ilakkiyainfo

ilakkiyainfo

‘ஸ்டாலின் வராவிட்டால், அடுத்த சாய்ஸ் ரஜினி!’ – அறிவாலயத்தை அசைக்கும் கார்டன் சந்திப்புகள்

‘ஸ்டாலின் வராவிட்டால், அடுத்த சாய்ஸ் ரஜினி!’ – அறிவாலயத்தை அசைக்கும் கார்டன் சந்திப்புகள்
September 13
07:45 2018

ஸ்டாலின் நம் கையைவிட்டுச் சென்றுவிட்டால், அது இந்திய அளவில் மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துவிடும்.

தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்குள் முட்டல், மோதல்கள் நீடித்து வருகின்றன. ‘நம்முடைய கூட்டணியை ஸ்டாலின் கைகழுவிவிட்டால், அகில இந்திய அளவில் நமக்குப் பின்னடைவாக மாறிவிடும்.

அப்படி அவர் வராவிட்டால், நம்முடைய கூட்டணிக்குள் ரஜினி வர வேண்டும்’ என விவாதித்துள்ளனர் காங்கிரஸ் நிர்வாகிகள்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, நாடு முழுவதும் முழு கடையடைப்புப் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்தார் ராகுல்காந்தி.

இந்தப் போராட்டத்தில் சி.பி.எம், சி.பி.ஐ, விடுதலைச் சிறுத்தைகள் என எதிர்க்கட்சிகள் பலவும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தின. இந்தப் போராட்டத்தில் தி.மு.கவின் பங்களிப்பு பிரதானமாக இல்லை.

இந்த வருத்தத்தை மேடையிலேயே வெளிக்காட்டினர் காங்கிரஸ் நிர்வாகிகள். ‘நாடு முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்’ என தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசியதையடுத்து, கூட்டணிக்கான உற்சாகத்தில் இருந்த காங்கிரஸ் பிரமுகர்களுக்கு, கடந்த சில நாள்களாக நடந்து வரும் சம்பவங்கள் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளன.

‘தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் திருநாவுக்கரசர் நீடிக்கும் வரையில், தி.மு.க தரப்பில் இருந்த பாசிட்டிவ்வான பதில்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. ரஜினி, தினகரனுடன் நல்ல நட்புடன் இருக்கிறார் திருநாவுக்கரசர்.

இதனை அறிவாலய நிர்வாகிகள் ரசிக்கவில்லை. அதனால்தான் முழு அடைப்புப் போராட்டத்துக்குக் கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளை அனுப்பி வைத்தார் ஸ்டாலின்’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில்.

“திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்ற கருத்தை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் முன்வைக்கின்றனர்.

ஆனால், ‘நாடாளுமன்றத் தேர்தல் வரையில் திருநாவுக்கரசர் மாற்றப்பட மாட்டார்’ என அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் உறுதியாக கூறிவிட்டனர்.

இதையே தலைமையின் முடிவாகப் பார்க்கிறார் திருநாவுக்கரசர். இதைத் தெரிந்து கொண்டுதான், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தரப்பினர் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளனர்” என விவரித்த தமிழக காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்,

congress600_17509  'ஸ்டாலின் வராவிட்டால், அடுத்த சாய்ஸ் ரஜினி!' - அறிவாலயத்தை அசைக்கும் கார்டன் சந்திப்புகள் congress600 17509

“கடந்த 10-ம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதில் எம்.எல்.ஏ வசந்தகுமார் தரப்பினர் கொஞ்சம் அப்செட். இதற்குப் பிரதான காரணம் ஒன்றும் இருக்கிறது. பூலித்தேவன் விழாவில் பங்கேற்கச் சென்ற வசந்தகுமாரிடம், தென்மாவட்ட சமுதாய பிரமுகர்கள் பேசியுள்ளனர்.

அப்போது, ‘தினகரனைக் காங்கிரஸ் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிடுங்கள். அவர் தனிமைப்பட்டுவிடக் கூடாது’ எனப் பேசியுள்ளனர்.

இது தொடர்பாக பேட்டி கொடுக்கும்போதும், ‘தலைமை விரும்பினால் தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

இதனை மேலிட பொறுப்பாளர்களிடம் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் சில தினங்களுக்கு முன்பு, “காங்கிரஸ் தி.மு.க.வை விட்டு வெளியேறினால், தான் இணையத் தயார்” என்று தினகரனும் வெளிப்படையாக பேசியிருந்தார்.

இது அவரின் தற்போதைய மனநிலையை வெளிச்சம்போட்டு காட்டுகிறது. இதற்குப் பதில் அளித்த முக்கிய நிர்வாகி ஒருவர், ‘தினகரனை ஒரு சக்தியாக கருதிக் கொண்டு, ஸ்டாலினை சங்கடப்படுத்த வேண்டாம்.

ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதை வைத்து நாம் முடிவு செய்ய வேண்டாம். காங்கிரஸ் அணியில் ஒருவராக வேண்டுமானாலும் அவரைப் பார்க்கலாம். மிகப் பெரிய சக்தியாக அவரைப் பார்க்க முடியாது.

அரசியல் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை’ என்பதை அடிநாதமாக வைத்துக் கொண்டு பா.ஜ.க அரசியல் செய்து வருகிறது.

ஸ்டாலின் நம் கையைவிட்டுச் சென்றுவிட்டால், இந்திய அளவில் மிகப் பெரிய பின்னடைவைக் கொடுத்துவிடும்.

அப்படி அவர் ஒருவேளை வராமல் போய்விட்டால், நமது சாய்ஸாக ரஜினி இருக்க வேண்டும்.

மாற்று வேண்டும் என நினைத்தால், அது ரஜினியாகத்தான் இருக்க வேண்டும். ஏற்கெனவே, ‘பா.ஜ.கவோடு போய்விடுவோம்’ என்று சொல்லித்தான் தி.மு.க பிரமுகர்கள், நம்மை மிரட்டுகின்றனர்.

நம்முடைய கூட்டணியைவிட்டு ஸ்டாலின் வெளியேறக் கூடாது என்பதில் உறுதியாக இருப்போம்.

இதையும் மீறி அவர் வராவிட்டால், ரஜினி நம் பக்கம் வர வேண்டும். அகில இந்திய அளவில் அட்டவணை சமூக மக்கள் மத்தியில் ரஜினிக்கு செல்வாக்கு உண்டு. மகாராஷ்ட்ராவிலும் அவருக்குக் கொஞ்சம் செல்வாக்கு உண்டு.

இதை உணர்ந்துதான் திருமாவளவனும் ரஜினியை சந்தித்துப் பேசினார். திருநாவுக்கரசரும் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார்.

இந்த அரசியல் காய் நகர்த்தல்களை அறிந்துதான், காங்கிரஸ் கட்சியின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வேலைகளில் தி.மு.க தலைமை ஈடுபடுகிறது” என்றார் விரிவாக.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    மயானத்தில்  அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் :   தமது  பிள்ளைகளை ஒவ்வொரு  பெட்டியாக  ஓடியோடித் தேடி   அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

மயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள்! : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)

0 comment Read Full Article
    பத்மநாபாவைக்  கொன்ற  சிவராசா   “வரதராஜப் பெருமாளை”  கொலை செய்ய  மீண்டும்  இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

பத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! -9)

0 comment Read Full Article
    இந்திய சிறையிலிருந்து தப்பி  வந்தவரான  கிருபன்  என்பவரை  பயன்படுத்தி  தலைவரை  கொல்ல முயற்சித்த மாத்தையா!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

இந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)

0 comment Read Full Article

Latest Comments

புலி வாழ பிடித்தவர் போல் இவரின் பின்னணி தெரிகின்றது, நல்ல பிள்ளையாக நடப்பர் என [...]

வாழ்த்துகள் , மற்றைய சவூதி பெண்களும் இவரை பின் பற்றி , காட்டு மிராண்டி கொலை [...]

அருமை மேலும் தகவல் இருந்தால் பதிவிdavum [...]

இன்றும் அணு சோதனை நடத்தி உள்ளார் , ஒரு மயிரையும் அமெரிக்கா புடுங்க முடியாது, , ஹிட்லருடன் இவரை [...]

UNP ஒரு ரவுடி கட்சி , 1983ல் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரத்தை நடத்தி பல [...]

இலங்கை பத்திரிகைகள்

English News