ilakkiyainfo

ilakkiyainfo

ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா?

ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா?
May 21
15:20 2018

பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் சார்லஸ் – டயானா தம்பதியின் இளைய மகனான பிரின்ஸ் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் திருமணம், மே 19-ம் தேதி அரச குடும்பத்துக்குச் சொந்தமான `தி வின்சர் கேஸில்’ எனும் கோட்டையில் உள்ள St.George’s Chapel ஆலயத்தினுள் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்வுக்குச் சுமார் 250 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. வழக்கமான திருமண நிகழ்வைவிட அரச குடும்பத்தின் நிகழ்வுக்கு ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கின்றன.

அந்த வகையில், முதலில் Duke and Duchess of Sussex என்று ஹாரி மற்றும் மார்க்கிலுக்கு மகுடம் சூட்டப்பட்டு, பிறகு தங்களின் உறுதிமொழியை ஏற்று, மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

உலகமே வியந்துப் பார்த்த பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்கில் திருமணத்தில் சில சுவாரஸ்ய நிகழ்வுகள் இதோ…

மார்கிலின் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், மணப்பெண்ணை சபைக்கு அழைத்து வருவது யார் என்ற குழப்பம் இருந்தது. இறுதியில், ஹாரியின் தந்தை சார்லஸ், மார்கிலின் தந்தை ஸ்தானத்தில் இருந்து அனைத்துச் சம்பிரதாயங்களையும் முன்னின்று நடத்தினார்.

Mw3_13422  ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா? Mw3 13422

தேர்ந்தெடுக்கப்பட்ட 600 சிறப்பு விருந்தினர்கள் உள்பட 2,500 பேர் மட்டுமே இந்தத் திருமண நிகழ்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில், பிரபல பாடகி Mel B, Spice Girls ராக் பேண்ட், கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் மற்றும் அவரின் மனைவி விக்டோரியா பெக்கம், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா போன்ற பிரபலங்களும் அடங்குவர்.

Mw5_13584  ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா? Mw5 13584

திருமண நிகழ்வு முடிந்த பிறகு விருந்தினர் அனைவருக்கும், `Standing Reception’ என்றழைக்கப்படும் ராயல் விருந்து கொடுக்கப்பட்டது. இதற்கான செலவு 6,80,000 டாலர்.

மேகன் மார்கிலின் திருமண உடை, வெள்ளைப் பட்டுத்துணியால் அந்நாட்டு பிரபலங்களின் ஃபேவரிட் டிசைனர் வெயிட் கெல்லர் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. போட் நெக், A-லைன் வடிவம் என அதிக வேலைப்பாடுகள் ஏதுமின்றி, எளிமையான ஆடையை உடுத்தியிருந்தார் மேகன்.

Mw4_13396  ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா? Mw4 13396

மேகன், அடிப்படையில் ஒரு சமூக ஆர்வலர். சமூகப் பிரச்னைகள் குறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்வது அவரது வழக்கம். இத்தனைநாள் சமூக ஆர்வலராக இருந்த மேகன் இனி அரச குடும்பத்தின் மருமகள்.

அரச குடும்ப விதிமுறைகளை அவரும் கடைப்பிடிக்க வேண்டும். மேகன் பின்பற்ற வேண்டியவை குறித்து ஒரு லிஸ்ட்டே இருக்கிறது. `ஆட்டோகிராஃப்’ போடுவது, சமூக வலைதளங்களை உபயோகிப்பது, முட்டிக்கும் மேல் ஆடைகள் உடுத்துவது, சாக்ஸ் இல்லாமல் ஷூ போடுவது, செல்லப் பிராணிகள் வளர்ப்பது, தனியாக அல்லது நண்பர்களுடன் பயணம் செல்வது, வெளியில் சாப்பிடுவது, அரசியல் சம்பந்தமாகப் பேசுவது போன்றவற்றுக்கு `தடா’. எல்லாவற்றையும்விட ராணி எலிசபெத் சாப்பிட்ட பிறகுதான் மற்றவர்கள் சாப்பிட வேண்டும். மேகனும் இனி அப்படித்தான்.

உறவினர்களின் வருகை, நண்பர்களின் கேலி, குழந்தைகளின் விளையாட்டு, மேளதாள முழக்கத்தில் புதியதாய் முளைக்கும் காதல், தாலி கட்டப்போகும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் மணமக்கள், கடமையைச் செய்துவிட்டோம் என்ற பெற்றோர்களின் நிம்மதி… இப்படி பல உணர்வுகள் ஒன்றுசேர்வதுதான் `திருமணம்’.

பொதுவாகவே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நிறைந்திருக்கும் திருமண நிகழ்வுகளுக்கு, பள்ளிகளில் உள்ளதுபோல் `ரூல்ஸ்’ இருந்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் எனப் பதிலளிக்கும்விதமாக இருந்தது பிரிட்டிஷ் அரச குடும்ப திருமண நிகழ்வு.

ரூல் 1:

தொலைபேசி உபயோகிப்பதற்கு அனுமதியில்லை. இந்தக் காலத்தில் மொபைல் போன் இல்லாத ஆள்களே இல்லை. ஆனால், இவர்களின் திருமண நிகழ்வுக்குச் சென்றால், கட்டாயமாக மொபைல் போன் உபயோகிக்கக் கூடாது. எந்தவிதமான சமூக வலைதளங்களை உபயோகிக்கவும், புகைப்படங்கள் எடுப்பதற்கும் இங்கு அனுமதியில்லை.

ரூல் 2:

தங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர வேண்டும். 800 இருக்கைகள் கொண்டிருக்கும் ஆலயத்தின் வலதுபுறம் மணமகன் உறவினருக்கானது, இடதுபுறம் மணமகள் உறவினருக்கானது. அதிலும் முன்வரிசையில் இருக்கும் இருக்கைகள் மணமக்களின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்களுக்கு மட்டுமே.

ரூல் 3:

ராணி எலிசபெத் வருகையின்போது அனைவரும் தலை தாழ்த்தி வணங்க வேண்டும். திருமணத்தின்போது பெரும்பாலானவர்கள் புதியவர்களாக இருப்பார்கள்.

எனவே, அறிமுகத்தின்போது ராணி எலிசபெத் முன் தலை தாழ்த்தி வணங்கி, `யுவர் மெஜெஸ்டி’ என்று கூறி அழைக்க வேண்டும். நன்கு பரிச்சயமான பிறகு `Mam’ என்று அழைக்கலாம். எல்லாம் ஒரு மரியாதைதான்!

ரூல் 4:

ராணியைப் பார்த்ததும் ஆவேசப்பட்டோ, ஆசைப்பட்டோ ஓடிப்போய் அவரிடம் பேசிவிடக் கூடாது. அனைவரையும் ராணியே சந்தித்துப் பேசுவார். அதுவரைக்கும் அமைதிகாப்பது அவசியம். பொறுமை ரொம்ப முக்கியம்!

Mw6_13234  ஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா? Mw6 13234

ரூல் 5 : குறிக்கப்பட்ட திருமண நிகழ்வு நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே அனைவரும் அவரவர் இடத்துக்கு வர வேண்டும். ராணி எலிசபெத்தின் வருகைக்கு முன்னதாகவே அனைவரும் அமர்ந்திருக்க வேண்டும். ராணி வந்த பிறகு மணமக்கள் வருவார்கள். இவங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்!

ரூல் 6 : பிரிட்டிஷ் அரச குடும்ப திருமண நிகழ்வு, வார நாளில்தான் நடைபெறும்; வார இறுதியில் நடைபெறாது. ஆனால், இந்தக் கோட்பாட்டை முதன்முறையாக உடைத்தவர்கள் பிரின்ஸ் ஹாரி மற்றும் மேகன் மார்கில்.

 

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

Your email address will not be published.
Required fields are marked *

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Contact Us

news@ilakkiyainfo.com

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

May 2019
M T W T F S S
« Apr    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

விறுவிறுப்பு தொடர்கள்

    புலிகளின்  இராணுவ  பலம் வெளிப்பார்வைக்குப்  பிரமிப்பூட்டுவதாக  அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப்  போயிருந்தது!!  (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

புலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது!! (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)

0 comment Read Full Article
    தலைவரின் ஒப்புதலுடன்   “மாவிலாற்றை  பூட்டி கடைசிக்கட்ட  போரை தொடங்கி  வைத்த  தளபதி சொர்ணம்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

தலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)

0 comment Read Full Article
    மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!!  (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களியுங்கள்!! “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்!!: அண்ணன் கூறினார்!! (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)

0 comment Read Full Article

Latest Comments

இப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]

கஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்? [...]

பிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]

24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் "ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]

இவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]

இலங்கை பத்திரிகைகள்

English News