ilakkiyainfo

ilakkiyainfo

ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா!!

ஸ்பெயினை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது ரஷ்யா!!
July 01
20:19 2018

உலகப்கோப்பை கால்பந்து போட்டில் இன்று நடந்த நாக் அவுட் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகள் மோதின. இதில் பெனால்டி சுற்றில் 3-4 என்ற கோல் கணக்கில் ரஷ்யா வெற்றி பெற்றது.

ஆட்டம் தொடங்கிய 10வது நிமிடத்தில், ரஷ்ய வீரர் அடித்த ஓன் சைடு கோலினால், ஸ்பெயின் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 41வது நிமிடத்தில் ரஷ்ய வீரர் ஆர்டம் ட்சுபா கோல் அடித்து 1-1 என்ற கோலில் ஆட்டத்தை சமன்படுத்தினார்.

அதன் பிறகு இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியாததால், கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இப்போட்டியில் ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரமே, 2018 உலகக்கோப்பையில் ஒதுக்கப்பட்ட முதல் கூடுதல் நேரமாகும்.

ஆனால், இரண்டு முறை ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரம் முடிந்தபிறகும் இரு அணிகளாலும் கோல் போடமுடியவில்லை.

இதனால் போட்டியின் முடிவு பெனால்டி முடிவை நோக்கிச் சென்றது. பெனால்டியின் போது முதலில் ஸ்பெயின் கோல் அடித்தது. இதற்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து 2-3 என முன்னிலை பெற்றது. . மீண்டும் ஸ்பெயின் ஒரு கோல் அடித்த நிலையில், இறுதியில் ரஷ்யா மீண்டும் ஒரு கோல் அடித்து 3-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது

இதன் மூலம் ரஷ்யா காலிறுதிக்குள் நுழைந்தது. ஸ்பெயின் அணி 2010 கால்பந்து உலகப்கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

இவர் ஒரு பிற்போக்குவாதி , கோழை அதனால் தான் இப்படி சொல்கின்றார் , எவருக்கும் எந்த [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]

’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]

உண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]

இலங்கை பத்திரிகைகள்

English News