ilakkiyainfo

ilakkiyainfo

ஸ்ரீதேவியின் மரணம் கொலை!

ஸ்ரீதேவியின் மரணம் கொலை!
July 10
13:39 2019

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, அது கொலை என்று கேரள பிரதி பொலிஸ் மாஅதிபர் ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளதை அடுத்து பலரும் தற்போது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்கள்.

நடிகை ஸ்ரீதேவி தனது கணவரின் சகோதரி மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள துபாய் சென்றிருந்த இடத்தில் ஹோட்டலில் உள்ள குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

மதுபோதையில் அவர் நீரில் மூழ்கி இறந்து விட்டதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால் உயரமான உருவமுள்ள ஸ்ரீதேவி நீச்சல் தொட்டி நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பே இல்லை, இது திட்டமிட்ட கொலை என்று அப்பொழுது வதந்தி பரவியது.

கேரள பொலிஸ் துறை ஆலோசகராகவும், தடயவியல் மருத்துவ பேராசிரியராகவும் இருந்த டொக்டர் உமாதாதன் குறித்து கேரள டி.ஜி.பி ரிஷிராஜ் மலையாள நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

b518rishiraj-singh-ips-1562662023_09072019_SPP_CMY-300x225  ஸ்ரீதேவியின் மரணம் கொலை! b518rishiraj singh ips 1562662023 09072019 SPP CMYகேரள டி.ஐ.ஜி ரிஷிராஜ் சிங்

அந்தக் கட்டுரையில் அவர் கூறியிருப்பதாவது,

“என் நண்பரும், தடயவியல் நிபுணருமான டொக்டர் உமாதாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கருத்துத் தெரிவித்தார்.

ஸ்ரீதேவி நீரில் மூழ்கி இறக்கவில்லை, அது கொலையாகத்தான் இருக்கும் என்றார் அவர்.

ஸ்ரீதேவியின் மரணம் எப்படி நிகழ்ந்திருக்கும் என்று நான் கேட்டதற்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.

ஒரு அடி ஆழ நீரில் யாரும் மூழ்கி இறக்க முடியாது. எவ்வளவுதான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியாது.

யாராவது அவரின் கால்களை பிடித்துக் கொண்டு தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார் உமாதாதன்”. இவ்வாறு ரிஷிராஜ் சிங் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

கேரள பொலிஸ் பல வழக்குகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியவர் உமாதாதன்.

அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

டொக்டர் உமாதாதன் கடந்த புதன்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.

இந்நிலையில் அவரைப் பற்றி எழுதிய கட்டுரையில் ரிஷிராஜ் சிங் ஸ்ரீதேவி பற்றியும் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீதேவி இறந்தது குறித்து அவரின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் முன்பு தெரிவித்ததாவது,

“இரவு உணவுக்கு வெளியே போகலாம் என்று ஸ்ரீதேவியிடம் கூறினேன். நான் குளித்து விட்டு வருகிறேன் என்று கூறி குளியலறைக்கு சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.

இதையடுத்து நான் குளியலறைக் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது அவர் நீரில் மூழ்கி இறந்து கிடந்தார்”

இவ்வாறுதான் அம்மரணம் குறித்து போனி கபூர் கூறியிருந்தார்.

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

October 2019
M T W T F S S
« Sep    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Latest Comments

இது தான் யாழ்ப்பாணிகள், வன்னி காட்டு மிராண்டிகளின் கலாச்சாரம் , முன்பு மறைமுகமாக செய்தார்கள் , [...]

மிகப் பெரும் விஞ்ஞானிகள் , இவர்கள் நாசாவின் பணியாற்ற வேண்டியவர்கள் , ஆறறிவு அல்ல 12 அறிவு உடையவர்கள் , [...]

துப்பாக்கி உனக்கு ஏன் உன் சொந்த சகாக்களை கொல்லவா ? 1988 - 1996 வரை நீ செய்த [...]

50 வருடங்களுக்கு பின் தான் இந்தியாவுக்கு முடிந்திருக்கு. சீன எப்பவோ சாதித்து விட்ட்து. [...]

My vote for Mr. Gotabhaya Rajapaksa, he can only save our country. [...]

இலங்கை பத்திரிகைகள்

English News