எவ்­வா­றேனும், 2011ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட தேர்­தலில், எஸ்­.என்.பி பெரும்­பான்மை வாக்­கு­களைப் பெற்று ஆட்­சி­ய­மைத்­தது. அதன் மூலம், ஸ்கொட்­லாந்தின் சுதந்­தி­ரத்­திற்­கான அர­சியல் போராட்டம் உத்­வேகம் பெற்­றது எனலாம்.

ஸ்கொட்­லாந்தின் சுதந்­திர வேட்கை எவ்­வ­ளவு நியா­ய­மா­னது என்ற கேள்வி ஒரு­பு­ற­மி­ருக்க, அதனை இழப்­பதால் இங்­கி­லாந்­திற்கு என்ன நஷ்டம் என்ற கேள்­வியை அவ­தா­னிக்­கலாம். இதனை இரு கோணங்­களில் ஆராய வேண்டும்.

பிரிட்டன் பிர­தமர் டோனி பிளே­யரைப் பொறுத்­த­வ­ரையில், ஸ்கொட்­லாந்தின் சுதந்­திரம் என்­பது பெரும் அர­சியல் தோல்­வி­யாகும். ஐக்­கிய இராஜ்­ஜியம் ஒரே குடையின் கீழ் திகழ வேண்டும் என்­பது அவ­ரது கட்­சியின் கோட்­பா­டாகத் திகழ்­கி­றது.

அவ­ரது கன்­சர்­வேட்டிவ் கட்­சியின் உண்­மை­யான பெயர் கன்­சர்­வேட்டிவ் மற்றும் யூனியன் கட்சி என்­ப­தாகும். இங்கு யூனியன் என்­பது ஐக்­கிய இராஜ்­ஜி­யத்தில் உள்ள சகல பிராந்­தி­யங்­களும் ஒரே குடைக்குள் இருப்­பதைக் குறிக்­கி­றது.

பிரிட்­டனின் நாடா­ளு­மன்றம் என்று பார்க்­கையில், ஸ்கொட்­லாந்தின் சுதந்­திரம் எதிர்த்­த­ரப்பில் அமைந்­துள்ள தொழிற்­கட்­சிக்கு பெரும் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ளன.

இந்த நாடா­ளு­மன்­றத்தில் ஸ்கொட்­லாந்­துக்­காக ஒதுக்­கப்­பட்ட ஆச­னங்­களில் தொழிற்­கட்­சிக்கு 41 ஆச­னங்கள் உள்­ளன. கன்­சர்­வேட்டிவ் கட்சி ஒரே­யொரு ஆச­னத்­தையே கொண்­டுள்­ளது.

ஸ்கொட்­லாந்து சுதந்­திரம் பெற்று சென்று விட்டால், பிரிட்டன் நாடா­ளு­மன்­றத்தில் ஸ்கொட்­லாந்­துக்­காக ஒதுக்­கப்­பட்ட ஆச­னங்கள் நீக்­கப்­படும். அது தொழில்­கட்­சியின் வெற்றி வாய்ப்பை முற்று முழு­தாக இல்­லா­தொ­ழித்து விடும்.

தமக்­கி­டையில் கருத்து வேறு­பாடு கொண்­டி­ருந்­தாலும், தொழிற்­கட்சி தலை­வர்­களும், டோனி பிளே­யரும் ஸ்கொட்­லாந்து சென்று, உருக்கமான தொனியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதற்கு இதுவே காரணம்.

இது தவிர ஸ்கொட்­லாந்தின் சுதந்­திரம் என்­பது இங்­கி­லாந்து மக்­களின் கௌர­வத்தைப் பாதிக்கும் விட­ய­மாகும். இது பிரிட்­டனின் தன்­னம்­பிக்­கையை சீர்­குலைத்து, ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்குள் பிரிட்­டனின் எதிர்­கா­லத்தைக் கேள்­விக்­கு­றி­யாக்கி விடும்.

கருத்­துக்­க­ணிப்பின் பெறு­பே­று­களை எதிர்­வு­கூருவது கடி­ன­மா­ன­தென மேற்­கு­லக ஊட­கங்கள் அறி­வித்து வரு­கின்­றன. ஸ்கொட்­லாந்து மக்கள் ஆமென வாக்­க­ளித்­தாலோ, இல்­லை­யென வாக்­க­ளித்­தாலோ அடுத்த கட்டம் இலகுவானதாக இருக்கப் போவதில்லை.

ஆமென்று வாக்­க­ளித்தால் சுதந்­தி­ரத்தை நோக்கி நகரும் நடை­மு­றையில் பல சிக்­கல்கள் இருக்­கின்­றன. இல்­லை­யென்று வாக்­க­ளித்தால், ஸ்கொட்­லாந்­துக்கு கூடு தல் சுயாட்­சியைப் பெற வேண்­டிய சவால் உள்ளது.

வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், கருத்துக் கணிப்பின் பெறுபேறுகளின் அடிப்படையில் அத்தகைய பிரச்சினைகள் மற்றும் சவால்கள் பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் ஆராய்வோம்.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

June 2019
M T W T F S S
« May    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930

விறுவிறுப்பு தொடர்கள்

    விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதியுயர் பாதுகாப்பு வளையமாக இருந்த புதுக் குடியிருப்புப் பிரதேசம் ஆபத்துகள் நிறைந்த போர்க்களமாக மாறியிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -26)

0 comment Read Full Article
    கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!:  ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க..  (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

கடைசி நிமிடத்தில் பயந்த ‘தற்கொலை தாரி’ தணு!: ராஜிவை நெருங்கியதுமே குனிந்து, தன் இடுப்பில் இருந்த விசையை இயக்க.. (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –16)

0 comment Read Full Article
    “நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று  எதிர்பார்த்திருந்த  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து  காட்டிய  தலைவர்!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

“நல்லா உள்ளுக்கு வரவிட்டிட்டுத்தான் அடிக்கப்போறாங்கள்” என்று எதிர்பார்த்திருந்த புலம்பெயர்ந்த தமிழ் மக்கள்!!: என்னட்ட ஒன்டுமில்லை என கையை விரித்து காட்டிய தலைவர்!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -25)

1 comment Read Full Article

Latest Comments

அருமையான பதிவு பகுதி-2? [...]

" முன்னைய காலங்களைப் போலவே இத்தகைய சிறப்புத் தாக்குதல் நடவடிக்கைகள் ஒட்டுமொத்தமான இராணுவ நடவடிக்கைகளின் பின்னணிப் பலத்தைச் சிதறடிக்கும் எனக் [...]

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News