ilakkiyainfo

ilakkiyainfo

ஹஜ் புனித யாத்திரையில் 15 லட்சம் பேர் திரண்டனர் – அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்பு!! : (நேரடி ஒளிபரப்பு -வீடியோ)

ஹஜ் புனித யாத்திரையில் 15 லட்சம் பேர் திரண்டனர் – அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்பு!! : (நேரடி ஒளிபரப்பு -வீடியோ)
September 11
12:05 2016

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா உள்ளது. ஹஜ் புனித யாத்திரையில் 15 லட்சம் பேர் திரண்டனர். இதில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

 

ஹஜ் புனித யாத்திரையில் 15 லட்சம் பேர் திரண்டனர். இதில் அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.

சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனித நகரான மெக்கா உள்ளது. அங்கு ஆண்டு தோறும் 5 நாட்கள் ஹஜ் புனித யாத்திரை நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை நேற்று தொடங்கியது. அதைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் இருந்து மெக்கா நகரில் இஸ்லாமியர்கள் குவிந்துள்ளனர்.

ஹஜ் யாத்திரையில் பங்கேற்க உலகம் முழுவதும் இருந்து 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரள்கின்றனர். இவர்களுடன் சவுதி அரேபியாவை சேர்ந்த 1  லட்சம் பேரும் பங்கேற்கிறார்கள். எனவே இந்த ஆண்டு மொத்தம் 15 லட்சம் பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏறக்குறைய 1.36 லட்சம் பேர் ஹஜ் யாத்திரை மேற்கொண்டுள்ளனர். ஏராளமானவர்கள் குவிந்துள்ளதால் புனித நகரங்களான மெக்கா, மதீனாவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சமீப காலமாக ஹஜ் யாத்திரையில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டும் உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இளைஞர்கள் யாத்திரையில் பங்கேற்றுள்ளனர்.
201609111348117319_haj-pilgrimage-over-1-lakh-indians-participating-this-year_secvpf-gif  ஹஜ் புனித யாத்திரையில் 15 லட்சம் பேர் திரண்டனர் - அதிக அளவில் இளைஞர்கள் பங்கேற்பு!! : (நேரடி ஒளிபரப்பு -வீடியோ) 201609111348117319 Haj pilgrimage over 1 lakh Indians participating this year SECVPF
புனித யாத்திரையில் பங்கேற்றுள்ள பயணிகள் வசதிக்காக மெக்கா, மதீனா நகரங்களில் 18 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகின்றன. யாத்திரை செல்பவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் தங்கி சிகிச்சை பெற 158 இடங்களில் தங்கும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் 25 ஆஸ்பத்திரிகளில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன. இவை தவிர 100 ஆம்புலன்ஸ்கள் மருத்துவ வசதியுடன் கூடிய 51 பஸ்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.

அவசரகால உதவிக்காக 17 ஆயிரம் ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். யாத்திரையின் இறுதி நாளன்று யாத்திரீகர்களுக்கு வினியோகிக்க 15 லட்சம் கன்டெய்னர்களில் மெக்காவின் ‘ஜம் ஜம்’ புனித நீர் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையை முன்னிட்டு சவுதி அரேபியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானவர்கள் பலியானார்கள். அவர்களில் பலர் ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள்.

சவுதி அரேபிய அரசு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய ஈரான் இந்த ஆண்டு தனது நாட்டை சேர்ந்த யாரையும் மெக்காவுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Latest Comments

சீமான் கூறுவதில் தவறில்லையே. வேறு மாநிலத்தில் ஒரு தமிழன் அரசியல் எய்ய முடியுமா? நடிப்பவர்கள் எல்லாம் ஆட்சி செய்ய முடியாது. [...]

Your comment..nice movie [...]

இவங்களை ஸ்ரீலங்கா ஜெயிலுக்கு அனுப்பி லாடங் கட்டவேண்டும் ஐரோப்பாவில் வெளியில் இருப்பதைவிட ஜெயிலில் சொகுசு வாழ்க்கை. [...]

சொந்த மக்களுக்கு கக்குஸ் கட்டி கொடுக்க துப்பில்லை. சிறிலங்காவுக்கு ஹோஸ்பிடல் கட்டி கொடுத்து இருக்கிறான் காவி மோடி. [...]

This Vickneswaran was a judge and in true a big criminal , he had raped [...]

இலங்கை பத்திரிகைகள்

English News